வன்முறைகளால் பாதிக்கபட்டவர்கள் இழப்பீடுகளை பெறுவது எப்படி?


நேர்காணல் : எம்.எம்.எம். ரம்ஸின்--
திகனயில் வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதற்கட்டமாக
நஷ்டஈடுகள் வழங்கப்பட்டமை தொடர்பாக
கூறுவீர்களா?

ஆம். கண்டி திகன சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு
முதற்கட்ட நஷ்டஈடுகள் கடந்த 19 ஆம் திகதி திங்கட்கிழமை அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலை மையில் வழங்கப்பட்டன.

இம்முதற்கட்டத்தில் ஒரு இலட் சத்திற்குட்பட்ட இழப்புக்களுக்கு நஷ்டஈடுகள் வழங்கப்பட்டு வருகின் றன. 137 குடும்பங்களுக்கு சுமார் 8.56 மில்லியன் ரூபா இழப்பீடுகள் வழங் கப்பட்டன.

இதில் வர்த்தக நிலை யங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாவும் வீடுகள் பாதிக்கப் பட்டவர்களுக்கு உச்சத் தொகையாக ஐம்பதாயிரம் ரூபாவும் வழங்கப்பட்ட டுள்ளன.

 மேலும், ஒரு இலட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட இழப்புக்களுக்கு நஷ்ட ஈட்டை தற்போதைய சுற்றுநிருபங்களுக்கு எற்ப வழங்க முடியாத நிலை உள்ளது.

எனவே, பாதிக்கப்பட்டவர் களுக்கு முழு நஷ்டஈட்டை வழங் குவதற்கு விசேட அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்பிப்பதற்கான நடவடிக்கைகளை புனர்வாழ்வு அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.

இதற்குரிய ஏற்பாடுகள் பிரதமர் வழங் கிய அறிவுறுத்தலின் பிரகாரம் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

திகன சம்பவத்தில் 660 க்கும் மேற்பட்ட வீடுகளும் வர்த்தக நிலையங்களும் சேதமாக்கப்பட்டுள் ளதாக அமைச்சுக்கு அறிவிக்கப்பட் டுள்ளது.

இதில் குண்டசாலையில் அதிகளவு எண்ணிக்கையான வீடுகளுக்கும் வர்த்தக நிலையங்களுக்கும் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதில் 256 வீடுகளும் வர்த்தக நிலையங்களும் உள்ளன. ஹாரிஸ்பத்துவையில் 200க்கும் மேற்பட்ட வீடுகளும் வர்த்தக நிலையங்களும், பூஜாபிட்டியவில் 50 வீடுகளும் வர்த்தக நிலையங்களும், பாத்ததும்பறையில் 58 வீடுகளும் வர்த்தக நிலையங்களும் அக்குறணையில் 37 வீடுகளும் வர்த்தக நிலையங்களும், கங்கவட்ட கோரளையில் 4 வீடுகளும் வர்த்தக நிலையங்களும் பாதிக்கப் பட்டுள்ளன.

இதற்கான சகல விண் ணப்பங்களும் பிரதேச செயலகங்க ளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதுவரை சேதங்களை பதிவு செய்யாதவர்கள் பற்றி ?

இதுவரை சேதங்களைப் பதிவு செய்யாதவர்கள் பிரதேச செய லாளர் ஊடாக விண்ணப்பம் பெற்று விபரங்களை அமைச்சுக்கு சமர்ப்பிக்க முடியும்.


இதில் யாதேனும் தடைகள் காணப்படும் சந்தர்ப்பத்தில் புனர் வாழ்வு அதிகார சபையுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள் கின்றேன். பாதிக்கப்பட்ட மக்கள் மேலதிக விபரங்கள், ஆலோசனைகள் தேவைப்படின் எனது 077620506 என்ற தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளவும் முடியும்.


அளுத்கமை வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் தற்போது இழப்பீடுகள் வழங் கப்படுவதற்கான நடவடிக் கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அப்படியாயின் கிந்தோட்டை, அம்பாறை சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப் பீடுகள் வழங்கப்படுமா?

அளுத்கமையில் 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் திகதி
நடைபெற்ற வன்முறையில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு நஷ்டஈட்டை வழங். குகின்றோம்.

இதில் சுமார் 273 குடும் பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நஷ்டஈட்டை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதில் ஒரு இலட்சம் ரூபாவுக்குட்பட்ட நஷ் டஈடுகள் வழங்கப்படுகின்றன.


அம்பாறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடுகள் வழங்கப்ப டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது திகன சம்பவத்தின் பின்பு அனைவரது கவனமும் திகன நோக்கியதாகவே உள்ளது. இதனால் கிந்தோட்டை , அம் பாறை நஷ்டஈடுகள் மறந்துவிட்டதா? என்று நினைக்கத் தோன்றுகின்றது.

கிந்தோட்டை இழப்புக்கள் தொடர் பான விபரங்கள் காலி மாவட்ட செய்லகத்தினால் புனர்வாழ்வு அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆயினும், இது ஸ்தம்பித நிலையில் உள்ளது. இங்கு 11க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.


வன்முறைகள், கலகங்களால் சொத்துக்கள் பாதிக்கப்பட்ட ஒருவர் மேற்கொள்ள வேண் டிய நடவடிக்கைகள் பற்றிக் கூறுவீர்களா?

ஒருவரின் சொத்துக்கள் வன்முறைகள், கலகங்களால், வன்செ யல்கள் போன்றவற்றினால் பாதிக் கப்படுமாயின் அவர் அதற்குரிய நஷ்டஈட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் கட்டாயம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வது அவசியம்.
அத்துடன், கிராம சேவகருக்கும் தெரியப்படுத்த வேண்டும். இதன் மூலம் குறித்த இழப்பு சட்டரீதியாகப் உறுதிப்படுத்தப்படு கின்றது


பிரதேச செயலகத்தில் நஷ்டஈடு களைப் பெற்றுக்கொள் வது தொடர்பான சகல - படிவங்களும் உள்ளன.

எனவே, அப்படிவங் களைப் பெற்று பூர ணப்படுத்தி பிரதேச செயலகத்தில் ஒப்ப டைப்பது அவசியம். பாதிக்கப்பட்ட அல் லது அழிவுற்ற உடை மைகளின் மதிப்பீட்டுப் பணிகளுக்கு ஒத்து. ழைப்பு வழங்கி மதிப் பீட்டு விபரங்களையும் முன்வைப்பது அவசியம். குறித்த சொத்து பாதிக்கப் படும்போது அதன் உரிமை உறுதிப்ப டுத்தப்பட வேண்டும். இதில் காணி உறுதி , வாடகைக்கு வழங்கிய விபரம் என்பவற்றைக் குறிப்பிடலாம். இங்கு சிலர் அரச காணிகளில் குடியிருக்க முடியும். அப்படியானவர்கள் காணி உறுதி, காணி அனுமதிப்பத்திரம் முதலானவற்றின் மூலம் உரிமையை உறுதிப்படுத்தவது அவசியம்.


மேலும், சொத்துரிமையாளரின் வங்கி கணக்கு விபரம், தேசிய அடையாள அட்டைப் பிரதி என்ப வற்றையும் பிரதேச செயலகத்தில் ஒப்படைப்பது அவசியம். இந்த ஆவ ணங்ககள் முழுமையாக ஒப்படைக் கப்படாத சந்தர்ப்பத்தில் இழப்பீடு களைப் பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்படும்.
திகன சம்பவங்களில் பாதிக் கப்பட்டவர்களுக்கு முழுமை யாக இழப்பீடுகள் கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றதா?


ஆம். இதில் பாதிக்கப்பட் டவர்களுக்கு முழு இழப்பீடுகளும் கிடைக்கும். அரசாங்கம் முழு இழப் பீட்டையும் வழங்கத் தீர்மானித்துள் ளது. திகன சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வர்களின் இழப்பு தொடர்பான மதிப் பீடுகள் மதீப்பீட்டுத் திணைக்களத் தினால் மதிப்பிடப்பட்டு வருகின்றன.

வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடு களில் காணப்பட்ட பொருட்களின் சேதம் என்பவற்றை மதிப்பிட பிரதேச செயலக மட்டத்தில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.


இதில் பிர தேச செயலாளர், மதிப்பீட்டு திணைக் கள் உறுப்பினரொருவர், புனர்வாழ்வு | அதிகார சபை பிரதிநிதி என்போர் உள்ளடங்குவர். இக்குழுவில் நானும் ஒரு உறுப்பினர்.

இக்குழு அசையக்கூடிய பொருட்கள் (மோட்டார் வாகனங்கள் , தளபாடங்கள், இலத்திரனியல் உபகர ணங்கள்) தொடர்பான மதிப்பீட்டை மேற்கொண்டு வருகின்றது. வணக்கஸ்தலங்கள் பாதிக்கப்பட் டிருக்குமாயின் அதற்குரிய இழப்பீட்டு விண்ணப்பப் படிவம் பிரதேச செயலகங்களுக்கும் மாவட்ட செயல கங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.


இவ்விண்ணப்பப் படிவத்துடன் பள் ளிவாசல் பதிவு, பள்ளிவாசல் நிர்வாகி களின் விபரம், பள்ளிவாசல் வங்கிக் கணக்கு விபரம் , மதிப்பீட்டுத் திணைக்கள அல்லது தொழிநுட்ப அதிகாரியின் அறிக்கையையும் புனர்வாழ்வு அதிகார சபை சமர்ப் பிக்க வேண்டும். இதன் மூலம் முழு இழப்பீட்டையும் பெற்றுக்கொள்ள முடியும். இதுவரை 17 பள்ளிவாசல் களுக்குரிய மதிப்பீடுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

திகன சம்பவத்தில் பாதிக் கப்பட்டவர்கள் நஷ்டஈடுகள் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு என்ன செய்யலாம்? 


எமது புனர்வாழ்வு அதிகார சபையுடன் தொடர்பு கொண்டால் தேவையான விபரங்களை வழங். குவோம். நாம் மக்களை நேரடியாக சந்தித்து விளக்கங்களை வழங்கத் தயாராக உள்ளோம். எழுத்து மூலம் தொடர்பு கொண்டால் எழுத்து மூலம் தகவல்கள் வழங்கப்படும். எமது அமைச்சின் செயலா ளரின் ஆலோசனையின் பேரில் நடமாடும் சேவைகளை பிரதேச செயலக மட்டத்தில் நடாத்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.


இதில் கலந்து கொண்டு பொது மக்கள் தங்களுக்குத் தேவையான விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் நஷ்டஈடுகளை துரிதமாக வழங்க முடியும் என்று நம்புகின்றோம். மேலும், தற்போது புனர்வாழ்வு அதிகார சபையின் அதிகாரிகளைக கொண்ட குழுவினர் கண்டியில் பிரதேச செயலக மட்டத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் பணிகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

எதிர்வரும் திங்கட்கிழமை பாத்ததும்பறை பிரதேச செயலகத்தில் மக்களை சந்தித்து காசோலைகள் வழங்கப்படவுள்ளன. இத்தினத்தில் மக்கள் எம்மை சந்திக்க முடியும்.

இத்தகைய சம்பவங்களில் முழு நஷ்டஈட்டைப் பெற்றுக் கொள்வதில் காணப்படும் தடைகள் எவை?

முஸ்லிம்கள் பொதுவாக ஆவணங்களைப் பேணுவது குறைவு. வர்த்தக நிலையங்களுக்கு இழப்புக்களை உறுதிப்படுத்த சட்டரீதியான ஆவணங்கள் அவசியம். இதில் வருமான வரி செலுத்துகை படிவம், ஏனைய வரிகள் | தொடர்பான பற்றுச்சீட்டு, பொருட் கொள்வனவு பட்டியல்கள், அனுமதிப்பத்திரங்கள் முதலானவை இருக்க வேண்டும். இதன் மூலம் இழப்புக்களை சரியாக மதிப்பிட முடியும். இதே போல் வீடுகளிலும் சொத்துக்களை கொள்வனவு செய்த ஆவணங்களை பாதுகாத்து வைப்பது அவசியம். இது தொடர்பான தெளிவுகளை சமூகத்திற்கு வழங்க வேண்டியுள்ளது.
( விடி வெள்ளி 23/3/2018)

வன்முறைகளால் பாதிக்கபட்டவர்கள் இழப்பீடுகளை பெறுவது எப்படி? வன்முறைகளால் பாதிக்கபட்டவர்கள் இழப்பீடுகளை பெறுவது  எப்படி? Reviewed by Madawala News on March 24, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.