பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவுவோர் கவனத்திற்கு...


இனவாதத்தீயில் கறுகிப்போன எம் சமூகத்தினரது உடமைகளுடன் சேர்ந்து கேள்விக்குறியாகியுள்ளது
அன்றாட வாழ்வு மட்டுமல்ல எதிர்காலமும்தான்.

இனவாதமோ, அணர்த்தமோ எதுவென்றாலும் எம் சமுதாயம் வீரிட்டெழுந்து மதம், இனம் என்பவற்றுக்கப்பால் மனிதநேயம் கொண்டு கரம் நீட்டுவதில் எச்சமூகத்தாலும் வெல்ல முடியாதவர்கள்.

எனினும்! ஏனைய விடயங்கள் போன்றே இவ்விடயத்திலும் திட்டமிட்ட முகாமைத்துவத்தின்படி செயலாற்றுவார்களா என்றால்! இல்லை என்பதே பதிலாகும்.

பொறுப்புணர்வுடனான எமது வேண்டுதல் இதுதான். இன்றைய இன்நிலை நாளை நமக்கு வராது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.

எனவே நுனிப்புல் மேய்வதுபோல் தற்காலிக தீர்வுகளை மட்டும் முன்னெடு்காமல் பல்முனைகளிலும் சிந்தித்து புத்தி சாதுர்யமாக செயலாற்றுவதே காலத்தின் கடமையாகும் என்பதை உணர்ந்து செயலாற்றுங்கள்.

எம் சமூகத்தின் தற்காப்புக்கான பலவீனமே இத்தனை பெரிய அழிவுக்குக் காரணமாகியது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அதுவே இனவாதியின் சக்தியுமாகும்.

குறைந்தது எமக்கென்று ஒரு தனியானதோர் தீயனைப்பு ஏற்பாடாகினும் இருந்திருக்குமாயின் நிறைய இழப்புக்களை ஓரளவேனும் குறைக்கவிருந்தது. எரிய வேண்டியது எரிந்தபின்னர் தீயனைப்புப் படையினரும், நடக்க வேண்டியது நடந்த பின்னர் பாதுகாப்புப் படையினரும் ஸ்தளத்தக்கு வருவது வழமையானது என்பதை நாம் அனுபவப் பட்டிருப்பினும் அதற்கான மாற்று நடவடிக்கை குறித்து சிந்திக்கவோ செயலாற்றவோ தயாரில்லை.

இதுவே சந்தர்ப்பம். உணறுமா உம்மத்

நடந்து கொண்டிருக்கும் இனவாதம் என்பது மக்களுக்கு புதிதான விடயமாக காட்சியளிக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல.

பல்முனை சூழ்ச்சிகள் பின்னப்பட்டு பல்லாண்டுகளாக திட்டமிட்டு கட்டம் கட்டமாக நம் உம்மத் அழிக்கப்பட்டு வருகின்றது என்பதே உண்மை. அதனை பின்வருமாறு நோக்கலாம்.

முதலாவது கட்டம்

இந்நாட்டின் முஸ்லிம்கள் தனிச்சக்தியாக நாட்டுக்கம் உலகுக்கும் அறிமுகமாக காரணமாகிய மர்ஹூம் அஷ்ரப் அவர்களது மாயமான படுகொலை.

இரண்டாவது கட்டம்

இரானுவ தளபதிகளாக இருந்த பல ஆளுமைகள் மாயமான படுகொலை.

மூன்றாவது கட்டம்

முஸ்லிம்களது அரசியல் துண்டாடப்பட்டமை.

நான்கவது கட்டம்

முஸ்லிம்களது செல்வத்தின் மீதான இனவாதப் போர்வையிலான போர்.

உன்னி்ப்பாக அவதானித்துப் பாருங்கள். முஸ்லிம்களது சக்தி ஒடுக்கப் பட்டு வருவதை புரிந்து கொள்ளலாம்.

அடுத்த கட்டம் என்ன

அடுத்த கட்டம் என்னவென்று சிந்திப்பவர்கள் புரிந்து கொள்ளலாம்.

என்னை பொறுத்தவரை எமது உம்மத்தின் அவசர அவசிய தேவை தற்காப்புக்கான சாத்தியமான சிந்தனையாகும். தற்காப்பு என கூறுவதற்கும் தாக்குதல் என கூறுவதற்கும் பாரிய வித்தியாசமுள்ளது. நான் கூறுவது தற்காப்பையாகும்.

அறிவாளிக்குத்தான் அறிவுரை என்பதுபோல்! சமாதானத்தை ஏற்றுக் கொண்டோருக்குத்தான் சகவாழ்வு.

இனவாதம் என்பது சகவாழ்வின் சாவு மணியாகும். நம்நாட்டில் சகவாழ்வு சாத்தியமா என காலத்தின் யதர்த்தத்தை மனக்கண் முன்நிறுத்தி சிந்தியுங்கள்.

நிழலை நிஜமென எண்ணிப் பயனிப்போரே உணறுங்கள்.

நாம்தான் சமுதாயத்தின் தலைமை என்று கூறுவோர் இருக்கிறீர்களா? அப்படியானால் சமுதாயத்தை காக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பும் உங்களுடையதுதான் என்பதை உணறுங்கள். திட்டமிடுங்கள். சீர்படுத்துங்கள். வெள்ளம் வருமுன் அணை கட்டுங்கள்.

இதற்கு முன்னர் நான் எழுதியுள்ள கட்டுரைகளான "தயாராகுவோம் தற்காப்புக்காக" மற்றும் "உணர்ந்து கொள்வோம் உடமைகளை காப்போம்" ஆகிய கட்டுரைகளை இணைத்துப் படித்தால் இன்னும் சில தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.

அபூ ஸுமையா - மடவளை
(11/03/2018)
பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவுவோர் கவனத்திற்கு... பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவுவோர் கவனத்திற்கு... Reviewed by Madawala News on March 12, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.