முஸ்லிம் அமைப்புகளின் கூட்டறிக்கை !!2018.03.07
நாட்டில் கடந்த சில தினங்களாக உருவாகியுள்ள நெருக்கடி நிலைமைகள்
குறித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று (2018.03.07) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில் அனைத்து முஸ்லிம் அமைப்புகளும்; ஒன்று கூடி கலந்தாலோசனை நடாத்தியதுடன் இந்த நெருக்கடி நிலமைகளை கையாள அனைத்து முஸ்லிம் அமைப்புக்களும் ஒன்றிணைந்த கூட்டு இணைப்புக் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டு இணைப்பு குழுவின் நெறிப்படுத்தலில் நெருக்கடி நிலைமைகளை கையாள சகல நடவடிக்கைகளும் எடுக்க முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் நாட்டின் உயர் மட்ட தலமைகளான ஜனாதிபதி, பிரதமர், முஸ்லிம் அமைச்சர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் முதலானவர்களுடன் உடனடியாக தொடர்புகளை ஏற்படுத்தி உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் இவ்வனைத்து முஸ்லிம் அமைப்புகளின் கூட்டத்தில் பின்வரும்  தீர்மானங்கள் ஏக மனதாக எடுக்கப்பட்டன.

1.​இந்நெருக்கடியான கட்டத்தில் முஸ்லிம் சமூகம் மனம் தளராமலும் பீதி அடையாமலும் நிலைமைகளை அவதானித்து எமது தற்பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்ட நிலையில் தூர நோக்குடன் நடந்து கொள்ள வேண்டும்.

2.​எவ்வகையான நெருக்கடியான சூழ்நிலைகள் உருவாகிய போதிலும் முஸ்லிம்கள் அல்லாஹ்வுடனான தொடர்பை பலமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தவக்குல், துஆ, இஸ்திஃபார், நோன்பு, பொறுமை போன்ற விடயங்களை கடைபிடிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

3.​இந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் முஸ்லிம்களது உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்க அரசாங்கம் கடமைப்பட்டிருப்பதனால் அரசாங்கத்தை இது விடயமாக ஜனநாயக ரீதியிலும், நாம் அனைவரும் முடியுமான அனைத்து முறைகளிலும் வலியுறுத்த வேண்டும் எனவும் இது விடயமாக சட்டத்தை மதித்து மிகுந்த அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

4.​அவசர கால சட்டம் நடைமுறையில் இருப்பதால் அது தொடர்பான சட்ட வரயறைகளை பேணி நடக்க வேண்டும் என முஸ்லிம் சமூகம் அறிவுறுத்தப்படுகிறது.

5.​நாட்டில் பதற்ற சூழ்நிலை நிலவுவதால் கிடைக்கும் தகவல்கள் அனைத்தையும் பகிர்ந்து விடாமல் முதலில் அவற்றை ஊர்ஜிதம் செய்து கொள்ளுமாறும் பகிர்ந்து கொள்வதால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளை கவனத்திற் கொண்டு செயற்படுமாறும் வேண்டப்படுகின்றனர்.

6.​எந்த வன்முறைகள் இடம் பெறுகின்ற சந்தர்ப்பத்திலும்; அந்தந்த பிராந்தியங்களின் தலைமைகளுக்கு கட்டுப்பட்டு ஒத்துழைத்து செயற்படுமாறும் அனைவரும் வேண்டப்படுகின்றனர்.

7.​இந்நாட்டு மக்களில் மிகப்பெரும் பான்மையானோர் சமய நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் விரும்புபவர்கள் என்ற உண்மையை புரிந்துஇ கடந்த காலங்களில் போலவே தொடர்ந்தும் அவர்களுடன் நல்லிணக்கத்துடனும் சமாதானமாகவும் வாழ வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது.

ஹஸ்புனல்லாஹு வனிஃமல் வகீல்
அல்லாஹ்வே நமக்கு போதுமானவன் அவனே எமக்கு சிறந்த பாதுகாவலன்.


1. ACJU- All Ceylon Jamiyyathul Ulama
2. NSC - National Shoora Council   
3. MCSL – Muslim Council of Sri Lanka 
4. Quadiriyathun Nabaviyyah Thareeqa
5. CDMF – Colombo District Masjid Federation
6. Jamate Islami
7. Jamathus Salama
8. UTJ – United thawheed Jamath
9. ARC- Advocacy and Reconciliation Council
10. ISRC – Islamic Relief Committee 
11. YMMA – Young Men’s Muslim Association
12. AMYS – Association of Muslim Youth of Sri Lanka
13. DMMF
14. KDMF 
15. NIDA

முஸ்லிம் அமைப்புகளின் கூட்டறிக்கை !!  முஸ்லிம் அமைப்புகளின் கூட்டறிக்கை !! Reviewed by Madawala News on March 07, 2018 Rating: 5