அம்பாறை திகனை சம்பவங்களில் உயிர், உடைமைகளை இழந்தவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபம். சம்பவத்தின் பிண்னனியில் கடந்த அரசிசுக்கு செயற்பட்ட பாதுகாப்பு படையினரும்.



அஷ்ரப் ஏ சமத்- 
அம்பாறை திகனை சம்பவங்களில் உயிர்,  உடைமைகளை இழந்தவர்களுக்கு ஜாதிக்க கெல
உருமைய கட்சி  தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் நாடுமுழுவதிலும் சிவில் சமுகம், சகல மதங்களை பிரநித்துவம் படுத்தும்  சமாதான குழுக்களை பள்ளி கோயில் பண்சலை ஊடாக  அமைப்பதற்கு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாகவும்  அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்

இன்று(7) அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் -

கடந்த காலத்தில் விடுதலைப்புலிகள் கண்டி தலாதா மாளிகையைக் கூட தாக்கியிருந்தபோதும் கண்டி வாழ் மக்கள்  அமைதியை நிலைநாட்டினார்.

இச் சம்பவத்தில் நாட்டின் இயழ்புநிலையை சீர்குழைப்பதற்காக அந்த பிரதேசத்தில் இல்லாமால் அம்பாறை ,மட்டக்களப்பு என வேறு பிரதேசங்களில்   வந்தார்கள் அங்கு குழப்பத்தை ஏற்படுத்தனார்.இந்தக்  குழுக்கள் சட்டத்தை தமது  கையில் எடுத்துக் கொண்டு செயல்படுகின்றனர் .  

இருந்தும் மிகச் சிறந்த பாதுகாப்புப் படையினர் அம்பாறை சம்பவம் நடைபெற்று சில நாட்கள் பின்னே திகன சம்பவம் நடைபெற்றுள்ளது. 

 இதனை,பொலிசார், புலநாய்வுப் பிரிவு தமது கடமைகளை சரிவரச் செய்யவில்லை. எனவும் அவர்  குற்றம் சாட்டினார்    தவறான செய்திகளை பரப்புவதால் சமுக வலைத்தளங்களை அரசாங்கம் கட்டுப்படுத்திதுள்ளது.

இச் சம்பவங்கள் தொடர்ந்து பரவாமல்  தடுப்பதற்காகவே  ஜனாதிபதி அவசரகால சட்டத்தினை   7 நாட்களுக்கு பிரப்பித்துள்ளார்.

இச்சம்பவத்தின் பின்னனியில்  முன்னைய அரசின் நடவடிக்கைக்காக  வைத்துகொள்ளப்பட்ட முன்னாள் பாதுகாப்பு படையினரும் உள்ளனர். இவர்களையும்  பாதுகாப்பு படையினர் கைது செய்து விசாரனைக்குட்படுத்தல் வேண்டும்.அண்மையில் பண்டாரவலையில் படையில் உள்ள ஒருவர்  குண்டை வெடிக்க வைத்தவிட்டு மீண்டும் மலையக பிரதேசங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு எல்.எல். ரீ.ஈ மீண்டும் உறுப்பெற்றுவிட்டது என சித்தரிக்க முற்பட்டனர். 

அடுத்த நிமிடமே  கூட்டு எதிரணியில் உள்ள முக்கூட்டுத் தலைவர்கள் அதனை வைத்து எல்.ரீ.ரீ. மீண்டும் உறுப்பெற்றுள்ளதாக ஊடக மாநாடு வைத்து தெரிவித்தார்கள். 

1993ல் விடுதலைப்புலிகளுக்கு எதிராக முன் நின்று  அவா்களை தோற்கடிக்க  எமது  சிகல உருமைய கட்சி  தயங்காமல்  முன்நின்றது.

அவ்வப்போது முஸ்லீம் பள்ளிப் பிரச்சினையான  கிராண்பாஸ் சம்பவம் போன்ற பல பிரச்சினைகளுக்கும் எமது சிகல உருமைய கட்சி பின்வாங்காமல் முன்நின்று சமாதானத்தை நிலைநாட்டியது. எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவங்க தெரிவித்தார்
அம்பாறை திகனை சம்பவங்களில் உயிர், உடைமைகளை இழந்தவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபம். சம்பவத்தின் பிண்னனியில் கடந்த அரசிசுக்கு செயற்பட்ட பாதுகாப்பு படையினரும். அம்பாறை திகனை சம்பவங்களில் உயிர்,  உடைமைகளை இழந்தவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபம். சம்பவத்தின் பிண்னனியில் கடந்த அரசிசுக்கு செயற்பட்ட  பாதுகாப்பு படையினரும். Reviewed by Euro Fashions on March 07, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.