மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்க ஈஸ்வரர் ஆலயத்தில் ஜனாதிபதி வழிபாடுமட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்களை வழங்கும் நிகழ்வு நேற்று (03) பிற்பகல் மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம விகாரைக்குச் சென்றார்.

அங்கு ஜனாதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரரைச் சந்தித்து அவரது சுகதுக்கங்களை கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்க ஈஸ்வரர் கோயிலுக்கு சென்ற ஜனாதிபதி அங்கு இடம்பெற்ற வழிபாடுகளில் ஈடுபட்டார்.


கோயிலுக்கு அருகாமையிலுள்ள மாமாங்க குளத்தை பார்வையிட்ட ஜனாதிபதி அவர்கள் அதன் புனர்நிர்மாணப் பணிகளை துரிதமாக ஆரம்பிக்குமாறு ஆளுநரிடம் தெரிவித்தார்.


அதன் பின்னர் ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்ற ஜனாதிபதி அவ் வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நாட்டினார்.

மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்க ஈஸ்வரர் ஆலயத்தில் ஜனாதிபதி வழிபாடு  மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்க ஈஸ்வரர் ஆலயத்தில் ஜனாதிபதி வழிபாடு Reviewed by Madawala News on March 03, 2018 Rating: 5