குளியாபிடிய மதீனா ஹோட்டல் தாக்குதல் சம்பவத்தின் விபரம் ...

குருநாகல் மாவட்டம் குளியாபிடிய ஹனிபா ஹோட்டல் தாக்குதல் பின்னனியில் சந்தேகத்தின்
பேரில் குளிப்பிட்டிய நகர சபைக்கு இம்முறை போட்டியிட்டு வெற்றிபெற்ற ஹெரான் ஹல்பே என்பவரின் சகோதரர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் நாம் அந்த ஹோட்டலில் முகாமையாளராக பணியாற்றும் பாஸில் அவர்களை தொடர்புகொண்டு கேட்டபோது கருத்து வெளியிட்ட அவர் ...

நேற்று முன்தினம் நள்ளிரவு 2.3 மணியளவில் எமது ஹோட்டல் கார் ஒன்றில் வந்த காடையர்களால் தாக்கப்பட்டுள்ளது.

அதிகாலை வேலை ஹோட்டலுக்கு வந்த போது முன்னாள் இருந்த கெபின் கண்ணாடிகள் சேதமாக்கப்பட்டிருந்தன. இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்க அங்கு வந்த பொலிஸ் குழு எங்கள் சீ சீ டிவி வீடியோக்களை ஆராந்து எடுத்து சென்றனர்.

பின்னர் துரித கதியில் செயற்பட்ட பொலிஸார் 11.30 மணியளவில் குளியாபிடிய நகர சபை ஐக்கிய தேசிய கட்சியின் வேற்பாளர் ஹெரான் ஹல்பேயின் பெயரில் பதிவு செய்யப்பட்ட அகுவா காரை பொலிஸ் கஸ்டடிக்கு எடுத்த  அதேவேளை அவரின் சகோதரர் உள்ளிட்ட இருவரை கைது செய்தனர்.

பின்னர் குறித்த சந்தேக நபர்களையும் காரையும் தவறுதலாக கைது செய்ததாக பொலிஸார் விடுதலை செய்துள்ளனர் என குறிப்பிட்டார்.

இது தொடர்பில் நாம் பொலிஸ் ஊடக பிரிவில் கேட்டபோது ..

தவறுதலாக பொலிஸார் கார் ஒன்றை பொலிஸ் கஸ்டடிக்கு எடுத்து பின்னர் விடுதலை செய்ததாகவும் குறிப்பிட்டனர்.

குறித்த காரின் உரிமையாளர்  யார் என்பதை நாம் வினவியபோது அது தொடர்பில் இதுவரை தங்களுக்கு தகவல் கிடைக்கவில்லை என குறிப்பிட்டனர்.
குளியாபிடிய மதீனா ஹோட்டல் தாக்குதல் சம்பவத்தின் விபரம் ...  குளியாபிடிய மதீனா ஹோட்டல் தாக்குதல் சம்பவத்தின் விபரம் ... Reviewed by Madawala News on March 09, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.