கண்டி தெல்தெனியவில் தாக்குதலுக்குள்ளான பெரும்பான்மை வாலிபர் உயிரழப்பு ...




தெல்தெனிய பகுதியில் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த வாலிபர்கள் சிலரால் தாக்குதலுக்கு உள்ளான 

பெரும்பான்மை இன வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர்  கண்டி தெல்தெனிய பகுதியில் வாகனம் ஒன்றை முந்தி சென்ற சம்பவத்தின் பின்னனியில் முஸ்லிம் சமூக  வாலிபர்கள் சிலருக்கும் பெரும்பான்மை இன வாலிபருக்கும் இடையே ஏற்பட்ட வாய் தர்க்கம் கைகலப்பில் முடிந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் பெரும்பான்மை வாலிபர்  கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள  நிலையில் அவர்  தீவிர  சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் சிகிற்சை பலன் இன்றி உயிரிந்துள்ளார்.

இதனால் அங்கு ஏற்பட்ட பதட்டத்தை தொடர்ந்த தும்பரை ஜம்மியதுல் உலமா சபை மற்றும் அம்பகஹலந்த பள்ளிவாயல் நிருவாகம் உள்ளிட்டவர்களின் பங்களிப்புடன்  கண்டி  பஸ்லுர் ரஹ்மான் மவ்லவி அவர்களின் பங்களிப்புடன் இன்று அம்பஹலந்த பள்ளிவாயலில் பௌத்த மதகுருமார் மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் கலந்துகொண்ட முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க தீர்மாணிக்கப்பட்டுள்ள அதேவேளை அங்கு பதற்றம் ஏற்படாமல் இருக்க இரு தரப்பும் புரிந்துனர்வுடன் செயற்பட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை தாக்குதலுடன் தொடர்புடைவர்  பொலிஸில் சரணடைந்துள்ளதாகவும் சம்பவம் தணிந்து மீண்டும் அங்கு அமைதி,சுமுகம் நிலவ பிரார்த்திப்போம்.
கண்டி தெல்தெனியவில் தாக்குதலுக்குள்ளான பெரும்பான்மை வாலிபர் உயிரழப்பு ...  கண்டி தெல்தெனியவில் தாக்குதலுக்குள்ளான பெரும்பான்மை வாலிபர் உயிரழப்பு ... Reviewed by Euro Fashions on March 03, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.