இந்த ஆண்டில் 1.9 ட்ரில்லியன் ரூபாவும், 2019 இல் 4.2 ட்ரில்லியன் ரூபாவும் நாம் கடன் செலுத்த வேண்டியுள்ளது.


(எம்.எம்.மின்ஹாஜ்,ஆர்.யசி)
முன்­னைய ஆட்­சியின் போது வரு­மானம் இல்­லா­மையின் கார­ண­மாக வெளி­நா­டு­களில் கடன் பெற்­றனர்.
இந்த கடனை தற்­போது நாமே செலுத்த வேண்­டி­யுள்­ளது. அதி­க­ள­வி­லான கடன் அடுத்த வரு­டமே செலுத்­தப்­பட வேண்டும். இதன்­பி­ர­காரம் நடப்­பாண்டில் 1.9 ட்ரில்லியன் ரூபாவும் 2019 இல் 4.2 ட்ரில்லியன் ரூபாவும் 2020 ஆம் ஆண்டில் 3.7 ட்ரில்லியன் ரூபாவும் கடன் செலுத்த வேண்­டி­யுள்­ள­தாக நிதி மற்றும் ஊட­கத்­துறை அமைச்சர் மங்­கள சம­ர­வீர சபையில் தெரி­வித்தார்.

அத்­துடன் மக்­க­ளுக்கு சுமை­யான பொரு­ளா­தா­ரத்தை பொறுப்­பேற்று 18 மாதங்­களில் ஸ்திர­மான பொரு­ளா­தா­ரத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்ளோம். ஏற்­று­மதி வரு­மா­னத்தை அதி­க­ரிக்க செய்­துள்ளோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்ற தீவிர பொறுப்பு முகாமை சட்­ட­மூல இரண்டாம் மதிப்­பீட்டின் மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

முன்­னைய ஆட்­சி­யிடம் இருந்து, மோச­மான பொரு­ளா­தா­ரத்தை நாம் பெற்­றுக்­கொண்டோம். எனினும் சுமார் 18 மாதங்­களில் நாட்டை நாம் பொறுப்­பேற்று ஸ்திர­மான பொரு­ளா­தா­ரத்தை உரு­வாக்­கி­யுள்ளோம். முன்­னைய ஆட்­சியின் சீரற்ற பொரு­ளா­தாரம் கார­ண­மாக திறை­சேரி சரி­வினை சந்­தித்­தது. இதனால் நாட்டின் பொரு­ளா­தா­ரத்­திற்கு பெரும் பாதிப்­புகள் ஏற்­பட்­டன.

தற்­போது நாம் வரு­மா­னத்தை அதி­க­ரித்­துக்­கொண்­டுள்ளோம். நேரடி வரு­மா­னத்தை அதி­க­ரிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். நாம் ஏன் அரச வரு­மா­னத்தை அதி­க­ரிக்க வேண்டும். ஏனெனில் முன்­னைய ஆட்­சியின் போது பெறப்­பட்ட எல்லை மீறிய கடனை நாம் செலுத்த வேண்­டி­யுள்­ளது. முன்­னைய ஆட்­சியின் போது வீணான அபி­வி­ருத்தி திட்­டங்­க­ளுக்­காக கடன் பெறப்­பட்­டுள்­ளது. மத்­தள விமான நிலையம் மற்றும் மாகந்துற துறை­முகம் தற்­போது வெள்ளை யானை­யாக மாற்­றப்­பட்­டுள்­ளது. இதன்­படி 11 ட்ரில்லியன் ரூபா கடன் செலுத்த வேண்­டி­யுள்­ளது.

 நடப்­பாண்டில் 1.9 ட்ரில்லியன் ரூபாவும் 2019 இல் 4.2 ட்ரில்லியன் ரூபாவும் 2020 ஆம் ஆண்டில் 3.7 ட்ரில்லியன் ரூபா கடன் செலுத்த வேண்­டி­யுள்­ளது. அத்­துடன் இலங்கை செலுத்த வேண்­டிய அதி­க­ள­வி­லான கடன் தொகை முன்­னைய ஆட்­சியின் போது பெறப்பட்டதாகும். எனினும் தற்போது மொத்த தேசிய உற்பத்தி ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்துள்ளோம். மேலும் கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீடுகளையும் அதிகரிக்கச் செய்துள்ளோம் என்றார்.

இந்த ஆண்டில் 1.9 ட்ரில்லியன் ரூபாவும், 2019 இல் 4.2 ட்ரில்லியன் ரூபாவும் நாம் கடன் செலுத்த வேண்டியுள்ளது. இந்த ஆண்டில் 1.9 ட்ரில்லியன் ரூபாவும், 2019 இல் 4.2 ட்ரில்லியன் ரூபாவும் நாம் கடன் செலுத்த வேண்டியுள்ளது. Reviewed by Madawala News on March 24, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.