ஐ.தே.க பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு கோடிக்­க­ணக்­கி­லான பணப்­பொதி..


பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் ஆச­னத்தை தக்­க­வைத்து கொள்­வ­தற்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு
கோடிக்­க­ணக்­கி­லான பணப்­பொதி வழங்­கு­வ­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. இதன்­படி இன்று (நேற்று) கூட கிங்ஸ் பேரி ஹோட்­டலில் வைத்து ஐக்­கிய தேசியக் கட்சி உறுப்­பினர் ஒருவர் கோடிக் கணக்­கி­லான பணப்­பொ­தி­யொன்றை பெற்றார். இவை அனைத்தும் மத்­திய வங்­கியில் இருந்து மோசடி செய்­யப்­பட்ட பண­மாகும் என கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்ச சபையில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை தீவி­ரப்­பொ­றுப்பு முகாமை சட்­ட­மூ­லத்தின் இரண்டாம் மதிப்­பீடு மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

மத்­திய வங்­கியில் மோசடி செய்து விட்டு தற்­போது அவ்­வா­றான மோச­டிக்கு சாத­கத்தை ஏற்­ப­டுத்தும் நோக்­கத்­து­டனே தீவிர பொறுப்பு முகாமை சட்­டத்தை அர­சாங்கம் கொண்டு வந்­துள்­ளது. தற்­போது மத்­திய வங்கி மோச­டிக்கு கார­ண­மான முன்னாள் ஆளுநர் அர்­ஜூன மகேந்­திரன் தற்­போது சிங்­கப்­பூரில் பாது­காப்­பாக உள்ளார்.

சிங்­கப்பூர் நாட்­டுக்கு சர்­வ­தேச பொலி­ஸினால் உள்­நு­ழைய முடி­யாது. இந்­நி­லையில் பிடி­யாணை பிறப்­பித்தும் எந்­த­வொரு பிர­யோ­ச­னமும் கிடை­யாது. இந்­நி­லையில் அர்­ஜூன மகேந்­திரன் தற்­போது சிங்­கப்­பூரில் பாது­காப்­பாக உள்ளார். அவரின் ஊடாக வந்­ததே குறித்த சட்­டமூல­மாகும்.

மத்­திய வங்கி மோசடி போன்­ற­வை­களின் கார­ண­மா­கவே ஐக்­கிய தேசியக் கட்சி வாக்­கு­ வங்கி 29 சத­வீதம் வரை குறைந்தது. இந்த கட்சி இவ்­வா­றான வீழ்ச்­சியை சந்­தித்­தது இல்லை. இதன்­கா­ர­ண­மா­கதான் தற்­போது காலி, கட்­டு­நா­யக்க, நீர்­கொ­ழும்பு ஆகிய மாந­கர சபை­களில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் பொது­ஜன முன்­ன­ணி­ யுடன் இணைந்து ஆட்­சியை கைப்­பற்­றி­யுள்­ளனர். இது நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ ணையின் எதி­ரொ­லி­யாகும். அதன்­பி­ர­காரம் தற்­போதே பிர­தமர் ஆசனம் பறி போய் விட்­டது.

அத்­துடன் இன்று (நேற்று) காலை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சபா­பீ­டத்தில் அங்கும் இங்கும் திரிந்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுடன் சக­ஜ­மாக பேசிக்­கொண்­டி­ருந்தார். எனவே குறு­கிய காலத்­திற்­கா­வது ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­ன­ருக்கு அந்த வாய்ப்­பினை நாம் ஏற்­ப­டுத்­திக்­கொ­டுத்­துள்ளோம். எனினும் எதிர்­வரும் நான்காம் திக­திக்கு பின்னர் அவ்­வா­றான நிலைமை ஏற்­ப­டாது.

மேலும் பிர­தமர் ஆச­னத்தில் இருந்து எழுந்து அங்கும் இங்கும் திரிந்த வண்ணம் இருந்தார். தற்­போது அந்த ஆசனம் தனக்­கு­ரி­ய­தல்ல என்­ப­தனை அவரே உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளார். எனினும் அந்த ஆச­னத்தை தக்­க­வைப்­ப­தற்கு பாரா­ளு­மன்ற உறுப்­ பி­னர்­க­ளுக்கு கோடிக்­க­ணக்­கி­லான பணப்­பொதி வழங்கும் காலம் வந்­துள்­ளது. இதன் பிரகாரம் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு கோடிக்கணக்கில் பணம் கொட்டும் காலமாகும். இதன்படி இன்று (நேற்று) கூட கிங்ஸ் பேரி ஹோட்டலில் வைத்து

ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் கோடிக் கணக்கிலான பணப்பொதி யொன்றை பெற்றார். இவை அனைத்தும் மத்திய வங்கியில் இருந்து மோசடி செய் யப்பட்ட பணமாகும் என்றார்.
ஐ.தே.க பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு கோடிக்­க­ணக்­கி­லான பணப்­பொதி.. ஐ.தே.க  பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு கோடிக்­க­ணக்­கி­லான பணப்­பொதி.. Reviewed by Madawala News on March 24, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.