ஈராக் மீது அமெரிக்க பிரிட்டன் படையெடுப்பு நடந்து 15 வருடங்கள்.


-லத்தீப் பாரூக்-
2003ம் ஆண்டு பெப்பரவரி மற்றும் மார்ச் மாத காலப்பகுதியில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜேர்ஜ்
புஷ் மற்றும் பிரிட்டிஷ் முன்னாள் பிரதம மந்திரி டொனி பிளாயர் ஆகியோர் ஈராக் மீது படையெடுப்பு நடத்தி 15 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.


 அன்றைய காலப்பகுதியில் பெரும்பாலும் அபிவிருத்தி கண்ட, பண்டைய நாகரிகமும் செல்வமும் மகிழ்ச்சியும் செழித்தோங்கிய அந்த நாடு இன்று எதற்கும் பிரயோசனமில்லாத வெற்று பூமியாக மாற்றப்பட்டுள்ளது. அதி உயர் வாழ்க்கைத் தரங்களோடு மக்கள் வாழ்ந்த ஒரு பூமி இன்று கொலைகளம் ஆக்கப்பட்டுள்ளது.


ஈராக் மேற்குலகுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய பாரிய அழிவு தரும் ஆயுதங்களை அபிவிருத்தி செய்வதாகக் கூறி தான் இந்தப் படை எடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் படையெடுப்புக்கு முன்னரே இது திட்டமிடப்பட்ட பொய் என்று நிரூபிக்கப்பட்டிருந்தும் கூட இந்த அநியாயாம் அரங்கேற்றப்பட்டது.


முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மத்திய கிழக்கை தொடர்ந்து அடக்குமுறையின் கீழ் வைத்திருக்கும் நோக்கில் அகண்ட இஸ்ரேலை உருவாக்குவதற்காக சியோனிஸ யூதர்களும், சுவிசேஷ கிறிஸ்தவர்களும், நவீன பழமைவாதிகளும் இணைந்து அமுல் செய்து வரும் நிகழ்ச்சி நிரலின் ஒரு அங்கம் தான் இது. பிற்போக்கு வாதிகளான புஷ்ஷும் பிளாயரும் உலக மக்களுக்கு பொய்க்கு மேல் பொய் உரைத்து தான் இந்த ஆக்கிரமிப்பை மேற்கொண்டனர். இந்த படை எடுப்பின் போது இரண்டு மில்லியனுக்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.


ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறினர். பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தமது சொந்த இடங்களிலேயே சிறை வைக்கப்பட்டனர்.


எல்லா வகையிலும் இது ஒரு இன ஒழிப்பு நடநடிக்கையாகவே அமைந்தது. ஆனால் இந்த இரண்டு யுத்தக் குற்றவாளிகளையும் அவர்களின் சகாக்களையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது யார்?


உண்மையில் கொல்லப்பட்ட அப்பாவி பொது மக்களின் எண்ணிக்கை என்ன என்பது எவருக்குமே தெரியாத மர்மம். சில அறிக்கைகள் இருபது லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாகக் கூறுகின்றன.

ஆனால் ஈராக்கின் அன்றைய ஒட்டு மொத்த சனத்தொகையில் ஐந்து சதவீதமானவர்கள் கொல்லப்பட்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈராக்கிய மக்களுள் பெரும்பாலானவர்களின் மரணத்துக்கு காரணமாக அமைந்தது விமானக் குண்டு வீச்சுக்களே. ஷெல் தாக்குதல்கள், துப்பாக்கிப் பிரயோகங்கள், தற்கொலைத் தாக்குதல்கள், தீ வைப்புச் சம்பவங்கள், உணவு மற்றும் அத்தியாவசிய விநியோக முறைகளில் ஏற்படுத்தப்பட்ட தடைகள், அதனால் ஏற்பட்ட வறுமை நிலை, நோய்கள், தொற்று நோய்கள்,

போஷாக்கின்மை என இதர பல காரணங்களும் இதற்கு பங்களிப்புச் செய்துள்ளன. வீதிகள், பாலங்கள், ஆஸ்பத்திரிகள், கல்விக் கூடங்கள் கழிவு நீர் முறைகள், நீர்ப்பாசனம், கால்வாய்கள் என எல்லாமே தகர்க்கப்பட்டன. உலகில் இதைவிட மோசமான இடங்கள் வேறு எங்கும் இல்லை என்று உதாரணம் கூறும் அளவுக்கு அந்த நாடு சின்னாபின்னப் படுத்தப்பட்டது.


காட்டுமிராண்டித் தனம் இங்கே கட்டவிழ்த்து விடப்பட்டது. இது பற்றி எரிக் மர்கோலிஸ் என்ற பத்தி எழுத்தாளர் குறிப்பிடுகையில் இன்றைய உலகில் நீதியே கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கில் இடம்பெற்ற பல மோதல்கள் பற்றி பல்வேறு விடயங்களை எழுதுவதில் புகழ் பெற்ற எரிக் மர்கோலிஸ் தனது கட்டுரை ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் படுகொலைகளைப் புரிந்து அழிவுகளை ஏற்படுத்தியவர்கள் இன்று வீரர்களாக கருதப்படுகின்றார்கள்.


மனித குலத்துக்கு இழப்புக்களையும் இடர்களையும் ஏற்படுத்தியவர்கள் இன்று மதிக்கப் படுகின்றார்கள். இவர்களை படையினர் என்றும் அழைக்கின்றார்கள். இந்தப் பிரபஞ்சத்தில் அழிவை ஏற்படுத்தியவர்களை செயல்முறை ரீதியில் நாம் வணங்கவும் செய்கின்றோம். எல்லோரும் ஏன் இவர்களை இந்தளவு உச்சத்தில் வைத்துள்ளனர். இவர்கள் உண்மையில் தமக்கு கொல்லுங்கள் என்று தமது எஜமானர்களால் இடப்பட்ட ஆணையை நிறைவேற்றும் இலக்கோடு துணிச்சலாகச் சென்றவர்கள்.


அந்த முயற்சியில் உயிரையும் கை கால்களை இழந்தவர்களும் இருக்கின்றனர். இத்தகைய கொலைகாரர்கள் மீது தான் நாமும் அன்பு வைத்துள்ளோம். அவர்கள் உண்மையில் எமது பெயரில் நாம் தலைவர்களாக கருதிக் கொண்டிருக்கும் பித்தர்களின் உத்தரவின் பேரில் கொலைகளைப் புரிந்தவர்கள் என்று மர்கோலிஸ் வர்ணிக்கின்றார்.


ஈராக் சூறையாடப்பட்டது. யுத்த செய்திகளைச் சேகரிக்கச் சென்ற நான் இதை நேரடியாகப் பார்த்தேன். 23 முதல் 25 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்த தேசத்தில் மூன்றில் ஒரு பங்கினர் ஏற்கனவே பக்தாத் அரசுக்கு எதிராக நிரந்தர கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தவர்கள்.


அமெரிக்க விமானப் படையின் குண்டுகளாலும் ஏவுகணைகளாலும் இவர்கள் சிதறடிக்கப்பட்டனர். 1990 முதல் 1991 வரையான காலப்பகுதியில் முதல் தடவையாகவும் 2003ல் இரண்டாவது தடவையாகவும் அந்த நாடு நாசமாக்கப்பட்டது. ஆஸபத்திரிகள், பாடசாலைகள், உணவு உற்பத்தி தொழிற்சாலைகள், பூச்சிக் கொல்லிகளைத் தயாரித்து வந்த இரசாயன நிலையங்கள், பாலங்கள், தொலைத்தொடர்பு மையங்கள் என எல்லாமே சிதறடிக்கப்பட்டன. சுறுக்கமாகக் கூறுவதாயின் ஒரு நவீன நாட்டின் எல்லா வளங்களும் அழிக்கப்பட்டன.


இதில் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய விடயம் எதுவென்றால் அமெரிக்க விமானப் படை குண்டு வீச்சால் ஈராக்கின் நீர் விநியோக முறை கழிவு வெளியேற்றல் பொறிமுறைகள என்பன இலக்கு வைத்து தாக்கப்பட்டமைதான்.

இதனால் வாந்தி பேதி உற்பட நீரை மையமாகக் கொண்ட பயங்கர தொற்று நோய்கள் வேகமாகப் பரவத் தொடங்கின.


இந்த நோய்களினால் பிரதானமாகப் பாதிக்கப்பட்ட பிரிவாக சிறுவர்கள் காணப்பட்டனர். நீர் மாசடந்தமை காரணமாக மட்டும் 550000 சிறுவர்கள் மரணம் அடைந்ததாக ஐக்கிய நாடுகள் அறிக்கைகள் ஊர்ஜிதம் செய்துள்ளன என்று அவர் தொடர்ந்து விளக்கி உள்ளார். அவர் அந்தக் கட்டுரையில் மேலும் தகவல் தருகையில்


இதுபற்றி அமெரிக்காவின் முன்னாள் ராஜாங்கச் செயலாளர் மெடலின் ஆல்பிரைட் பிற்காலத்தில் மிகவும் பொறுப்பற்ற முறையில் இவ்வாறு பதில் அளித்திருந்தார். ஈராக்கில் இடம்பெற்ற மரணங்கள் என்பது அவர்கள் செலுத்த வேண்டிய விலைகளைத் தான் செலுத்தி உள்ளார்கள். இருந்தாலும் அவை யுத்தக் குற்றங்கள் என்று கூறினார்.


2003ல் குவைத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த தனது படையினரை ஈராக்கை ஆக்கிரமிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி புஷ் உத்தரவிட்டார். ஈராக் ஜனாதிபதி சதாம் ஹுஸைனை பதவி கவிழ்ப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காத நிலையிலேயே இந்த படை எடுப்புக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவர்கள் குற்றம் சாட்டியதைப் போல் சதாமிடம் உயிரியல் ஆயுதங்களோ அல்லது ஒரு அணு ஆயுதமோ இருந்திருந்தால் சவூதியிலும் குவைத்திலும் குவித்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்க படையினரின் நிலை பரிதாபகரமானதாக மாறியிருக்கும்.


ஈராக்கிடம் இவ்வாறான பாரிய ஆயுதங்கள் எதுவும் இல்லை என்று துணிச்சலாகக் கூறிய என்போன்ற ஊடகவியலாளர்கள் பலர் ஓரம் கட்டப்பட்டனர். அல்லது தொழில்களில் இருந்து தூக்கி எறியப்பட்டனர். என்னை ஒரே அடியாக வேலையில் இருந்து நீக்கிவிடுமாறு ஊNN க்கு வெள்ளை மாளிகையில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் நான் அவர்களுடைய கறுப்புப் பட்டியலில் இடம்பிடித்தேன்.

அரசாங்கத்தின் யுத்த மேளத்துக்கு ஏற்றாற் போல் ஆடிய அனைத்து விபசார ஊடகவியலாளர்களுக்கும் பதவி உயர்வுகளும் சம்பள அதிகரிப்புக்களும் வழங்கப்பட்டன. இங்கு தான் புதிய சோவியத் ஊடகம் பிறந்தது.


அரபு உலகின் மிகவும் அபிவிருத்தி அடைந்த நாடுகளுள் ஒன்றாக இருந்த ஈராக் அமெரிக்க குண்டு வீச்சின் காரணமாக வெற்று நிலமாக்கப்பட்டது. இந்த யுத்தம் தொடங்கப்பட்டதும் தெடர்ந்து நடத்தப்பட்டதும் மிகவும் தவறான ஒரு விடயம் என்பது இன்று உலக அரங்கில் பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் ஈராக்கை அதன் பழைய நிலைக்கு கொண்டு வரும் வகையில் அதன் அழிவுகளை மீண்டும் கட்டிக் கொடுப்பது யார்?


கடந்த வாரம் பக்தாத்தில் வளைகுடா அரபிகளால் ஈராக்கிற்கான நிதி உதவித் திட்டம் ஒன்று அறிவிக்ப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் தொகையானது ஏற்படுத்தப்பட்ட இழப்புக்களோடு ஒப்பிடுகையில் ஒரு சிறு துளி மட்டுமே. இந்த உதவித் திட்டம் கூட ஈராக்கை ஈரானுக்கு எதிரான ஒரு கூட்டணியில் இணைத்துக் கொள்ளும் நோக்கில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஈராக் மீது இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்களுக்கு எதிராக சரியான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமானால் இரண்டு யுத்தங்களிலும் அங்கு ஏற்படுத்தப்பட்ட பௌதிக ரீதியான உற்கட்டமைப்பு அழிவுகளுக்காக மட்டும் அமெரிக்கா குறைந்த பட்சம் 100 பில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலுத்த வேண்டியிருக்கும். அங்கு ஏற்படுத்தப்பட்ட மனித உயிரிழப்புக்களுக்கான, அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டமைக்கான நட்டஈடுகள் ஒரு பறம் இருக்கட்டும்.


அந்த வகையில் 1980 முதல் 1988 வரையான காலப்பகுதியில் ஈராக்கை தூண்டி ஈரான் மீது போர் தொடுத்தமைக்காக ஈரானுக்கும் அமெரிக்காவிடம் நட்டஈடு கோரும் உரிமை உள்ளது. இந்த யுத்தத்தில் சுமார் பத்துலட்சம் ஈரானிய மக்கள் கொல்லப்பட்டனர் என்று மர்கோலிஸ் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.


இந்தக் கட்டுரை பற்றி ஒரு வாசகர் தனது கருத்தை தெரிவிக்கையி;ல் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவுக்கு அமெரிக்க அரசாங்கம் கொடூரங்களைப் புரிந்துள்ளது. அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவுக்கு எந்த வகையிலும் சிறிதளவேனும் தீங்கிழைக்காத அப்பாவி ஈராக் மக்களுக்கு எதிராக மூர்க்கத்தனமான மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்துள்ளது. ஈராக்கை ஒட்டு மொத்தமாக ஒரு வெற்றுப் பூமியாக மாற்றியுள்ளது. அவர்களின் செழிப்பான நாகரிகம் தகர்க்கப்பட்டுள்ளது. சொந்த ஊர்களுக்குள்ளேயே மக்கள் ஒட்டு மொத்தமாகக் கொன்று குவிக்பப்பட்டுள்ளனர்.


ஆனால் இன்று வரை இந்தக் குற்றங்களுக்கு காரணமான எவரும் சட்டத்தின் முன்னாள் நிறுத்தப்படவில்லை. தண்டிக்கப்படவும் இல்லை. ஆனால் இதுதான் உண்மை என்ற நிலை எந்த நாளும் நீடிக்கப் போவதும் இல்லை. 'இறைவனை எவரும் ஏளனம் செய்ய முடியாது. மனிதன் எதை விதைத்தானோ அதையே அறுவடை செய்ய வேண்டியிருக்கும்' என்ற வார்த்தைகளை மறந்து விடக் கூடாது.


'அரேப் வொய்ஸைஸ்' இன் ஆசிரியரும், வாஷிங்டனை மையமாகக் கொண்டு செயற்படும அமெரிக்க அரபு சமூகங்களின் கொள்கை ஆய்வு மையமாகச் செயற்படும்; அரபு அமெரிக்க நிலையத்தின் (யுயுஐ) ஸ்தாபகரும் தலைவருமான கலாநிதி ஜேம்ஸ் ஜே சொக்பி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தின் தாக்கத்தை முழுமையாக உணர்ந்து கொள்ள நாம் பல இளைஞர்களையும் யுவதிகளையும் தொடர்பு கொள்ள வேண்டி இருந்தது. இவர்கள் யுத்தம் முடிந்த பின்னரும் யுத்தத்தின் தாக்கங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்கள். இவர்களுள் பெரும்பாலானவர்கள் போதைக்கு அடிமையான நிலையிலும் வீடற்ற நிலையிலும் உள்ளனர்.



இன்னும் பலர் தற்கொலை செய்துள்ளனர். கணிப்பீடுகளின் படி சராசரியாக ஒரே இரவில் நாற்பதாயிரம் பேர் வீடற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அண்மைக் காலங்களில் இவர்கள் மத்தியில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை தினசரி 22 என்ற ரீதியில் அதிகரித்துள்ளது. இரண்டு யுத்தங்களிலும் கொல்லப்பட்டவர்கள் போக உயிர் தப்பியவர்கள் கூட இப்போது தாமாக உயிரை மாய்த்து வருகின்றனர் என்பதையே இந்த நிலைமை தெளிவுபடுத்துகின்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் திணிக்கப்பட்ட யுத்தங்கள் மீதான நேரடி செலவினம் கிட்டத்தட்ட இரண்டு டிரில்லியன் டொலர்களாக உள்ளது. அந்த மக்களுக்கு எற்படுத்தப்பட்ட சுகாதாரக் குறைபாடுகள் மற்றும் அங்கவீனம், யுத்தத்தில் ஈடுபட்டு அவயவங்களை இழந்த படை வீரர்களுக்கான கொடுப்பனவு என்பவற்றுக்காக இன்னமும் பல டிரில்லியன் டொலர்கள் தேவைப்படுகின்றன.


வெல்ல முடியாமல் போன இந்த இரண்டு யுத்தங்கள் காரணமாகவும் அமெரிக்க இராணுவத்தின் கட்டமைப்பு ஆற்றலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கிளர்ச்சிக் குழுக்களை தொடர்ந்து கட்டுப்படுத்த முடியாமல் போன அவர்களின் கையாலாகத் தனமும் வெளிப்பட்டுள்ளது. இது அமெரிக்க இராணுவத்தின் மனோ வலிமையை பெரிதும் பாதித்துள்ளது. அது மட்டும் அல்ல உலகின் மிகவும் சக்தி மிக்கதாகவும், செலவு கூடியதாகவும் கருதப்படும் அமெரிக்க இராணுவத்தின் வரையறைகள் என்ன என்பதையும் அவர்களுக்கு உணர்த்தியுள்ளது.


இந்த யுத்தம் ஈராக்கிய மக்கள் மீது திணிக்கப்பட்டு 15 வருடங்கள் கழிந்துள்ள நிலையிலும் கூட இந்தக் கொடிய வேண்டத்தகாத யுத்தத்தால் ஏற்படுத்தப்படட விளைவுகளை இன்றும் அந்த மக்கள் அனுபவித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். சிதைவடைந்த ஈராக், துணிச்சலான ஈரான், யுத்தம் சூழ்ந்த மத்திய கிழக்கு, இன்னமும் யுத்த வெறி அடங்காத அமெரிக்கா என பல்வேறு பிராந்திய சக்திகளும் சர்வதேச சக்திகளும் பயங்கரமான மோதல்களில் ஈடுபட்டுள்ள ஒரு அமைதி இழந்த பிராந்தியமாகத் தான் இன்று இந்தப் பகுதி காணப்படுகின்றது.


இந்த யுத்தத்தை இந்தப் பிராந்தியத்தில் திணித்த சக்திகளோடு இன்று உலகில் மிக முக்கிய எண்ணெய் கூட்டுத்தாபனங்கள் இணைந்துள்ளன. ஈராக்கில் உள்ள எண்ணெய் வளங்களில் அகழ்வுகளையும் உற்பத்திகளையும் மேற்கொள்வதற்காக உலக முதலீட்டாளர்களுக்கு கண்கவர் விளம்பரங்கள் மூலம் அழைப்புக்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.


இதற்கான ஒப்பந்தத்தை பிரிட்டனின் பிரபல எண்ணெய வள நிறுவனமான டீP 2009ல் பெற்றுக் கொண்டது. தனது புதிய அகழ்வு ஆற்றல் பற்றி அந்தக் கம்பனி இப்போது டுவிட்டரில் பெருமையாக கருத்துக்களைப் பதிவு செய்கின்றது. ஈராக்கின் ருமைய்லா பிரதேசத்தில் உள்ள மசகு எண்ணெய் வளம் உலகின் மூன்றாவது மிகப் பெரிய எண்ணெய வளமாகும். தற்போது இங்கிருந்து தினசரி 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான மசகு எண்ணெய் அகழ்ந்து எடுக்கப்படுகின்றது. இந்தப் பணம் ஈராக்கின் வருடாந்த சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானதாகும்.


மத்திய கிழக்கில் ஏற்படுத்தப்பட்ட அழிவுகள் பற்றி பத்தி எழுத்தாளர் ஷிரீன் ஹண்டர் தனது கருத்தை இவ்வாறு பதிவு செய்துள்ளார்.


இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின் மத்திய கிழக்கு நாடுகள் தமது அரச கட்டமைப்புக்கள் மீது கூடிய கவனம் செலுத்தின. ஆனால் கடந்த இரண்டு தசாப்தங்களில் இந்தக் கட்டமைப்பு மிகப் பெரிய அளவில் நாசமாக்கப்பட்டுள்ளது.


இந்த நடவடிக்கை 2003ல் அமெரிக்கா தலைமையிலான ஈராக் யுத்தத்துடன் தொடங்கியது. அன்று முதல் இந்தப் பிராந்தியத்தில் பல வளங்களுடன் சாத்தியமான ஒரு நாடாக இருந்த ஈராக் இப்போது கிட்டத்தட்ட இல்லாமலேயே போய்விட்டது. அந்த நாடு கொந்தளிப்பாலும் சிவில் யுத்தத்தாலும் சீரழிந்து போய் விட்டது. அங்கு குர்திஷ் மக்களைப் பெருமளவில் கொண்ட பிரதேசம் கிட்டத்தட்ட சுதந்திர நாடாகி விட்டது. இந்த நாட்டை மூன்று வௌ;வேறு நாடுகளாகக் கூறு போடுவதற்கான பல யோசனைகளும் இப்போது முன்வைக்கப்பட்டுள்ளன. இனவாத மற்றும் பிரிவினைவாத சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பிரிவினைக்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.


ஈராக் மீது யுத்தத்தை திணித்து யுத்தக் குற்றம் புரிந்த மேற்குலகத் தலைவர்கள் சட்டத்தின் முன்னாள் நிறுத்தப்பட வேண்டியவர்கள். ஆனால் இன்னமும்; அவர்கள் சுதந்திரமாக நடமாடிக் கொண்டு இருக்கின்றனர். இப்போது சிரியாவிலும், யெமனிலும் சோமாலியாவின் ஒரு பகுதியிலும் அதேபோன்றதொரு நிலைமை உருவாக்கப்பட்டு வருகின்றது. ஈராக்கைப் போலவே பிழையான புலனாய்வுத் தகவல்களின் விளைவாகத் தான் இந்த அழிவுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா?

ஈராக் மீது அமெரிக்க பிரிட்டன் படையெடுப்பு நடந்து 15 வருடங்கள். ஈராக் மீது அமெரிக்க பிரிட்டன் படையெடுப்பு நடந்து 15 வருடங்கள். Reviewed by Madawala News on March 04, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.