கண்டி வன்முறைகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 183 பேரை கைது செய்துள்ளோம்.


(மொஹொமட்  ஆஸிக்)

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறைகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 183
சந்தேக நபர்கள்கைது செய்யப்பட்டுள்ளதாவும் அவர்கள்தொடர்பில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார  தெரிவித்தார்

கண்டியிலுள்ள ஆளுநர் இல்லத்தில் இன்று 10 ம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இதனைதெரிவித்தார்.


இங்குமேலும் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறும்தெரிவித்தார்.
இச் சம்பவம்கள் தொடர்பாக விசாரித்து  அறிக்கை  ஒன்றை  சமர்ப்பிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதிகள்  மூவரை கொண்ட குழு ஒன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார்.

அவர்களிம் அறிக்கை  விரைவில் கிடைக்கும் அதே போன்று உயிரிழப்புகளுக்கும் சொத்துகளை  இழந்தவர்களுக்கும்  இழப்பீடு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான மதிப்பீடுகளை  எதிர்வரும்வௌளிக் கிழமைக்கு முன் முடிக்குமாரு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.


இச் சம்பவம்தொடர்பில் 183 பேர் இது வரைகைது செய்யப்பட்டுள்ளனர்.

 இன்னும் சிலர்பொலீஸ்நிலையங்களில் முறைப்பாடுகள்  கூடசெய்யாதவர்களும் இருக்கின்றனர். அவ்வாரு முறைப்பாடுசெய்யாதவர்கள் இருப்பார்கள் என்றால் உடன்சென்று முறைப்பாடுகளைசெய்யுமாருவேண்டுகின்றோம்.

இதன பின் இவ்வாரான சம்பவங்கள்  இடம்பெராதிருக்​க  கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பில் கடும் சட்ட நடவடிக்கைகள்மேற்கொள்ள உள்ளோம். இச் சம்பவங்கள் ஓரிரு நாட்களில் மேற்கொள்ளப்பட்டதல்ல.


பல வருடங்களாக சமூக ஊடகங்கள் ஊடாக மக்களின் உனர்வுகள் தூண்டப்பட்டுள்ளது.  இதன் பின் சமூட ஊடகங்கள் சம்பந்தமாக கடும் சட்டங்கள்   நிரை வேற்ற உள்ளோம். நாட்டுக்கு நல்லதனை மற்றும் சமூக ஊடகஙகள் மூலம்செய்யவும்  நாட்டுக்கு  பாதிப்பை  ஏற்படுத்தும்  விதத்தில் அவை பாவிப்பதை தடுக்கும் சட்டம் நிரைவேற்றப்பட உள்ளது, உலகில் மற்றைய நாடுகளில்  இதுதொடர்பாக அமுல் படுத்தப்பட்டுள்ள சட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம்.  என்றும் அவர்  இங்கு தெரிவித்தார்.

2018 03 10  ஆஸிக் -
கண்டி வன்முறைகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 183 பேரை கைது செய்துள்ளோம். கண்டி வன்முறைகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 183 பேரை கைது செய்துள்ளோம். Reviewed by Madawala News on March 11, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.