பொறாமை, குரோதம், வர்மம், பேராசை போன்ற துற்குணங்கள் காரணமாகவே நாட்டில் சகல மோதல்களும் இடம்பெறுகின்றன,


-ஜே.எம்.ஹபீஸ்-

புத்தபிராண் மும்முறைகள் விஜயம் செய்த புன்னிய இலங்கைப் பூமியில் இனங்களை அடிப்படையாக வைத்து
அடித்தும் தாக்கியும்  கொலை செய்து கொள்வது கவலை அளிப்பதாக ஆதிவாசிகளது தலைவன் ஊருவரிகே வன்னியலெத்தோ தெரிவித்தார்.(12.3.2108)

துற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினை மற்றும் இன மோதல் தொடர்பாக அவர் விடுத்து வேண்டுகோளில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-

மேற்படி சகல மோதல்களுக்கும் அடிப்படையாக அமைந்துள்ள காரணங்களாக பொறாமை, குரோதம், வர்மம், பேராசை, மற்றும் அதீத ஆசை என்பவற்றைக் கருத முடியும் என்றும் தெரிவித்தார். சமயங்கள் மேற்படி துற்குனங்களில் இருந்து விடுபடும் படி கூறிய போதும் அனேகர் மேற்படி துற் குனங்களை தம்மகத்தே வைத்துக் கொண்டுன்ளதையே காண முடிகிறது.

இனம், சமயம், மற்றும் அரசியல் கட்சி என்ற அடிப்படையில் பிளவு பட்டு தாக்கிக்கொள்ளும் மனிதர்கள் சிந்திக்க வேண்டும். சகல தரப்பினரது உடலிலும் ஓடுவது சிவப்பு நிறக் குருதி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.  சிங்கள, முஸ்லிம், தமிழ் என்று குருதிப் பிரிவுகளை பிரித்தெடுக்க முடியாது. 

ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டு இருப்பதை விட அரச கட்சிகளும் எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து பேச்சு வாரத்தையின் அடிப்படையில் நடவடிக்கைகளை முன் எடத்து பிரச்சினைகளைத் தீர்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
பொறாமை, குரோதம், வர்மம், பேராசை போன்ற துற்குணங்கள் காரணமாகவே நாட்டில் சகல மோதல்களும் இடம்பெறுகின்றன, பொறாமை, குரோதம், வர்மம், பேராசை போன்ற துற்குணங்கள் காரணமாகவே நாட்டில் சகல மோதல்களும் இடம்பெறுகின்றன, Reviewed by Madawala News on March 12, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.