பெற்றோர்களே!!!நீங்களும் ஏன் இந்த முயற்சியை எடுக்கக் கூடாது???




கடந்த வார பதட்டத்தில் இருந்து சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கக்
கூடிய நேரமிது 
நேற்றைய தினத்திலிருந்து எமது கண்டி மாவட்ட பாடசாலைகள் ஆரம்பமாகி இருக்கிறது . தூரம் சென்று படிக்கக் கூடிய மாணவர்களின் வருகை நேற்றைய தினம் குறைவாகவே காணப்பட்டது . தொடர்ந்து வரக்கூடிய நாட்களில் மாணவர்களின் வருகை வழமைக்கு திரும்பி விடும் என அதிபர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

நேற்றைய தினம் மாணவர்கள் வருகையின் குறைவுக்கு காரணம் தொடர்ந்து எம்மனதில் தேங்கி நிட்கும் அச்ச நிலையே.

இந்த தருணத்தில் பெற்றோர்களாகிய நாம் சிந்திக்க வேண்டிய முக்கியமான ஒன்று என்னவெனில்:

கடந்த வாரம் பெளத்த இனவெறியர்களால் எமது சமூகம் கொடூரமாக தாக்கப்பட்டதால் எமது பிள்ளைகள் மத்தியில் ஒரு அச்ச நிலை காணப்படுகிறது. 

இந்த அச்சம்,சந்தேகம் என்பன பெளத்த மத பிள்ளைகளோடு சேர்ந்து படிக்கக் கூடிய எமது மாணவர்களுக்கு நிறையவே இருக்கும்.

குறிப்பாக சர்வதேச பாடசாலைகளில் படிக்கக் கூடிய மாணவர்களுக்கு இந்த நிலை அதிகமாகவே இருக்கும் இந்த கலவரத்துக்கு முன் கூட இருந்த அந்நிய மதத்தைச் சேர்ந்த நண்பர்களுடன் நான் இனிமேல் எப்படி பழகுவது?எப்படி நம்புவது? நண்பன் என்ற உறவை தொடரலாமா ?என்ற கேள்விகள் அம்மாணவர்கள் மத்தியில் எழுவது இயட்கையே.

ஆகவே அன்பான பெற்றோர்களே: 

இந்த நிலையில் இருந்து எமது பிள்ளைகளின் சிந்தனையை திருப்ப சில ஆலோசனைகள் கட்டாயம் தீவிரமாக சிந்திக்கவும் இல்லையேல் எமது பிள்ளைகளின் சிந்தனைகள் சீர் குலைந்து அவர்கள் கல்வி நிலை பாதிப்படைய நிறையவே இடம் உண்டு 

இது கண்டி மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு மாத்திரம் அல்ல இலங்கையில் உள்ள அனைத்து பெளத்த ,முஸ்லீம் மாணவர்களை தாங்கிய பாடசாலைகளுக்கும் பொருந்தும்.பெற்றோர்களே நாம் செய்ய வேண்டிய வேலை என்னவெனில்:

பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் பாடசாலை அதிபர்களை சந்தித்து,இப்போது நடை பெற்றுக் கொண்டிருக்கக் கூடிய கலவரம் பற்றி தெளிவு படுத்துவதட்காகவே பிரத்தியேக கூட்டம் ஒன்று கூட்ட சொல்லுங்கள் அந்த கூட்டத்துக்கு தகுதி பெட்ர ஒரு பெளத்த மதகுரு ஒருவரையும் , இஸ்லாமிய மதகுரு ஒருவரையும் (மௌலவி) கண்டிப்பாக எடுக்கச் சொல்லுங்கள் 
அதிபர் , மதகுருமார்களுக்கு ஒரு சிறப்பான , தேவையான உரை ஒன்றை நிகழ்த்த சொல்லுங்கள் 

அவர்கள் அனைவருடைய உரையின் பின் பெளத்த , முஸ்லீம் மாணவர்கள் இரு தரப்பினருக்கும் இடையில் உள்ள சந்தேகங்கள் , பயங்கள் கலைக்கப் படும் விதமாக இருக்க வேண்டும் 

அதட்காக,இப்போ நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய நிலவரம் பற்றி முற்று முழுதாக சொல்லி விடாமல் சற்று மெருகூட்டி நிலைமையை இலகு படுத்தி கூறவேண்டிய கடமை எமக்கு இருக்கிறது 
முக்கியமாக ,எங்களுடைய நாட்டில் பெரும்பான்மையாக வாழக் கூடிய பெளத்த மக்களில் 98% மான மக்கள் எங்களை போன்று நிம்மதியாக ,சந்தோஷமாக அனைத்து இன மக்களோடு ஒன்றிணைந்தது வாழ விருப்பப் பட்டு வாழக் கூடியவர்களே  குறிப்பாக இங்கே இருக்கக் கூடிய அதிபர் , உங்கள் ஆசிரியர்கள் , உங்களோடு கல்வி பயிலக் கூடிய சக மாணவர்கள் இவர்கள் அத்தனை பெரும் இந்த 98% மக்களில் அடங்குவார்கள். எஞ்சிய 2% மானவர்களே இந்த பிரச்சினைக்கு காரணமானவர்கள் அவர்கள் அரசியல் நோக்கத்துக்கோ வேறு நோக்கங்களுக்கோ இந்த நிகழ்ச்சி நிரலில் ஈடு படுகிறார்கள். 

ஆகவே அன்பான மாணவர்களே:எதிர்காலத்தில் எமது நாட்டை கட்டிக் காக்கக் கூடிய நீங்கள் இன மத வேறுபாடு இன்றி நண்பர்களாக பழகி ஒரு முன்மாதிரி சமுதாயமாக வாழ்ந்து காட்டுங்கள் என்ற இந்த அறிவுரை கண்டிப்பாக பெளத்த மதகுரு மூலமாக பெளத்த மாணவர்களுக்கும் , இஸ்லாமிய மதகுரு மூலமாக முஸ்லீம் மாணவர்களுக்கும் கட்டாயம் சென்றடைய வேண்டியது காலத்தின் தேவையாக இருக்கிறது.

குறிப்பாக அதிபர்களிடம் சொல்லுங்கள் ,இதே செய்திகளை தனியாக ஆசிரியர் கூட்டம் ஒன்றும் ஒழுங்கு செய்து அவர்களுக்கும் தெளிவு படுத்தி தொடர்ந்து வகுப்பறையிலும் இந்த மாதிரி அறிவுரை கொடுக்கச் சொல்லுங்கள் ஆசியர்கள் மூலமாக மனதளவில் பாதிக்கப் பட்ட சம்பவங்கள் கடந்த காலங்களில் நிறையவே இருக்கிறது அந்த நிலைக்கும் இது மருந்தாக அமைவதட்கு பார்த்துக் கொள்ளுங்கள் .

கண்டி மாவட்டத்தில் எமது அறிவுறுத்தலுக்கு அமைய மாற்று மத அதிபரால் மிகவும் வரவேட்புப் பெற்று இந்த ஏட்பாடு நடந்து கொண்டிருக்கிறது .
எனவே பெற்றோர்களே நீங்களும் ஏன் இந்த முயட்சியை எடுக்கக் கூடாது???
அப்படி நீங்கள் இந்த ஏட்பாட்டை செய்தால் பாடசாலை மூலமாக பத்திரிகையிலும், தொலைக்காட்சியிலும் தெரியப் படுத்துங்கள் அதில் கண்டிப்பாக  நிறைய நன்மைகள் இருக்கிறது.


நன்றி 
ஷியாம்தீன் (D.Litt.,USA)
அக்குறணை 

பெற்றோர்களே!!!நீங்களும் ஏன் இந்த முயற்சியை எடுக்கக் கூடாது???  பெற்றோர்களே!!!நீங்களும் ஏன் இந்த முயற்சியை எடுக்கக் கூடாது??? Reviewed by Madawala News on March 13, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.