இலங்கைக்கு 100 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை ஒதுக்­கி­ய இந்தியா.


(நா. தனுஜா)

இலங்­கையில் சூரிய சக்தி தொழில்­நுட்ப விருத்­திக்­கென இந்­திய அரசு 100 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை ஒதுக்­கி­யுள்­ளது. கடந்த 10 மற்றும் 11 ஆம் திக­தி­களில் இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்­தி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இந்­தி­யாவில் சர்­வ­தேச சூரிய சக்தி குழு­மத்தால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த சூரிய சக்தி மாநாட்டில் கலந்­து­கொண்­டி­ருந்தார். இதன்­போதே மேற்­படி தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

சர்­வ­தேச ரீதி­யாக 46 நாடு­களை ஒன்­றி­ணைத்த வகையில் இடம்­பெற்ற இம்­மா­நாட்டில் ஐக்­கிய நாடுகள் சபையின் பிர­தி­நி­திகள், அபி­வி­ருத்தி வங்கி தலை­வர்கள், புதுப்­பிக்­கத்­தக்க சக்­தி­வள வர்த்­தக தலை­வர்கள், பொது அமைப்­புக்­களின் தலை­வர்கள் உட்­பட பலர் கலந்­து­கொண்­டனர். இம்­மா­நாட்டின் போது சூரிய சக்தி தொழில்­நுட்ப மாநாட்டு திட்­டங்கள் அறிக்கை வடிவில் வெளி­யி­டப்­பட்­டன.

இந்­தி­யாவின் நிதி­யு­த­வியின் கீழ் 15 நாடு­க­ளுக்கு 1.4 பில்­லியன் அமெ­ரிக்க டொலர் செலவில் சூரிய சக்தி தொழில்­நுட்பம் ஸ்தாபிக்­கப்­ப­ட­வுள்­ளது. இதன்­படி இலங்­கைக்­கான சூரிய சக்தி தொழில்­நுட்­பத்­திற்­கென 100 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் ஒதுக்­கப்­பட்­டுள்­ளன. அதன்­மூலம் 200 ஆயிரம் வறிய குடும்­பங்­க­ளுக்­கான சூரிய சக்தி தொழில்­நுட்பம் மற்றும் அரச பாட­சா­லைகள், பல்­க­லைக்­க­ழ­கங்கள், வைத்தியசாலைகள் என்பவற்றிற்கான சூரிய சக்தி தொழில்நுட்பத்தை நிறுவுதல் என்பன இம்முதலீட்டின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளன.

இலங்கைக்கு 100 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை ஒதுக்­கி­ய இந்தியா. இலங்கைக்கு  100 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை ஒதுக்­கி­ய இந்தியா. Reviewed by Madawala News on March 13, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.