445 வீடுகள் மற்றும் வர்த்­தக நிலை­யங்­கள், 24 பள்­ளி­வா­சல்­, 65 வாக­னங்கள்.. வன்முறை பாதிப்பின் முழு விபரத்தை வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் .


(எம்.எப்.எம்.பஸீர்)
இனவாத வன்­மு­றைகள் கார­ண­மாக நாட­ளா­விய ரீதியில் 445 வீடுகள் மற்றும் வர்த்­தக நிலை­யங்­களும் 24
பள்­ளி­வா­சல்­களும், 65 வாக­னங்­களும் சேத­ம­டைந்­துள்­ள­துடன், 28 பேர் காய­ம­டைந்­துள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார். இந்தச் சம்­ப­வங்கள் தொடர்பில் இது­வரை 280 பேர் நாட்டின் பல பாகங்­க­ளிலும் உள்ள பொலிஸ் நிலை­யங்கள் ஊடாக சாதா­ரண, அவ­சர கால நிலை விதி­க­ளுக்கு அமை­வாக கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர்­களில் 185 பேர் தற்­போதும் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

இன­வாத வன்­மு­றைகள் கார­ண­மாக கண்டி மாவட்டம் உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் கடந்த 8 நாட்­களில் இடம்­பெற்ற சம்­ப­வங்கள் தொடர்பில் பொலி­ஸா­ருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்­பா­டுகள் தொடர்­பி­லான தக­வல்­களை பொலிஸ் தலை­மை­யகம் நேற்று வெளி­யிட்­டது.

அதன்­படி பொலிஸ் தலை­மை­ய­கத்தில் நேற்று விசேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பை நடாத்­திய பொலிஸ் அத்­தி­யட்சகர் ருவன் குண­சே­கர, கடந்த மார்ச் 4 ஆம் திகதி முதல் நாட­ள­ா வியரீதியில் இடம்­பெற்ற இன­வாத வன்­மு­றைகள் தொடர்பில் பொலி­ஸா­ருக்கு பதி­வா­கி­யுள்ள முறைப்­பாட்­டுக்கு அமை­வாக தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தினார். கண்டி பொலிஸ் பிராந்­தி­யத்தில் இடம்­பெற்ற வன்­மு­றைகள் தொடர்பில் வேறா­கவும், ஏனைய பகு­தி­களில் இடம்­பெற்­றவை தொடர்பில் தனி­யா­கவும் இந்த தக­வல்­களை அவர் வெளிப்­ப­டுத்­தினார்.

இதன்­போது பொலிஸ் பேச்­சாளர் ருவன் குண­சே­கர மேலும் தெரி­வித்­த­தா­வது, கண்டி மற்றும் நாட்டின் சில பகு­தி­களில் இடம்­பெற்ற வன்­மு­றைகள் கடந்த மார்ச் 4 ஆம் திகதி தெல்­தெ­னிய பொலிஸ் பிரிவில் இரு கடை­க­ளுக்கு தீ வைத்­ததன் ஊடாக ஆரம்­பித்­தி­ருந்­தன.

இந் நிலையில் நேற்று முன் தினம் 12 ஆம் திகதி மாலை 6.00 மணி வரை­யி­லான காலப்­ப­கு­திக்குள் பொலி­ஸா­ருக்கு கிடைக்­கப்­பெற்ற முறைப்­பாட்­டுக்கு அமை­வாக வன்­மு­றை­களின் போது ஏற்­பட்ட சேத விப­ரங்­களை எம்மால் வெளிப்­ப­டுத்த முடியும்.

குறிப்­பாக மார்ச் 5,6,7,8 ஆம் திக­தி­க­ளி­லேயே வன்­மு­றைகள் உச்­ச­க்கட்­டத்தில் இருந்­துள்­ளன. அதன்­படி பொலி­ஸா­ருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்­பா­டு­க­ளுக்கு அமை­வாக இந்த இன­வாத வன்­மு­றைகள் கார­ண­மாக கண்டி பொலிஸ் பிராந்­தி­யத்தில் மட்டும் (கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் பிரி­வுக்கு உட்­பட்ட பிர­தேசம்) 423 கடைகள், வீடுகள் சேத­ம­டைந்­துள்­ளன. அது தவிர்த்து நாட்டின் ஏனைய பகு­தி­களில் 22 கடைகள் மற்றும் வீடுகள் சேத­ப் ­படுத்­தப்பட்­டுள்ள நிலையில் மொத்­த­மாக நாட­ள­ாவிய ரீதியில் இவ்­வா­றான 445 சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன.

அத்­துடன் வணக்­கஸ்­த­லங்கள் (பள்­ளி­வா­சல்கள்) மீது நாட­ளா­விய ரீதியில் 24 தாக்­கு­தல்கள் இக்­கா­லப்­ப­கு­தியில் இடம்­பெற்­றுள்­ள­தாக முறைப்­பா­டுகள் உள்­ளன. இதில் 19 பள்­ளி­வா­சல்கள் மீதான தாக்­கு­தல்கள் தொடர்பிலான முறைப்­பாடுகள் கண்டி பொலிஸ் பிராந்­தி­யத்­துக்கு உட்­பட்­டன.

இத­னை­விட கண்டி பொலிஸ் பிராந்­தி­யத்தில் 60 வாக­னங்­களும் ஏனைய பகு­தி­களில் 5 வாகங்­களும் என 65 வாக­னங்­களும் இன­வாத வன்­மு­றை­களால் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இவ்­வன்­மு­றைகள் கார­ண­மாக காய­ம­டைந்­த­வர்கள் 28 பேராவர். அவர்­களில் 22 பேர் கண்டி பொலிஸ் பிராந்­தி­யத்­திலும் ஏனையோர் ஏனைய பகு­தி­க­ளிலும் இவ்­வாறு காய­ம­டைந்­துள்­ளனர்.

இந்த இன­வாத சம்­ப­வங்கள் தொடர்பில் இது­வரை நாட­ளா­விய ரீதியில் 280 பேரை நாம் கைது செய்­துள்ளோம். கண்டி பொலிஸ் பிராந்­தி­யத்தில் சாதா­ரண சட்­டத்தின் கீழ் 59 பேரும் அவ­சர கால சட்ட விதி­களின் கீழ் 119 பேரு­மாக 178 பேர் வன்­மு­றைகள் தொடர்பில் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்­களில் 50 பேர் பிணையில் உள்ள நிலையில் ஏனைய 128 பேரும் விளக்­க­ம­றி­யலில் உள்­ளனர்.

இது தவிர இடம்­பெற்ற (கண்டி தவிர) வன்­மு­றைகள் தொடர்பில் இது­வரை 102 பேரை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். சாதாரண சட்டத்தின் கீழ் 69 பேரும் அவசரகால சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய 33 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 45 பேர் பிணையில் உள்ள நிலையில் ஏனைய 57 பேரும் விளக்கமறியலில் உள்ளனர். இந் நிலையில் இனவாத வன்முறைகள் தொடர்பிலான முறைப்பாடுகளை நாம் தொடர்ந்தும் பதிவு செய்யும் நிலையில், சந்தேக நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கையினையும் தொடர்ந்து முன் னெடுத்துள்ளோம் என்றார்.
445 வீடுகள் மற்றும் வர்த்­தக நிலை­யங்­கள், 24 பள்­ளி­வா­சல்­, 65 வாக­னங்கள்.. வன்முறை பாதிப்பின் முழு விபரத்தை வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் . 445 வீடுகள் மற்றும் வர்த்­தக நிலை­யங்­கள், 24 பள்­ளி­வா­சல்­, 65 வாக­னங்கள்.. வன்முறை பாதிப்பின் முழு விபரத்தை வெளியிட்ட  பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் . Reviewed by Madawala News on March 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.