இனவாத செயற்பாடுகள் சற்று ஓய்ந்திருகின்றது. இனி நாம் என்ன செய்யவேண்டும் ?



இம்முறை இனகலவரம் எம் நாட்டின் சில உயிர்களை , பல கோடி சொத்துகளை , சர்வதேச மதிப்பை , கண்ணியத்தை கொன்றுவிட்டது.
இனவாதம் முடியவில்லை சற்று ஓய்ந்துதான் உள்ளது. அதனை உள்ளத்திலிருந்து அகற்றுவது இலகுவான காரியமல்ல . அதற்கு பலவேளைதிட்டங்கள் தேவை  . முஸ்லிம் விரோத அடிப்படை உணர்வே தூண்டப்பட்டது. ஆனால் முழுக்க அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்தப்பட்டதாக தெரிகின்றது.


எனவே இதனை தொடராது தடுக்க அடிவிழுந்தது நமக்கே என்றாலும் இந்த நாட்டு சமூகம் என்றவகையில்  நாமும் கடமைப்பட்டுள்ளோம் . எம்மை நாம் மீள்பரிசீலனை செய்து சீர்படுத்திகொள்ளல் முக்கிய விடயம். எவ்வாறான சீர்திருத்தங்களை நோக்கி நாம் இருக்கின்றோம் என்பதை பாப்போம்

1. எமது ஆன்மீக நெருக்கத்தை பலபடுத்தவேண்டும் (தொழுகை முதன்மையாக பேணப்படவேண்டும்). இறையுதவி கிடைக்க , உதவிகோர , அவசர நிலையில் போராட ,தியாகம் செய்ய இது எமக்கு உதவும் . பௌதீக உதவியை தாண்டி உதவும் ஆற்றல் இறைவனுக்கே உண்டு. எனவே இறைதொடர்பை பேணவேண்டும். அந்த ஊர் உலமாசபைகள் தொழுகை பயிற்ச்சி வகுப்புகளை ஆரம்பிக்க வேண்டும். வயது ஏழு தொடக்கம் இரண்டு மாத பயிற்ச்சி என்று தொடர்ச்சியான வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இதனை உலமா சபைகள் பொறுப்பெடுக்க வேண்டும். இந்த பகுதிதான் தனிமனித , சமூக சீர்திருத்தத்தின் அடிப்படை . இது இல்லாமல் கீழே உள்ள விடயம் பிரயோசனம் அற்றவை


2. சமூக, தேச நல உரையாடல். அந்நிய சமூகங்களுடன் அழகிய உறவாடல் அவசியம். பொதுவாழ்வில் , அரசியலில் என்று எல்லா வகையிலும் எமது சமூக நலனோடுதேசத்தின் நலன் கருதியும் எமது அரசியல் முடிவுகள் , கருத்துகள் , செயல்திட்டங்கள் அமைய வேண்டும் . எமது தனித்துவத்தை பாதுகாக்குகிறேன் என்ற சிந்தனையில் ஒரு மூடுண்ட சமூகமாக இல்லாமல் எம்மை பார்த்துக்கொள்ளவேண்டும். தமிழ் சமூகதுடன் பௌத்த சமூகத்துடன் தொடர்ச்சியான உறவாடல்கள் பகைகளை போக்கும் சக்தி கொண்டது


3. சமூக, தேச நல உரையாடல். எமது அரசியல் தலைமைகள் உள்நாட்டு அனைத்து கட்சி அரசியல் தலைவர்களுடனும் இன ஒழிப்பு , தேச முன்னேற்றம் சம்பந்தமான உரையாடல் . மார்க்க தலைமைகள், சமூக புத்தி ஜீவிகள் அந்நிய சமூக மத தலைவர்களுடன் இனவாத ஒழிப்பு , தேசத்தின் முன்னேற்றம் என்ற தலைப்புகளில் தொடர்ச்சியாக பேசுதல் பிரச்சனைகளின் போது மட்டும் பேசுவதால் பிரயோசனமில்லை . மேலும் அந்தந்த ஊர் மார்க்க தலைமைகள் , அரசியல்வாதிகள், புத்தி ஜீவிகள் அமைப்புகள்இனவாதத்தை ஒழிப்பது, மாவட்ட , ஊர் சகவாழ்வு , முன்னேற்றம் சம்பந்தமாக தொடர்ச்சியான பேச்சுவார்த்தையை முன்னெடுத்தல். ஏனெனில் அரசியல்வாதிகளும் , மத தலைவர்களும்தான் பல பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக உள்ளனர். எனவே உரையாடல்கள் இதன் வீரியத்தை குறைக்கும் என்பது உண்மை


4. சர்வதேச ரீதியான அரசியல் நகர்வுகள் காலத்தின் தேவை. இது கவனமாக கையலப்படவேண்டும் . பலநாட்டு அழுத்தங்கள் இதில் உள்வாங்கப்பட வேண்டும். சர்வதேச அமைப்புக்கள் பெரும்பாலும் முஸ்லிம்விரோத போக்குகள் கொண்டவை. இங்குள்ள முஸ்லிம் விரோத நிகழ்ச்சி நிரல் முடிந்த பின்பு அவர்கள் அங்கேயிருந்து வெறும் கண்துடைப்புகாக குரல்கொடுபார்கள். இவர்களால் உடனடியாக பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்கமுடியாது. எனவே துருக்கி போன்ற இன்னும் இலங்கை உதவிகள் பெரும் முஸ்லிம் நாடுகள் , நடுநிலையான அந்நிய நாடுகளின் உடனடி அழுத்தங்கள் உறுதிசெய்யப்படவேண்டும். அதை சர்வதேசத்திடம் கவனமாக கொண்டுசெல்ல வேண்டும். இவர்களுடன் உறவாட எப்போதும் ஒரு கூட்டம் எம்மிடம் இருக்கவேண்டும்


5. அறிவு . பிரச்சனைகளை தீர்க்கவும் பிரச்சனைகளை தோற்றுவிக்கவும் அறிவு இன்றியமையாதது. யூதர்கள் பிரச்சனைகளை தோற்றுவிக்கும் அறிவில் கை தேர்தவர்கள். நாம் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் அறிவை பெறவேண்டும் இந்த பகுதியில் முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கி உள்ளனர். அரசியல் திட்டமிடல் , சமூக திட்டமிடல்கள் என்பன பற்றிய அறிவு எம்மிடம் மிககுறைவு . உள்நாட்டு சர்வதேச அரசியல் நிகழ்வு , அதன் பின்னணி , யார் , எதற்காக , எப்படி செய்கின்றனர் . அவர்களின் நோக்கம் என்ன என அரசியல் அறிவுகள் எம்மிடம் போதாது. பாமரர்கள் ஏன் படித்த பலரும் இன்று மகிந்தவை எம் சமூகத்துக்குள் கொண்டாடுகின்றனர். எமது சமகால அரசியல் பயணம் சரியா ,எமது தலைமைகள் சரிதானா , அவர்கள் ஒட்டியிருக்கும் கட்சிகள் எமக்கு நலமிக்கதா என்ற கேள்விகள் எழவேண்டும் . அரசியல் பயண மாற்றம் என்பது காலத்தின் தேவையாக உள்ளது. தற்போதைய முஸ்லிம் காட்சிகளில் யாரால் எமக்காக அறிவோடும் ஈமானோடும் எதிர்கால சுயநல அரசியல் போக்குகள் குறைந்த அளவோடும் குரல்கொடுக்க முடியும் என்பதை உணரவேண்டும் . தேசிய காட்சிகளில் யார் எமக்கு பொருத்தம் என்ற கேள்விகள் ஏல வேண்டும். இது காலத்தின் தேவை . அல்குரான் விளக்கவுரைகளை விட மிஞ்சிய அறிவுகள் உலகில் இல்லை . சூரா பகரா விளக்கவுரை படித்தாலே அரசியல் அறிவு கிடைத்துவிடும். அவ்வாறே பிரச்சனைக்கான முன் கூட்டிய திட்டமிடல்கள் எமக்கு அவசியம். நபிகள் நாயகத்தின் வரலாறு இந்த அறிவையும் எமக்கு தந்துவிடும் . எனவே இஸ்லாமிய சகோதரர்கள் உலக இன்பங்களில் முழ்கி விடாமல் இத்தகைய காலத்தின் தேவையான அறிவுகளை பெறுவதில் தங்கள் நேரங்கலில் ஒருபகுதியை செலவிடவேண்டும்


6. எமக்காக குரல்கொடுக்கும் பெருபான்மை சமூகங்களை சம்பாதிக்க வேண்டும். நாம் UNP , SLFP என்று வரலாறு நெடுகிலும் வாக்களித்து வருகின்றோம். இருந்தாலும் ஒருசில அரசியல்வாதிகளை தவிர அக்கட்சிகள் எமக்காக குரல்கொடுபதாக இல்லை . எங்கே அப்படி குரல்கொடுத்தால் பெருன்பான்மை வாக்குகள் குறைந்துவிடுமோ என்று அஞ்சும் நிலையிலேயே அக்கட்சிகள் உண்டு . எனவே எமக்காக , நீதிக்காக குரல்கொடுக்கும், பதவியாசகள் அற்ற JVP கட்சியுடன் எமது உறவுகளை புதுபிக்க கூடாது. தற்போதைய நிலையில் அவர்களே எமக்காக தைரியமாக குரல்கொடுத்தும் அவர்களின் தொண்டர்களை அழைத்தும் போராட தயங்க மாட்டார்கள். சர்வதேசத்திடம் யாரிடமும் விலை போகாதவர்கள் என்பது என் ஆழ்ந்த கருத்து


7 ஒற்றுமை. அரசியல் தலைமைகள் வேற்றுமையிலும் ஒற்றுமைப்பட வேண்டும். சமூக, தேசிய நலன்களுக்கு என்று ஒரே ஒழுக்க கோவையில் பயணிக்க வேண்டும் . சமுக பிரச்சனைகளை வைத்து அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும். இல்லாதபோது இவர்களை முற்றாக புறக்கணித்து புதிய தலைமையின் ஊடாக எமக்குரிய பெரும்பான்மைகட்சியுடன் இணைந்து செயல்பட முன்வரவேண்டும். இதற்கு பொதுமக்களுக்கு அரசியல் அறிவு அவசியம் தேவைப்படும். இந்த நிலையில் மார்க்க , சமூக புத்திஜீவிகளுக்கு மக்கள் கட்டுப்பட வேண்டும். எப்போதுமே மக்கள் அரசியல் வாதிகளுக்கோ , கட்சிக்கோ அடிமைப்பட கூடாது. மார்க்க , சமூக புத்தி ஜீவி அமைப்புக்கள் ஊடாகவே அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்


8. வியாபாரத்தில் இஸ்லாமிய வரையறையோடு செயல்படவேண்டும், அதிக இலாபம், ஏமாற்றல் என்பன முதலில் வெற்றி வந்தாலும் இறுதியில் இழிவையே தரும். பெருமைக்காக , அலங்காரத்துக்காக , போட்டிக்காக பலிகளை கட்டுவதை னிருந்து தேவை கருதி முடித்துகொள்ளல் வேண்டும். எமது பள்ளிகளும் , சொத்துக்களுமே இலக்கு வைக்கப்பட்டன. காரணம் இவ இரண்டிலும் எமது நடவடிக்கைகள் பிழையாக இருந்தது. எனவே இவைகளில் இஸ்லாமிய வரையறைகள் கட்டாயம் பேணப்பட வேண்டும் . இவைகள் நாம் விட்ட மிகபெரும் தவறுகள்


9. வெளித்தோற்றத்தில் எம்மை அளவுக்குமீறி மத்தியகிழக்கு நாடுகளை போல் அலங்கரித்து காட்டியதாக ஒரு குற்றசாட்டு உண்டு. கலாச்சாரங்கள் மாறுபடலாம் என்று வாதத்தால் வென்றாலும் அவர்களின் உள்ளங்கில் உள்ள அச்சங்களை போக்குவது கடினம் . எனவே சில வெளித்தோற்ற விடயங்களில் நிதானத்துடனும் புத்தியுடனும் நடந்துகொள்ளல் வேண்டும் . பேரிசை மாற அலங்காரம் தேவைதானா ? முகம் மூடல் தேவைதானா . அதை செய்யும்போது நன்மை அதிகமாக இருக்கின்றதா தீமை அதிகம் ஏற்படுகின்றதா என்று சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்


10. இறுதியாக பொறுமை. இவைகள் அனைத்தையும் தாண்டி எல்லை மீறும்போது தொழுகையையும் பொறுமையையும் கொண்டே இறைவனிடம் நேரடி உதவி தேட வேண்டும். எமது உயிர் , சொத்து , மானம் இதில் கைவைகபட்டால் நாம் அல்லாஹ்வின் பாதையில் போராடத்தான் வேண்டும். இது எமக்கு விதிகபட்டுள்ளது. மற்றைய விடயங்களில் நாம் பொறுமை காக்க கடமைப்பட்டுள்ளோம்

அல்லாஹ்வே நன்கறிந்தவன்


ஆக்கம் :
Muhammad Arshad Musthaffa

Eng.M.M.M.Arshad
Assistant Network Manager
South Eastern University of Sri Lanka.
இனவாத செயற்பாடுகள் சற்று ஓய்ந்திருகின்றது. இனி நாம் என்ன செய்யவேண்டும் ? இனவாத செயற்பாடுகள்  சற்று ஓய்ந்திருகின்றது.  இனி நாம் என்ன செய்யவேண்டும் ? Reviewed by Madawala News on March 13, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.