அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாத்ததும்பரை பட்டியல் ஆசனம் உடதலவின்னை ஜனாப் இர்ஷாதுக்கு வழங்கப்பட்டது.


கண்டியில் முதன் முதலாக தனித்து களமிறங்கிய ACMC அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 11150
க்கும் அதிகமான வாக்குகளுடன் 8 உறுப்பினர்களை தனதாக்கியது அறிந்ததே.

இந்நிலையில்  அக்கட்சி பாத்ததும்பர தொகுதியில் பெற்றக்கொண்ட மொத்த வாக்குகள் அடிப்படையில் பாத்ததும்பரை தேர்தல் தொகுதியில் இருந்து ஒருவர் பிரதேச சபைக்கு 1 உறுப்பினர் பட்டியல் ஆசனம் (போனஸ்) மூலம்  தெரிவு செய்யப்பட்டு  இருந்தார்.

இதன் அடிப்படையில் இக்கட்சி சார்பில் உடதலவின்னையில் போட்டியிட்ட ஜனாப் இர்ஷாத் அவர்கள் பாத்ததும்பரை பிரதேச சபைக்கு போனஸ் ஆசனத்தில் தெரிவு செய்யபட்டுள்ளார்.

ஆசனப் பங்கீடு முறையில்  இவர் எதிர்வரும் முதல்  இரு வருடங்களுக்கு பாத்ததும்பரை பிரதேச சபையில் உறுப்பினராக கடமையாற்றுவார் என கட்சி அறிவித்துள்ளது.

கண்டி மாவட்டத்தில் 8 சபைகளில் மட்டும் போட்டியிட்ட அக்கட்சிக்கு 5 சபைகளில்   மொத்தம் 8 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாத்ததும்பரை பட்டியல் ஆசனம் உடதலவின்னை ஜனாப் இர்ஷாதுக்கு வழங்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாத்ததும்பரை  பட்டியல் ஆசனம் உடதலவின்னை ஜனாப் இர்ஷாதுக்கு வழங்கப்பட்டது. Reviewed by Madawala News on March 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.