இலங்கையை அதிர வைத்துள்ள நிழல் உலககுழுவினருக்கிடையே மோதல்கள் ஒரு பார்வை.


இந்த வருடத்தின் இது வரையான காலப்பகுதியில் நிழல் உலககுழுவினருக்கிடையே
இடம்பெற்ற மோதல்களில்  8 பேர்  உயிரிழந்துள்ளனர்.

நேற்றைய தினம் மாத்திரம் ஆமர் வீதி மற்றும் அத்துருகிரிய பிரதேசங்களில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவங்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதோடு உயிரிழந்தவர்களில் ஒருவர் பாதாள உலக குழுவை சேர்ந்தவர் என்பது விசேட அம்சமாகும்.

அத்துருகிரிய கல்சாவ வீதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு ஆமர்வீதியில் இடம்பெற்ற சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் ஒருவர் காயமடைந்தார்.

அத்துருகிரியவில் மரணித்தவர் வாழைத்தோட்ட பகுதியில் முண்டமின்றி மீட்கப்பட்ட தலைக்குரிய நபருக்கு மிகவும் நெருக்கமானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் பின்னணியில் மாகந்துர மாதுஸ் இன் உதவியாளர்கள் செயற்பட்டுள்ளனர் என காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும், இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நான்கு காவல் துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, ஆமர்வீதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவமானது நிழல் உலக குழுவினருக்கிடையில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்களின் பிரதிபலனாகும் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

சட்டவிரோத போதை பொருள் குற்றம் தொடர்பில் 11 வருடங்களாக சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவித்த தெமட்டகொடை பிரதேசத்தினை சேர்ந்த அந்தோணிராஜ் என்ற 42 வயதான நபரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

தனது மனைவியுடன் காரில்  பயணித்த போது அவர்கள் மீது நேற்று முற்பகல் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதோடு, சம்பவத்தில் குறித்த நபர் பாரிய காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

எனினும் காயமடைந்த அவரது மனைவி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை குண்டு தாக்குதலினால் உயிரிழந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவிற்கு ஆமர்வீதியில் அமைக்கப்பட்டுள்ள உருவச்சிலையிலிருந்து சுமார் 150 மீற்றர் தொலைவிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையை அதிர வைத்துள்ள நிழல் உலககுழுவினருக்கிடையே மோதல்கள் ஒரு பார்வை. இலங்கையை அதிர வைத்துள்ள நிழல் உலககுழுவினருக்கிடையே  மோதல்கள் ஒரு பார்வை. Reviewed by Madawala News on March 20, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.