பால்மா விலையும் அதிகரிக்கிறது. அனுமதியும் கிடைத்தது.


பால்மா கிலோ கிராம் ஒன்றின் விலையை 80 ரூபாவினால் அதிகரிக்க வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான
குழுவின் அனுமதி கிடைத்துள்ளது.

உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரித்துச் செல்வதன் காரணமாக இலங்கையில் அதன் விலையை அதிகரிக்க வேண்டும் என பால்மாவை இறக்குமதி செய்து விநியோகிக்கும் நிறுவனங்கள், நுகர்வோர் அதிகார சபையிடம் கோரியுள்ளன.

இதற்கமைய, குறித்த கோரிக்கையை வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான குழுவிடம் நுகர்வோர் அதிகார சபை முன்வைத்துள்ளது.

இது தொடர்பில் குறித்த குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் நுகர்வோர் அதிகார சபைக்கு நேற்று கிடைத்ததாக அதன் பணிப்பாளர் டீ. ஜீவானந்த தெரிவித்தார்.

குழந்தைகள் பால்மா தவிர்த்து ஏனைய அனைத்து பால்மாக்களின் கிலோ கிராம் ஒன்றின் விலையை 80 ரூபாவினால் அதிகரிக்க வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான குழு அனுமதி வழங்கி உள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் வாரங்களில் வெளியிட முடியும் என நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனம் நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எனினும்இ வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான குழு அதற்கு அனுமதி வழங்கவில்லை என நுகர்வோர் அதிகார சபை பணிப்பாளர் டீ. ஜீவானந்த  தெரிவித்தார்.
பால்மா விலையும் அதிகரிக்கிறது. அனுமதியும் கிடைத்தது. பால்மா விலையும் அதிகரிக்கிறது. அனுமதியும்  கிடைத்தது. Reviewed by Madawala News on March 24, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.