சமுதாயத்துக்காக குரல் கொடுத்த ஹரீஸ் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முனயும் செயல் கண்டிக்கத்தக்க செயற்பாடாகும். ha


-பைஷல் இஸ்மாயில் -

சமூதாயத்துக்காக பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் குரல்கொடுத்துப்
போராடிய பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் செயற்பாட்டை இன்று முஸ்லிம் மக்கள் பாராட்டி வாழ்த்துகின்ற இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் அவருக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முனையும் செயற்பாடு மிகவும் கன்டிக்கத்தக்க செயற்பாடாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாலமுனை மத்திய குழுவின் பொருளாளரும், அம்பாறை மாவட்ட இளைஞர் ஒன்றியத்தின் பிரதித் தலைவருமான எஸ்.ரீ.எம்.ஹூதைப் தெரிவித்தார்.

பாலமுனை காரியாலயத்தில் இன்று காலை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பிரதிநிதிகளாக எத்தினையோ பேர் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கத்தக்கதாக, இவர் மட்டும் மிக தைரியமாக எமது சமூகத்துக்கு எதிராக நடக்கின்ற மிலெச்சத்தனமான செயற்பாடுகளை கன்டித்தும், அவ்வாறு செய்கின்றவர்களையும், இச்செயலை செய்யத் தூண்டுகின்றவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு சட்ட நடவடிக்கையினை எடுக்கவேண்டும் என்று வாய் திறந்து பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தவருக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் ஒழுக்காற்று நவடிக்கை ஒன்றினை எடுக்கவேண்டு என்று ஒரு தீர்மானத்தை கட்சியன் செயலாளர் நிஸாம் காரியப்பரினால் கொண்டு சென்றிருப்பதை எமது சமூகமும், நாங்களும் ஒருபோது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். 

கட்சியின் செயலாளரின் இந்த அநாகரிகமாக செயற்பாட்டை எல்லா முஸ்லிம் மக்களும், நாங்கள் மிக வன்மையாக கன்டிக்கின்றோம். அதை நினைத்து வெட்கப்படுகின்றோம். வேதனைப்படுகின்றோம். 

எமது முஸ்லிம் சமூகம் மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் இன்னும் இருக்கத்தக்கதாக பல விடயங்கள் இருக்கின்றபோது, இந்த ஒழுக்காற்று நடவடிக்கையின் செயற்பாட்டினால் கட்சிக்குள் இருக்கின்ற ஒட்டு மொத்த அரசியல் பிரதிநிதிகளையும் அடிமைகளாகவும், ஊமைகளாகவும் ஆக்குகின்ற செயலாகவே மக்களால் பார்க்கப்படுகின்றது.

எம்சமூகத்துக்கு அநீதி இடம்பெறுகின்ற சந்தர்ப்பங்களில் முஸ்லிம் கட்சிகளுக்குள் இருக்கின்ற தனிப்பட்ட விருப்பு வெருப்புக்களை மறந்து சமூகத்துக்காக ஒருமித்து குரல் கொடுக்கின்றவர்களாக நாம் இருப்பதா? அல்லது அவர்களுக்கு ஆதரவாக பேசுகின்றவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முனைவதா? என்ற கேள்வியை நான் கேட்க விரும்புகின்றேன்.

கட்சியில் இருக்கின்றவர்களுக்குள் இருக்கின்ற தனிப்பட்ட குரோதங்களை காட்டுகின்ற சந்தர்ப்பங்களாக இந்த சந்தர்ப்பங்களை பொறுப்பு வாய்ந்த பதவிகளில் இருக்கின்றவர்கள் பயன்படுத்த முனைகின்றனர். இவ்வாறு செய்கின்றபோது கட்சியில் இருக்கின்ற ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களை ஊமைகளாகவும், அடிமைகளாகவும் ஆக்குகின்ற செயலாகவே இது காணப்படுகின்றது. இதனை விட்டு விட்டு ஆளுமை மிக்க, மிக தைரியமாக பேசுகின்ற துடிப்புள்ள அரசியல் பிரதிநிதிகளை ஊக்கப்படுத்துவதிலும், உருவாக்குவதிலும் கட்சியும், கட்சியின் தலைமையும் மிக பொறுப்புடன் செயற்படவேண்டும். 

எனவேதான், எமது மக்கள் பிரதிநிதிகள் எச்சந்தர்ப்பத்திலும் எங்கேயும் மிக தைரியமாக எமது சமூகத்துக்கு நடக்கின்ற அல்லது தேவைப்படுகின்ற விடயங்களைப் பற்றி சுட்டிக்காட்டி பேசுகின்றவர்களாக காணப்படுவார்கள். இந்நிலைமையை உறுவாக்க கட்சியும், அதன் தலைமையும் நன்கு சிந்தித்து செயற்படவேண்டி தர்னம் தோன்றிக் காணப்படுகின்றன.

கட்சிச் செயலாளரின் இந்த நடவடிக்கை தொடர்பாக எதிர்வருகின்ற 20 ஆம் திகதி முஸ்லிம் காங்கிரஸின் பாலமுனை மத்திய குழு கூட்டத்தில் விஷேடமான கன்ட உரையாற்றி அதுதொடர்பில் முக்கியமான தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றி அந்தத் தீர்மானத்தை கட்சியின் தலைவருக்கு சமர்ப்பிக்கவுள்ளோம் என்றார்.    

சமுதாயத்துக்காக குரல் கொடுத்த ஹரீஸ் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முனயும் செயல் கண்டிக்கத்தக்க செயற்பாடாகும். ha சமுதாயத்துக்காக குரல் கொடுத்த ஹரீஸ் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முனயும் செயல் கண்டிக்கத்தக்க செயற்பாடாகும். ha Reviewed by Euro Fashions on March 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.