கண்டிக் கலவரத்தில் சேதமடைந்த வீடுகளுக்கு 50 ஆயிரம், கடைகளுக்கு 1 இலட்சம், பள்ளிகளுக்கு 5 இலட்சம் நஷ்டயீடு.

கண்டி அசம்பாவிதத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டயீடு வழங்குவது தொடர்பான கலந்துரையாடல்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (10) கண்டி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

முதற்கட்டமாக சேதமடைந்த வீடுகளுக்கு 50 ஆயிரம் ரூபாவும், கடைகள் மற்றும் வியாபார நிலையங்களுக்கு வியாபாரத்தை மீள ஆரம்பிப்பதற்கு 1 இலட்சம் ரூபாவும், பள்ளிவாசல்களுக்கு 5 இலட்சம் ரூபாவும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளன. முற்றாக சேதமடைந்த வீடுகளை மதிப்பீடு செய்து அமைச்சரவை அங்கீகாரம் பெற்று உரிய தொகை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


எறிக்கப்பட்ட மற்றும் உடைக்கப்பட்ட வீடுகளுக்கே நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என பிரதேச செயலாளர் சுட்டிக்காட்டியபோது, கண்ணாடி, கதவுகள் உள்ளிட்ட கழிவறை, சமயலறை, படுக்கையறை போன்றவற்றிலுள்ள அனைத்து சாதனங்களும் சேதமடைந்துள்ளதால், அவற்றுக்கும் இழப்பீடு வழங்க வேண்டுமென அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூட்டத்தில் கடுமையாக தெரிவித்தார். அதற்கும் நட்டஈடு வழங்குமாறு பிரதமர் உத்தரவிட்டார்.


முதற்கட்ட கொடுப்பனவின் பின், இழப்பீடுகளை மதிப்பீடு செய்து உரிய நஷ்டயீடுகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஹலீம், லக்ஷ்மன் கிரியெல்ல, ரஞ்சித் மத்துமபண்டார,  இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் லக்கி ஜயவர்தன, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையின் உயரதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள் உள்ளிட்ட அரச உயரதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

A meeting was held today at the Kandy District Secretariat, under the auspices of Prime Minster Ranil Wickremasinghe to discuss the provision of compensation for rebuilding the damaged properties during the violent attacks on Muslims that took place in Kandy, Digana areas last week, on the behest of SLMC Leader Rauff Hakeem.

As a preliminary measure, it was decided that Rs 50,000/= will be allocated for totally damaged houses, Rs 100,000 for rebuilding and restarting livelihood activities in completely destroyed business premises and Rs 500,000 for rebuilding of the damaged mosques.

The District Secretariat was of the view that compensation be given to only fully damaged premises. Minister Hakeem however, firmly opposed this decision and insisted that partially damaged houses too be compensated, as the fittings and household items in the partially damaged houses have been fully destroyed. The Prime Minister acceded to this request.

It was informed that the damages will be assessed in detail after the preliminary compensations are made.

Also present at the meeting were Ministers Rauff Hakeem, A.H.A. Haleem, Lakshman Kiriella, Ranjith Madhumabandara State Minister Ruwan Wijewardena, MP Laki Jayawardene, Chief Minister, Central Province Sarath Ekenayake, IGP Pujith Jayasundera, High ranking officers of the SL Army and Navy, Divisional Secretaries, Grama Niladharis and other government officials.

-Min RH

-அல்மசூறா / மடவலை நியூஸ்
கண்டிக் கலவரத்தில் சேதமடைந்த வீடுகளுக்கு 50 ஆயிரம், கடைகளுக்கு 1 இலட்சம், பள்ளிகளுக்கு 5 இலட்சம் நஷ்டயீடு. கண்டிக் கலவரத்தில் சேதமடைந்த வீடுகளுக்கு 50 ஆயிரம், கடைகளுக்கு 1 இலட்சம், பள்ளிகளுக்கு 5 இலட்சம் நஷ்டயீடு. Reviewed by Euro Fashions on March 10, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.