அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் முக்கிய அறிவித்தல்.



நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலமைகளைக் கவனத்திற்கொண்டு இஸ்லாத்தின் அடையாளச் சின்னங்களில் ஒன்றான புனித ஜும்ஆவுடைய தினமாகிய நாளை (2018.03.9) பின்வரும் ஒழுங்குகளைக் கவனத்திற்கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இலங்கைவாழ் அனைத்து முஸ்லிம்களையும் கட்டாயமாக வேண்டிக் கொள்கின்றது.


1)ஜும்ஆவுடைய நேரத்தில் மஸ்ஜித்கள், முஸ்லிம்களின் வீடுகள், வியாபாரஸ்தலங்களுக்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்பு நவடிக்கைகளையும் ஏற்பாடு செய்துகொள்ளுமாறும், தற்பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் முஸ்லிம் சகோதரர்கள் ழுஹ்ர் தொழுகையைத் தொழுதுகொள்ளலாம். இவர்களுக்கு ஜுமுஆக் கடமையாகமாட்டாது.


2)ஓர் ஊரில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மஸ்ஜித்களில் ஜும்ஆக்கள் நடைபெறும் வழமை இருந்தால், அம்மஸ்ஜித்களின் ஜும்ஆவுடைய நேரத்தை நிர்வாகிகள் தங்களுக்குள் கலந்துரையாடி  தேவைப்படின் வித்தியாசப்படுத்திக் கொள்ளலாம்.


3)முஸ்லிம்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் பாதுகாப்பு படையினருடன் ஒத்துழைப்பு, பண்பாடு, புரிந்துணர்வுடன் நடந்துகொண்டு தமது பாதுகாப்பை மேலும் பலப்படுத்திக்கொள்ளவும்.


4)குத்பாப் பிரசங்கத்தையும் தொழுகையையும் ஜம்இய்யாவினால் வழங்கப்பட்டுள்ள மாதிரி குத்பாவை முன்வைத்து, இருபத்தைந்து நிமிடங்களுக்கு மேற்படாத வகையில் சுருக்கிக் கொள்ளுமாறும் வேண்டிக்; கொள்கின்றோம்.


5)தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலமைகள் அனைத்து முஸ்லிம்களையும் ஆழ்ந்த கவலைக்கும் ஆத்திரத்துக்கும் ஆளாக்கியிருக்கும் இந்நிலையில், அவர்களுக்கு மன ஆறுதலாகவும் முஸ்லிம்களின் உணர்வுகள்; பாதகமான முறையில்; தூண்டப்படாமலும் குத்பாப் பிரசங்கத்தை அமைத்துக் கொள்ளல் வேண்டும்.


6)நாட்டு முஸ்லிம்களினதும் உலக முஸ்லிம்களினதும் நிலமைகள் சீராகி நிம்மதியாகவும் கண்ணியமாக வாழ துஆ, இஸ்திக்ஃபார், நோன்பு, சதகா, போன்ற நல்லமல்களின் மூலம் அல்லாஹுதஆலாவின் பக்கம் மக்களைத் திசை திருப்புதல் வேண்டும்.


7)அவசரகால சட்டம் நாட்டில் அமுலில் உள்ளதால் ஜும்ஆ முடிந்தவுடன் நாட்டுச் சட்டத்தை மதித்து அமைதியாக கலந்துசென்று தத்தமது வேலைகளில் ஈடுபடுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

 

 

இவ்வண்ணம்

அஷ்-ஷைக் இல்யாஸ் மஹ்மூத்

செயலாளர்

பத்வாக் குழு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலம

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் முக்கிய அறிவித்தல்.  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் முக்கிய அறிவித்தல். Reviewed by Madawala News on March 08, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.