கண்டி முஸ்லிம்களுக்காக கருணை பொங்கிய கல்முனை சட்டத்தரணி “சிவரஞ்சித் நடராஜா”


கடும்போக்கு வாதிகளின் இனவாத செயற்பாடுகளால் பாதிக்கப்பட்ட கண்டி மாவட்ட முஸ்லிம்களுக்காக
கிழக்கு மண்ணிலிருந்து நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்ட செய்தி ஒன்றை நாம் பதிவிட்டிருந்தோம்.

அதனை பார்த்து விட்டு கல்முனை சட்டத்தரணி ஒருவர் மெசெஞ்சர் ஊடாக எம்மை தொடர்பு கொண்டு,


தானும் ஒரு பங்களிப்பை வழங்க வேண்டுமென்றும் அதனை யாரிடம் வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.


அதற்கிணங்க, நிவாரண சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஏறாவூர் சகோதரர்களின் தொடர்பை நாம் அவருக்கு ஏற்படுத்தி கொடுத்தோம்.
கருணை உள்ளம் கொண்ட சட்டத்தரணி சிவரஞ்சித் நடராஜா அவர்கள் உடனடியாக வங்கி சென்று ரூபா பத்தாயிரம் வைப்பிலிட்டு அதன் பற்று சீட்டின் பிரதியையும் எமக்கு அனுப்பியிருந்தார்.


நீதிமன்ற பணிகளுக்கு மத்தியிலும் இத்தகைய பணிக்காக கால,நேரம் ஒதுக்கி உதவி புரிந்த இந்த சகோதரரின் உயர்ந்த பண்புக்காக முழுநாட்டு மக்கள் சார்பாகவும் இதய பூர்வமான நன்றிகளை நாம் தெரிவித்துக் கொள்கொன்றோம்.

-அல்மசூறா . மடவளை நியூஸ்-கண்டி முஸ்லிம்களுக்காக கருணை பொங்கிய கல்முனை சட்டத்தரணி “சிவரஞ்சித் நடராஜா” கண்டி முஸ்லிம்களுக்காக  கருணை பொங்கிய கல்முனை சட்டத்தரணி “சிவரஞ்சித் நடராஜா” Reviewed by Madawala News on March 12, 2018 Rating: 5

4 comments:

  1. Sir உங்கள் மனிதநேயத்திற்றகு நன்றி புண்ணியம் கோடி கிடைக்கட்டும்

    ReplyDelete
  2. Humanity is beyond religion...Hats off sir. you are a real gentlemen.

    ReplyDelete
  3. மனிதம் வாழ்கிற உள்ளங்கள்!! நன்றிகள் அன்பரே

    ReplyDelete

adsns