இது வெறுமனே ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு விழுந்த அடியல்ல, அநீதியான அம்பயர்களின் முகங்களில் விழுந்த அடி. amp


உடைத்ததில் நியாயமில்லை என்றாலும்......

நேற்றிரவு பங்களாதேஷ் அணி இலங்கை அணியை வெற்றி கொண்டு இலங்கையின் so called சு தந்திர கிண்ண இறுதிப்போட்டிக்கு தெரிவானது.

இந்த சூடான வெற்றியினை அவர்களது dressing room இனை உடைக்குமளவிற்கு கொண்டாடியதாக தகவல்கள் வருகின்றன!

இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத கொண்டாட்ட முறையாகும்.

இருந்தாலும் இது ஏன் நிகழ்ந்தது என்ற ஒரு பக்க நியாயம் அவர்களிடம் இருக்கக்கூடும்.

ஏனென்றால் இதற்கு முதலும் பல போட்டிகளை பங்களாதேஷ் வென்றுள்ளது. வென்ற இடங்களிலெல்லாம் dressing room உடைக்கப்படவில்லை.

கனவான்களின் விளையாட்டு என்று சொல்லப்படுகிற கிரிக்கட்டில் அம்பயர்களும் சேர்ந்து ஒரு பக்க சார்பாக விளையாடும் இழி நிலை இப்போது உண்டு.

சிலவேளைகளில் இதனால் பல அணிகள் அநியாயமாக தோற்றுப்போயிருக்கிறார்கள்.

அதன் பின் அம்பயரை, மெட்ச் நடத்திய நாட்டை விமர்சித்து பல கருத்துகளும் வரும். அதனால் ஆன புண்ணியம் ஒன்றுமில்லை.

நேற்று கடைசி வேளையில் இலங்கை வீரர் வீசிய பந்து தெளிவான no Ball என்று தெரிந்தும் அம்பயர் அதனை கண்டு கொள்ளவில்லை.

இதனால் மைதானத்தில் சல சலப்பு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பங்ளதேஷ் தலைவர் ஷகீப் தனது அணியை விளையாட்டை இடை நிறுத்தி ஸ்டேடியத்திற்கு வருமாறு அழைத்தார்.

ஆனாலும் பொறுமையிழக்காத மஃமுதுழ்ழாஹ் மிக்க நம்பிக்கையோடு ஆட்டத்தை தொடர ஒத்துக்கொண்டு சிக்ஸரை விளாசி வெற்றிக்கனியினை பறித்துக்கொண்டதை பார்க்க முடிந்தது.

அதன் பின்னரும் இரண்டு அணி வீரர்களுக்குமிடையிலும் மைதானத்தில் சொற்போர் நிகழ்ந்ததை காண முடிந்தது.

ஒரு வித பாரபட்சத்தில், வசவுகளுக்கு மத்தியில்,அடக்கு முறையில் நிகழ்ந்து முடிந்த போட்டியில் வெற்றி கொண்டதை உணர்வுகளால் உந்தப்பட்ட பங்காளி வீரர்கள் வேறுவிதத்தில் கொண்டாடிவிட்டார்கள். 

கொண்டாடிய விதம் முற்றிலும் பிழையான போதும் அதற்கான தீவிர உணர்வினை தூண்டிய காரணிகள் அதை விட மோசமானவை...

அம்பயர்கள் சார்பெடுக்கும் கீழ் நிலை யுக்திக்கு பங்காளி வீரர்கள் கொடுத்த சாட்டையடிதான் நேற்றைய நிகழ்வுகள்!

மஃமுதுழ்ழாவின் துடுப்பு மைதானத்திலும்
வீரர்களின் வெறுப்பு உடைமாற்று அறையிலும்
அதனை வெளிப்படுத்திற்று.

ஒடுக்கப்படுகிறவன் ஒரு நாள் இப்படித்தான் வெடிப்பான். இது வெறுமனே ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு விழுந்த அடியல்ல, அநீதியான அம்பயர்களின் முகங்களில் விழுந்த அடி.

இனியாவது இந்த அம்பயர்களின் கள்ள விளையாட்டு கிரிக்கட்டில் ஒழியட்டும்.

-முஜீப் இப்றாஹிம்-
இது வெறுமனே ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு விழுந்த அடியல்ல, அநீதியான அம்பயர்களின் முகங்களில் விழுந்த அடி. amp இது வெறுமனே ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு விழுந்த அடியல்ல, அநீதியான அம்பயர்களின் முகங்களில் விழுந்த அடி. amp Reviewed by Euro Fashions on March 17, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.