அசாதாரண சூழ்நிலைக்கு அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையை தான், நான் செய்தேன் .


நாட்டில் தற்போது இனங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு அரசாங்கம் செய்ய வேண்டிய
கடமையை தான், நான் செய்தேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

இன்று (09) காலை கண்டிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி, சர்வ மதத்தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.


முஸ்லிம் மக்கள் தன்னிடம் வேண்டிக்கொண்டதால் தான் இந்த கலந்துரையாடலுக்கு வந்ததாகவும் ஒரு மத்தியஸ்தராகவே இங்கு செயல்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


சிங்கள மக்கள் பொறுமையாக இருப்பதை போல் முஸ்லிம் மக்களும் பொறுமையாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


எவ்வாறாயினும் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை குறித்து அரசு பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அமைதியுடனும், பொறுமையுடனும் அனைத்து மக்களும் செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அசாதாரண சூழ்நிலைக்கு அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையை தான், நான் செய்தேன் . அசாதாரண சூழ்நிலைக்கு அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையை தான், நான் செய்தேன் . Reviewed by Madawala News on March 09, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.