பேஸ்புக் ஊடாக குரோதம், இனவாதம், வெறுப்பு கருத்துக்களை பரப்பி மோதல் ஏற்படுத்துவோரின் செயற்பாடுகளை தடுக்க உள்ளோம். cc


நாட்டில் ஏற்பட்ட அமைதியற்ற நிலமையை அடுத்து சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டமை சம்பந்தமாகவும் மற்றும் எதிர்காலத்தில் நாட்டில் சமூக வலைத்தளங்களின் செயற்பாடுகள் சம்பந்தமாகவும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பேஸ்புக் நிறுவனத்தின் அதிகாரிகள் நாளை (15) நாட்டுக்கு வருகை தர உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். 

இன்று காலை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் கூறினார். 

சமூக வலைத்தளங்களை தடை செய்ததன் ஊடாக ஒரு பக்கம் அதன் சாதகமான செயற்பாடுகள் தடைப்பட்டதனால் சமூகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். 

கல்வித்துறை, தகவல் பரிமாற்றம் மற்றும் பொருளாதாரத்திற்கும் இது பாதிப்பாக அமைந்துள்ளது என்று பிரதமர் கூறினார். 

இவற்றின் அனுகூலங்களை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பது குறித்தே நாம் சிந்திக்க வேண்டும். இவற்றினூடாக நாம் உண்மையான பிரதிபலனை பெற்றுக் கொள்ளாவிட்டால் அது சமூகத்துக்கு பெரும் பாதிப்பாக அமையும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். 

இது சம்பந்தமாக பேசுவதற்கு பேஸ்புக் நிறுவனத்தின் அதிகாரிகள் நாளை நாட்டுக்கு வருகை தர உள்ளார்கள். 

பேஸ்புக் ஊடாக குரோதம், இனவாதம், வெறுப்பு கருத்துக்களை பரப்பி மோதல் ஏற்படுத்துவோரின் செயற்பாடுகளை தடுப்பதற்கான முறைகள் சம்பந்தமாக இதன்போது நாம் பேச உள்ளோம் என்று பிரதமர் கூறினார்.
பேஸ்புக் ஊடாக குரோதம், இனவாதம், வெறுப்பு கருத்துக்களை பரப்பி மோதல் ஏற்படுத்துவோரின் செயற்பாடுகளை தடுக்க உள்ளோம். cc பேஸ்புக் ஊடாக குரோதம், இனவாதம், வெறுப்பு கருத்துக்களை பரப்பி மோதல் ஏற்படுத்துவோரின் செயற்பாடுகளை தடுக்க உள்ளோம். cc Reviewed by Euro Fashions on March 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.