அப்துல் பாஷித் இன் மரணம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள சந்தேகம்.


கண்டியில் எரிந்து நிலையில் மீட்கப்பட்ட இளைஞனின் (அப்துல் பாஷித்) மரணம் தொடர்பில் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.கண்டி, பல்லேகலயில் தீயில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட இளைஞனின் மரணம் கொலையாக இருக்கலாம் பொலிஸார் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமான லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.

செய்தி மூலம் : http://www.lankadeepa.lk/latest_news/

குறித்த இளைஞனின் மரணம் கொலையாக கருதி விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அந்த வீடு மற்றும் அருகிலுள்ள கடைக்கு தீ வைத்தவர்கள் தொடர்பில் முக்கிய பல தகவல்கள் கிடைத்துள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் லங்காதீப ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

விசாரணைக்காக சிசிடிவி காணொளிகள் மற்றும் வீடியோ காட்சிகளை பயன்படுத்துவதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 6ஆம் திகதி காலை கண்டி பல்லேகல, கென்கல்ல வீட்டில் இருந்து இளைஞனின் ஜனாஸா  மீட்கப்பட்டது.. 5ஆம் திகதி ஏற்பட்ட அசாதாரண சம்பவத்தின் போது இளைஞனின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது. இதன்போது அவரது சகோதரர் மற்றும் பெற்றோரை அவர் காப்பாற்றியுள்ளார் என பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

 இந்த இளைஞர் அதிக புகையை சுவாசித்தமையினால் உயிரிழந்துள்ளதாக மரண விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

திட்டமிட்ட வகையில் புகையை ஏற்படுத்தி அவரை உயிரிழக்க செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறான செயற்பாட்டினை கொலையாக கருதி சந்தேக நபர்களுக்கு எதிராக கொலை குற்றச்சாட்டின் கீழ் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அப்துல் பாஷித் இன் மரணம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள சந்தேகம். அப்துல் பாஷித் இன் மரணம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள சந்தேகம். Reviewed by Madawala News on March 08, 2018 Rating: 5

8 comments:

 1. வீட்டுக்கு தீ வைத்ததும் கொலை குற்றத்திற்கு சமமே. ஒரு பிழையும் செய்யாத இவனுடய மரணத்திற்கு காரணமானவர்களை சட்டம் தண்டிக்காவிட்டாலும் கடவுள் தண்டிப்பார். இவனது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

  ReplyDelete
 2. Ennada iwangalda sattam... Loosu maari kazakkiraangal. Neruppooti kpnda azu kola illayo???

  ReplyDelete
 3. Our deepest condolences to the family members !!! May Allah bless him Jannathul Firdous !!!

  ReplyDelete
 4. THIS SPECIAL MASSAGE FOR MADAWALA DONT FOR GET ?.....சிங்களவனோடு சேர்ந்து பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியடைந்த துலுக்க கூட்டம் இன்று அதே சிங்களவன்கிட்ட வாங்கிக்கட்டுது. THING FEW YEAR BACK

  ReplyDelete
  Replies
  1. பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியடைந்த கூட்டம் இன்று அதே சிங்களவன்கிட்ட வாங்கிக்கட்டுது.

   Delete
 5. https://www.youtube.com/watch?v=02EyzQ_qDrI

  ReplyDelete
 6. Veettuku thee vetchacana muzalla arrest pannittu aduthaza research pannungada muttaalunga

  ReplyDelete
 7. கண்டி இனவாத பிரச்சினைக்கு எதிராக தவ்ஹீத் ஜமாஅத்தின் பணிகள்
  https://www.youtube.com/watch?v=H_UjFNpE_Is

  ReplyDelete

adsns