அப்பாவி சிரிய மக்கள் விடயத்தில் ஐ.நா. சபை தலையிட்டு தீர்வு காண கோரி, தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்பாட்டம்.



இரசாயன குண்டுகளை வீசி கொன்று குவிக்கப்படும் அப்பாவி சிரிய மக்கள் விடயத்தில் ஐ.நா. சபை தலையிட்டு தீர்வு
காண கோரி ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொழும்பு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 03.03.2018 சனிக்கிழமை காலை 11 மணியளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கையின் பல பகுதிகளில் இருந்து ஆண்கள் , பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்று பெரும் திரளான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.


SLTJ தலைவர் A.G  ஹிஷாம் தலைமை தாங்கி கோசத்துடன் ஆர்பாட்டத்தை ஆரம்பித்துவைத்தார் மேலும் தலைமை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். 

சிரியாவில் ஷியா மதத்தைச் சேர்ந்த  மனித மிருகம் பஸார் அல் அஸ்ஸாத் என்பவன்


இரசாயன குண்டுகளை வீசி குழந்தைகள், பெண்கள் என அப்பாவி பொதுமக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கப்படுவதை சுட்டிக்காட்டி சிரியா அரசை கண்டித்தும் ஜ நா சபை தீர்வு காண வேண்டும் என்று தமிழ் மற்றும சிங்கள மொழியில் கோசங்கள் எழுப்பப்பட்டது,


மேலும் தமிழ் மொழியில் SLTJ தலைவர் A.G  ஹிஷாம் அவர்களும் சிங்கள மொழியில் SLTJ பேச்சாளர் R. அப்துர்ராஸிக் அவர்களும் கண்டன உரை நிகழ்த்தினார்கள்,


உரையில் சிரியா அரசையும் அதற்கு துணை போகும் ஈரான் மற்றும் ரஷ்யா அமெரிக்கா அரசை கண்டித்தும் கள்ள மௌனம் காத்து நிற்கும் ஜ நாஉடனடியாக சிரியா முஸ்லீம்களின் கோரிக்கையான ஜனநாய முறையில் தேர்தலை வைத்து மக்களுக்கு

விருப்பமான ஆட்சி மாற்றத்தையும் நிரந்தர தீர்வினை பெற்றுக்கொடுக்க வழியுறுத்தி
இலங்கை அரசு ஜ நா விடம் கோரிக்கை வைக்க வேண்டும் என்றும் ஷிரியா ரானுவத்தை
கண்டித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்று இலங்கை அரசுக்கு ஸ்ரீலங்க தவ்ஹீத்
ஜமாஅத் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது,


மேலும் வாய் மூடி அமைதி காக்கும் அரபு நாடுகள் சிரியாவில் நடைபெறும் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்காததை கண்டிக்கப்பட்டது,

இறுதியாக SLTJ செயலாளர் M.H.M ரஸான் நன்றி உரையோடு ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.







அப்பாவி சிரிய மக்கள் விடயத்தில் ஐ.நா. சபை தலையிட்டு தீர்வு காண கோரி, தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்பாட்டம்.  அப்பாவி சிரிய மக்கள் விடயத்தில் ஐ.நா. சபை தலையிட்டு தீர்வு காண கோரி, தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்பாட்டம். Reviewed by Euro Fashions on March 03, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.