சவுதி எஜமானரால் இலங்கையருக்கு சொத்தின் பகுதி என வெளியான செய்தி... கிடைத்தது சம்பள பாக்கி மட்டுமே.


சவுதி எஜமானரின்  சொத்தின் பெறுமதியில் இலங்கையர் ஒருவருக்கு கிடைத்த பணத்தொகையின்
விபரம் வெளியாகி உள்ளது.

தான் உயிரிழந்த பின்னர் தனக்கு சொந்தமான சொத்தின் ஒரு பகுதியை, தன்னிடம் சேவை செய்த இலங்கையருக்கு வழங்க வேண்டும் என அரபு நாட்டவர் எழுதிய கடிதம் தொடர்பில் அண்மையில் செய்தி வெளியாகியிருந்தது.

இலங்கையருக்கு கிடைத்த சொத்தின் பெறுமதி சுமார்  4 லட்சம் ரூபாய் பணம் அல்லது 10,000 சவுதி ரியால் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சொத்துக்களுக்கு உரிமையாளரான சிசான் ஹமீட் லெப்பே என்ற இலங்கையர் வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு கிடைக்கவுள்ள பணம், தான் பணி செய்தமைக்காக வழங்கப்படாத ஒரு வருட சம்பளத் தொகை மட்டுமே (சொத்தின் பகுதி அல்ல)  என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொல்கஹவெல பிரதேசத்தை சேர்ந்த மொஹமட் சிசான் 1986ஆம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளார்.

சவுதியில் சாரதி பணிக்காக சென்றவர், அல் நகரத்தில் ஷேரி கிராமத்தில் ஷுகர் ஷெய்லம் ஷெமிமர் என்வரின் கீழ் சேவை செய்துள்ளார்.

அவரது வாகனத்தின் சாரதியாகவும், தோட்டதிலும், ஷுகரின் சிறிய கடையிலும் சேவை செய்துள்ளார். 1996 ஆம் ஆண்டிலிருந்து 10 வருடங்கள் மொஹமட் சிசான் சேவை செய்துள்ளார்.

அப்போதைய காலத்தில் ஷுகரின் குடும்பத்திற்கு காணப்பட்ட பண நெருக்கடி காரணமாக மொஹமட் சிசானுக்கு தொடர்ந்தும் குறைவாகவே சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இறுதியாக சம்பளம் பெறாமல் இலங்கைக்கு வந்துள்ளார்.

மொஹமட் சிசானுக்கு தொழில் வழங்கிய ஷுகர் உயிரிழந்து 6 வருடங்களாகின்றது. அவருக்கு 6 பிள்ளைகள் உள்ளனர்.

30 வயதில் சவுதி சென்ற மொஹமட் சிசானின் தற்போது வயது 65 என்பது குறிப்பிடத்தக்கது
சவுதி எஜமானரால் இலங்கையருக்கு சொத்தின் பகுதி என வெளியான செய்தி... கிடைத்தது சம்பள பாக்கி மட்டுமே. சவுதி எஜமானரால்  இலங்கையருக்கு சொத்தின் பகுதி என வெளியான செய்தி... கிடைத்தது சம்பள பாக்கி மட்டுமே. Reviewed by Madawala News on March 04, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.