சிறப்பு மங்க காரணம் என்ன? மடவளை மக்கள் ஏன் சிந்திக்கக்கூடாது?


- ஜே.எம்.ஹபீஸ் -
வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி என்பன ஒரு சமூகத்தின் ஒற்றுமையின் அடிப்படையிலே
தங்கியுள்ளதாக அனுராதபுரம் மாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவர் இஸாக் றஹ்மான் தெரிவித்தார்.

மடவளை மதீனா தேசிய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டப் போட்டியில் பிரதம அதிதியாகக்க லந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


கல்லூரி அதிபர் ஏ.சீ. அப்துல் அஸீஸ் தலைமையில் இடம் பெற்ற இவ்வைபவத்தில் அவர் மேலும் தெரிவித்தாவது-

 ஒருகாலத்தில் மடவளை மதீனா மத்திய கல்லூரி பல்வேறு வளங்களையும் பெற்று நாட்டின் ஒரு பிரதான முஸ்லிம் பாடசாலையாக இருந்தது. அந்த அடிப்படையில் நானும் அக்காலத்தில் இங்கு வந்து கல்வி கற்கும் வாய்ப்புக்கிடைத்தது.


அதே நேரம் கண்டி மாவட்டம் நீண்டகாலமாக முஸ்லிம் பாராளுமன்ற அங்கத்தவர்களையும் முஸ்லிம் அமைச்சர்களையும் கொண்ட ஒரு மாவட்டமாகும். அத்துடன் கண்டியில் முஸ்லிம் சனத்தொகையோ ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.  இலங்கை அதிகூடிய முஸ்லிம்கள் வாழும் இரண்டாவது மாவட்டமாகக் கருதலாம். இப்படியான வளங்கள் பல இருந்தும் பாடசாலையில் போதிய வளர்ச்சியின்மை என்பது கவலை அளிக்கிறது.


 2015ம் ஆண்டு க.பொ.த பரீட்சையில் 37 சதவீதமே சித்தியடைந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறான பின்னடைவிற்கு மக்களிடையே ஒற்றுமை இன்மையே முக்கிய காரணமாக உள்ளது. அதிபரால் மட்டும், அல்லது ஆசிரியர்களால் மட்டும் ஒரு பாடசாலையை அபிவிருத்தி செய்திட முடியாது. பலதரப்பட்ட வர்களது தியாகம் தேவை. அதில் சமூக ஒற்றுமை என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.


அதே நேரம் அனுராதபுரம் மாவட்டத்தில் சுமார் முப்பதாயிரம் முஸ்லிமகள் கூட இல்லை. 1948ம் ஆண்டு முதல் அவர்கள் வாக்களித்த போதும் தமக்கென்ற ஒரு பிரதிநிதி வெறுங்கனவாகவே இருந்தது. ஆனால் 2015ம் ஆண்டு அவர்கள் ஓரணியில் திரண்டு எனக்கு வாக்;களித்தால் 1948ம் ஆண்டின் பின் முதன் முதலாக ஒரு முஸ்லிம் பாராளுமன்ற அங்கத்தவரைப் பெற்றனர். அதன் விளைவாக நான் சுமார் 50 கோடிக்கு மேற்பட்ட பணத்தைப் பெற்று பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய முடிந்தது. நூற்றுக் கணக்கான கிலோ மீற்றர் பாதைகள் போடப்பட்டுள்ளன.


அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத்திட்டதின் கீழ் ஒரு முஸ்லிம் பாடசாலைக்கு 26 கோடி ரூபா பெற்றுக் கொடுக்க முடிந்தது. இவ்வாறு எட்டுப் பாடசாலைகளை மேற்படி வேலைத்திட்டம் மூலம் அபிவிருத்தி செய்யமுடிந்தது.

கண்டியில் நீண்ட காலம் பல பாராளுமன்ற அங்ஙத்தவர்கள் இருந்தும் மிக்க குறுகிய காலத்தில் அனுராதபுரம் மாவட்டத்திற்கு நான் பெற்றுக் கொடுத்த சேவைக்கு சமமான ஒரு சேவையை பெற முடியாது இருப்பது ஒற்றுiமை இன்மையை எடுத்துக்காட்டுகிறது.


இன்று முஸ்லிம் கல்வி வளர்ச்சியில் குருநாகல் மாவட்த்திலுள்ள கெக்குகொல்ல மற்றும் சியம்பலாகஸ்கொட்டுவ பற்றி அதிகம் பேசப் படுகிறது. அங்கு கண்டி மாவட்டத்தைப் போன்று மனித வளமோ பௌதிக வளமோ பெரிதாக ஒன்றும் கிடையாது. ஆனால் அவர்களிடம் ஒற்றுமை என்ற ஒன்று மட்டும் உள்ளது. இதன்காரணமாக அவர்களது கல்வித் தரம் படிப்படியாக உயர்வடைந்து செல்கிறது.

இத போல் ஏனைய பகுதிகளில் உள்ளவர்களும் குறிப்பாக இந்த மடவளை மக்களும் ஏன் சிந்திக்கக்கூடாது எனக் கேட்க விரும்புகிறேன்.

கண்டி மாவட்டத்திலுள்ளவர்கள் ஏன் சிந்திக்கக் கூடாது. ஒருகாலத்தில் கம்பளை சாஹிரா, மாத்தலை சாஹிரா, என்று இன்னும் பல பாடசாலைகள் தனிச் சிறப்புடன் விளங்கிள.

இன்று அது மங்கக் காரணம் என்ன? எனவே நீங்கள் ஒற்றுமையுடன் இணைந்து பிரச்சினைகளைத் தீர்க்க முன் வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
 
சிறப்பு மங்க காரணம் என்ன? மடவளை மக்கள் ஏன் சிந்திக்கக்கூடாது? சிறப்பு மங்க காரணம் என்ன? மடவளை மக்கள் ஏன் சிந்திக்கக்கூடாது? Reviewed by Madawala News on March 04, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.