மு. காவின் இத்த‌கைய‌ ஒழுக்காற்று ந‌ட‌வடிக்கைக‌ளுக்கு ஹ‌ரீஸ் அஞ்ச‌மாட்டார்
பிர‌த‌ம‌ர் மீது ஒழுக்காற்று ந‌ட‌வ‌டிக்கை எடுப்ப‌தை பின் போட‌வே அம்பாரை, க‌ண்டி க‌ல‌வ‌ர‌ங்க‌ள்
திட்ட‌மிட்டு அர‌ங்கேற்ற‌ப்ப‌ட்ட‌ன‌. க‌ல‌வ‌ர‌ம் ந‌டை பெற்ற‌ ம‌றுதின‌ம் பிர‌த‌ம‌ர் இத‌னை க‌ட்டுப்ப‌டுத்தாவிட்டால் அவ‌ர் மீதான‌ ந‌ம்பிக்கையில்லா பிரேர‌ணைக்கு ஆத‌ர‌வ‌ளிக்க‌ வேண்டி வ‌ரும் என‌ க‌ல்முனை எம் பி ஹ‌ரீஸ் பாராளும‌ன்ற‌த்தில் உண்மையாக‌வும், உண‌ர்வு பூர்வ‌மாக‌வும் பேசினார். 

அவ‌ர‌து அப்பேச்சு பாராட்ட‌த்த‌க்க‌தாக‌ இருப்பினும் ஐ தே க‌வின் புரோக்க‌ரான‌ 5 ஹ‌க்கீமை த‌லைவ‌ராக‌ கொண்ட‌ க‌ட்சியின் உறுப்பின‌ராக‌ இருந்து கொண்டு இவ்வாறு பேசி க‌டைசியில் மூக்குடைப‌ட்டு ச‌ர‌ண‌டைந்து விடுவார் என்ப‌தை அர‌சிய‌ல் வ‌ர‌லாறு அறிந்த‌வ‌ர்க‌ள் என்ற‌ வ‌கையில் நாம் அறிவோம். இவ்வாறு பேசிய‌ ப‌ல‌ர் த‌லைவ‌ரால் குட்ட‌ப்ப‌ட்டு குணிந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் நிறைய‌ உண்டு.

இப்போது க‌ல‌வ‌ர‌த்தை பிர‌த‌ம‌ர் அட‌க்க‌வில்லை என்ப‌து உறுதியாகி விட்ட‌து. ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ வெளிநாட்டு தூதுவ‌ர்க‌ளை அழைத்து பேசிய‌தால் ந‌டு ந‌டுங்கிய‌ அர‌சாங்க‌ம் இனி தாக்கிய‌து போதும் என‌ நினைத்த‌தால் க‌ல‌வ‌ர‌ம் தானாய் அட‌ங்கிய‌து. 

இந்நிமையில் ஹ‌ரீஸ் இவ்வாறு பேசிய‌மைக்காக‌ க‌ட்சி ஒழுக்காற்று ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ முய‌ற்சித்த‌மை மிக‌ மோச‌மான‌ ச‌மூக‌த்துரோக‌மாகும். முஸ்லிம் காங்கிர‌சின் த‌லை முத‌ல் நுணி வ‌ரை சுய‌ந‌ல‌மும் ச‌மூக‌த்துரோக‌முமே உள்ள‌து என்று நாம் ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ சொல்வ‌து உண்மையாகியுள்ள‌து. 

ஆனாலும் மு. காவின் இத்த‌கைய‌ ஒழுக்காற்று ந‌ட‌வடிக்கைக‌ளுக்கு ஹ‌ரீஸ் அஞ்ச‌மாட்டார் என‌ ந‌ம்புகிறோம். ஆக‌வே பிர‌த‌ம‌ருக்கெதிரான‌ ந‌ம்பிக்கையில்லா பிரேர‌ணையின் போது ஹ‌ரீஸ் அவ‌ர்க‌ள் த‌னித்து நின்றேனும் ஆத‌ர‌வ‌ளிப்பார் என‌ க‌ட‌ந்த‌ பொதுத்தேர்த‌லில் அவ‌ருக்கு ஆத‌ர‌வாக‌ நின்று பிர‌சார‌ம் செய்த‌வ‌ர்க‌ள் என்ற‌ வ‌கையில் நாம் உறுதியாக‌ ந‌ம்புகிறோம்.

- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்- உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர்.
மு. காவின் இத்த‌கைய‌ ஒழுக்காற்று ந‌ட‌வடிக்கைக‌ளுக்கு ஹ‌ரீஸ் அஞ்ச‌மாட்டார்  மு. காவின் இத்த‌கைய‌ ஒழுக்காற்று ந‌ட‌வடிக்கைக‌ளுக்கு ஹ‌ரீஸ் அஞ்ச‌மாட்டார் Reviewed by Madawala News on March 12, 2018 Rating: 5

1 comment:

  1. Innum mahindavai nambuvathuthaan kevalamaaarukku......
    Specially 2-MPs involved..they are from Mottu (SLFP).....
    3-Police inspectors of Police..they are from Mahinda group..?
    What else you need...?

    ReplyDelete

adsns