VIDEO > ஈஸ்டர் தாக்குதலின் சொல்லப்படாத கதை... 8 விடயங்கள் தொடர்பில் தெரிவித்தார் அருட்தந்தை சிறில் காமினி



ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பெற்றுக்கொடுத்த, இதுவரையில் வெளியிடப்படாத தகவல்கள் மற்றும் ஆதாரங்களை அருட்தந்தை சிறில் காமினி இன்று (20) ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

முன்னாள் பொலிஸ் அதிகாரியொருவர் யூடியூப் சேனலுக்கு வழங்கியதாக கூறப்படும் நேர்காணலை மேற்கோள்காட்டி அவர் இவற்றை கூறியுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான வாக்குமூலங்களைப் பெற்றுக கொடுப்பதற்காக, கத்தோலிக்க பத்திரிகையான “ஞானார்த்த பிரதீபய”வின் தலைமை ஆசிரியர் சிறில் காமினி நேற்று (19) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அங்கு சிறில் காமினி கிட்டத்தட்ட 4 மணி நேரம் வாக்குமூலம் அளித்து விட்டு சென்றார்.

அதன் படி, இது தொடர்பான 8 விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிப்பதற்காக அருட்தந்தை சிறில் காமினி இன்று ஊடகவியலாளர் சந்திப்பு அழைப்பு விடுத்திருந்தார்.

கொழும்பு உயர்மறைமாவட்ட ஊடகப் பேச்சாளர் சிறில் காமினி,

"முதலாவது... 2018 நவம்பர் 30 ஆம் திகதியன்று வவுணதீவில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டது மற்றும் அது தொடர்பான விடயங்கள்."

"இரண்டாவது... சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது தெரியவந்த IP முகவரியை யார் பயன்படுத்தினார்கள் என்ற கேள்வி."

"மூன்றாவது... வவுணதீவு சம்பவத்தை தவறாக சித்தரித்த சம்பவம்."

"நான்காவதாக... தெஹிவளையில் தாக்குதல் நடத்தியவரின் கைப்பேசிக்கு வந்த அழைப்பு."

"ஐந்தாவது... தெஹிவளையில் தாக்குதல் நடத்தியவரின் வீட்டிற்குச் சென்ற அதிகாரிகள் யார்?"

இது பற்றிய மேலதிக தகவலுக்கு காணொளியை பார்க்கவும்... 👇🏼👇🏼

VIDEO > ஈஸ்டர் தாக்குதலின் சொல்லப்படாத கதை... 8 விடயங்கள் தொடர்பில் தெரிவித்தார் அருட்தந்தை சிறில் காமினி VIDEO > ஈஸ்டர் தாக்குதலின் சொல்லப்படாத கதை... 8 விடயங்கள் தொடர்பில் தெரிவித்தார் அருட்தந்தை சிறில் காமினி Reviewed by Madawala News on April 20, 2024 Rating: 5

மொபைல் தொலைபேசி தொடர்பில் இரு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் - ஒருவர் தாக்கிக் கொலை



வாழைச்சேனை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கையடக்கத் தொலைபேசி தொடர்பில் இரு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று (19) இரவு இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் 43 வயதுடைய பிறைந்துரைச்சேனை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

கொலையை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
மொபைல் தொலைபேசி தொடர்பில் இரு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் - ஒருவர் தாக்கிக் கொலை மொபைல் தொலைபேசி தொடர்பில் இரு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் - ஒருவர் தாக்கிக் கொலை Reviewed by Madawala News on April 20, 2024 Rating: 5

𝙐𝙂𝘾 யினால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச பல்கலைக்கழகத்தில் ஆங்கில டிப்ளோமா கற்கைநெறி.



𝘿𝙄𝙋𝙇𝙊𝙈𝘼 𝙄𝙉 𝙀𝙉𝙂𝙇𝙄𝙎𝙃: 𝘼𝘾𝘾𝙍𝙀𝘿𝙄𝙏𝙀𝘿 𝘽𝙔 𝘼 𝙐𝙂𝘾 𝙍𝙀𝘾𝙊𝙂𝙉𝙄𝙕𝙀𝘿 𝙐𝙉𝙄𝙑𝙀𝙍𝙎𝙄𝙏𝙔

இலங்கைகை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச பல்கலைக்கழகத்தில் ஆங்கில டிப்ளோமா கற்கைநெறியை கற்பதற்கான விண்ணப்பம் கோரல்
____________

Limited Time Offer: Diploma in English with Free Seats in English Skills Training Courses!

🎓Foundations of English: English Skills Training Course Level 01

🎓 Intermediate English Mastery: English Skills Training Course Level 02


_மட்டுப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு Diploma In English பாடநெறிக்கு மேலதிகமாக Foundations of English, Intermediate English Mastery ஆகிய ஆங்கில பயிற்சி பாடநெறிகளை முற்றிலும் இலவசமாக தொடரும் வாய்ப்பு_
____________

Register Now : Enhance your academic qualifications by enrolling in our 𝘿𝙄𝙋𝙇𝙊𝙈𝘼 𝙄𝙉 𝙀𝙉𝙂𝙇𝙄𝙎𝙃 programme. Don't wait-get in touch with us now!

📲+94762225953 📲 +94788035771
📲 +94743824303 📲 +94766922629

____________

ஆங்கில டிப்ளோமா - UGC அங்கீகாரமிக்க சர்வதேச பல்கலைக்கழகம் வழங்கும் கற்கைநெறி

- தேர்ச்சிமிக்க விரிவுரையாளர்கள்
- கற்பித்தலும் பயிற்றுவிப்பும்
- எளிய தமிழ் விளக்கங்கள்
- ஆன்லைன் மூலமான கற்றல் கற்பித்தல்
- எளிதான தவணை கட்டணத் திட்டம்
- இலவச ஆங்கில திறன் பயிற்சி வகுப்புகள்
- சுவாரஸ்யமான கற்றல் அனுபவம்
- சர்வதேச அங்கீகாரமிக்க சான்றிதழ்

❝ அடிப்படை முதல் ஆங்கில அறிவு, திறன்களை விருத்தி செய்து சர்வதேச தரம்மிக்க பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகளை உருவாக்குவதற்காக ஆங்கிலக் கல்வி வேலைத்திட்டம் ❞
____________

> COMMENCEMENT :20TH MAY, 2024

> CLASS DAYS: MONDAYS & TUESDAYS

> TIME: 7.00 PM TO 9.00 PM

> MEDIUM : BILINGUAL (TAMIL & ENGLISH)

> MODE: HYBRID (ONLINE & ON-CAMPUS)

____________

𝙐𝙂𝘾 𝙍𝙀𝘾𝙊𝙂𝙉𝙄𝙕𝙀𝘿 𝙐𝙉𝙄𝙑𝙀𝙍𝙎𝙄𝙏𝙔 𝘾𝙀𝙍𝙏𝙄𝙁𝙄𝘾𝘼𝙏𝙄𝙊𝙉 / 𝙊𝙉𝙀 𝙔𝙀𝘼𝙍 / 2 𝙎𝙀𝙈𝙀𝙎𝙏𝙀𝙍𝙎 / 30 𝘾𝙍𝙀𝘿𝙄𝙏𝙎
𝙎𝙀𝙈𝙀𝙎𝙏𝙀𝙍 01
01. Introduction to Lexicon, Phonology & Vocabulary Development
02. Listening Skills for English Language
03. English Grammar & Syntax Structure
04. Communication Skills for Social & Professional Interaction
05. Reading Skills - Critical & Extensive Reading

𝙎𝙀𝙈𝙀𝙎𝙏𝙀𝙍 02
01. English Grammar & Syntax Structure
02. Writing Skills for Academic & Business Purpose
03. Introduction to Semantic & Morphology
04. Introduction to Stylistic Divises in English
05. Introduction to Poetry & Drama
____________

📱 𝙍𝙚𝙜𝙞𝙨𝙩𝙚𝙧 𝙉𝙤𝙬 𝙫𝙞𝙖 𝙒𝙝𝙖𝙩𝙨𝘼𝙥𝙥! 📱

📞 +94762225953
📞 +94716237270
📞 +94743824303
📞 +94766922629

Ready to enroll in our Diploma in English program? Simply message us following details:

Your Full Name :
Your Age : 
Your Email Address :

Don't miss this opportunity to enhance your English language skills. Contact us now!

Administration by: 
𝗚𝗥𝗘𝗔𝗧 𝗠𝗜𝗡𝗗𝗦 (𝗣𝗩𝗧) 𝗟𝗧𝗗 
Reg No. PV00223839 
__________________________________________

 🔔Subscribe Our YouTube Channel :*

👁️‍🗨️Follow Our Facebook Page :* 

🪀 Join Our WhatsApp Channel:
𝙐𝙂𝘾 யினால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச பல்கலைக்கழகத்தில் ஆங்கில டிப்ளோமா கற்கைநெறி. 𝙐𝙂𝘾 யினால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச பல்கலைக்கழகத்தில் ஆங்கில டிப்ளோமா கற்கைநெறி. Reviewed by Madawala News on April 20, 2024 Rating: 5

மீண்டும் தேசியத்தில் சான்றிதழ், பணப்பரிசு வென்ற ஓட்டமாவடி யஸீர் அறபாத்



எதிர்கால இலங்கை என்பதை இலக்காகக்கொண்டு "நாளை வெல்லும் இலங்கை" எனும் கருப்பொருளில் டென்னிசன் & வினிதா ரோட்றிகோ அறக்கட்டளை (Tennyson & Vinitha Rodrigo Trust) யினால் தேசிய ரீதியாக மும்மொழிகளிலும் நடாத்தப்பட்ட போட்டியின் வெற்றியாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு  அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப லோடஸ் அரங்கில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில், தமிழ்மொழி மூல ஒளிப்பதிவு, கட்டுரைப்போட்டியில் "சமூகத்தின் மத்தியில் நேர்மை, கண்ணியம் மற்றும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தல்" எனும் தலைப்பில் கட்டுரைப்போட்டியில் ஓட்டமாவடியைச்சேந்த இளங்கலைமாணி பட்டதாரி எம்.என்.முஹம்மது யஸீர் அறபாத் முன்றாமிடத்தைப்பிடித்து, சான்றிதழ் மற்றும் 75,000 ரூபா பணப்பரிசையும் பெற்றுக்கொண்டார்.

தமிழ்மொழிப்போட்டியில் பங்குபற்றிய போட்டியாளர்களின் ஆக்கங்களைப் பரிசீலிக்க  ஆரம்பகட்ட நடுவர்களாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைபீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி டி.அஜந்த குமார், யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைபீட விரிவுரையாளர் திரு.சாமிநாதன் விமல், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தமிழ் செய்திப்பிரிவின் பணிப்பாளர் வை.எல்.யாகூப், வீரகேசரி பத்திரிகையின் உதவிச்செய்தி ஆசிரியர் திரு.லியோ நிரோசா தர்சன் போன்றவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

தொடர்ந்து தெரிவு செய்யப்பட்டவர்களை Google Meet செயலியூடாகப் பரீட்சித்து வெற்றியாளர்களை தெரிவு செய்வதில் இறுதிக்கட்ட நடுவர்களாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை சிரேஷ்ட பேராசிரியர் கே.அமிர்தலிங்கம், கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல்துறை பேராசிரியர் முஹம்மட் மாஹீஸ் ஆகியோர் கடமையாற்றினர்.
மீண்டும் தேசியத்தில் சான்றிதழ், பணப்பரிசு வென்ற ஓட்டமாவடி யஸீர் அறபாத் மீண்டும் தேசியத்தில் சான்றிதழ், பணப்பரிசு வென்ற ஓட்டமாவடி யஸீர் அறபாத் Reviewed by Madawala News on April 20, 2024 Rating: 5

சுற்றுலா பயணிகளுக்கு அதிக விலைக்கு உணவு விற்பனை செய்வதை பிடிக்க விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை



சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் இடங்களில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை, நுகர்வோர் அதிகார சபை மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சஞ்சய் இரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு காலிமுகத்திடல், புதுக்கடை , பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி மற்றும் எல்ல ஆகிய பகுதிகளில் இரவு வேளைகளில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

சுற்றுலா பயணிகளுக்கு அதிக விலைக்கு உணவு விற்பனை செய்வது உள்ளிட்ட சம்பவங்கள் பதிவாகி வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சுற்றுலா பயணிகளுக்கு அதிக விலைக்கு உணவு விற்பனை செய்வதை பிடிக்க விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை சுற்றுலா பயணிகளுக்கு அதிக விலைக்கு உணவு விற்பனை செய்வதை பிடிக்க விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை Reviewed by Madawala News on April 19, 2024 Rating: 5

மதங்களை அவமதிக்கும் குழு ஒன்று உருவாகியுள்ளது - போதி மரம் பயனற்ற மரம் என பிரச்சாரம் செய்து வருகின்றனர் ; சஜித்



பௌத்தம் உள்ளிட்ட அனைத்து மதங்களையும் பின்பற்றும் நாட்டின் குடிமக்களையும், அவர்களின் மதத்தைப் பின்பற்றும் உரிமையைப் பறிக்கும் ஒரு பிரிவினர் தற்போது நாட்டில் உருவாகி வருகின்றனர். போதி மரம் பயனற்ற மரம் என ஒரு குறிப்பிட்ட குழுவினர் நாட்டில் பிரசாரம் செய்து வருகின்றனர். இவ்வாறு புத்தசாசனம், பௌத்த மதம், மகா சங்கரத்தினர் மற்றும் கௌத்தம புத்தரை அவமதிக்கும் குழுவொன்று நாட்டில் உருவாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அவர்களைப் பொறுத்த வரை, விகாரைகளுக்கு உதவிகள் செய்வதும், சிலைகளை வழிபடுவதும் ஏற்கத்தக்கது அல்ல என்று கூறி வருகின்றனர், இது தவறா என்று மக்களிடம் கேள்வி எழுப்புகிறேன், அவர்களின் கருத்துப்படி, இன்றும் தான் ஒரு பெரிய தவறையே செய்து வருகிறேன், இந்நாட்டில் மத சுதந்திரம் இருக்க வேண்டும். நாட்டில் உள்ள 220 இலட்சம் மக்களும் தாங்கள் நம்பும் மதத்தை கடைப்பிடிக்கும் சுதந்திரம் இருக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த பொய்ப் பிரச்சாரங்களை பரப்பும் நபர்களுக்கு மதத்தில் நம்பிக்கை இல்லை என்று கூறி நாட்டில் மதங்களைப் பின்பற்றும் மக்களுக்கு இடையூறு விளைவிக்க எந்த உரிமையும் இல்லை. மத சுதந்திரம் அடிப்படை உரிமையாகும். 220 இலட்சம் மக்களுக்கும் தமக்கு விருப்பமான மதத்தை பின்பற்றும் உரிமை உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.
மதத்தை தடை செய்து, மத உரிமைகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் சக்திகளுக்கு நாட்டில் இடமில்லை. புத்தருக்கு புத்தர் நிலையை வழங்கிய போதிமரம் வெறும் போதிமரம் என்று சொல்பவர்களுக்கு, மதச்சார்பற்றவர்கள் என கூறிக் கொண்டு, பௌத்தத்தை இழிவுபடுத்த எந்த உரிமையும் இல்லை. அவர்களின் மதச்சார்பற்ற கொள்கைகள் ஏனைய குடிமக்களை பாதிக்காத வகையில் கடைப்பிடிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களினால் முன்னெடுக்கப்படும் ‘சசுனட அருண’ வேலைத்திட்டத்தின் கீழ் திஸ்ஸமஹாராம கொஹொமபகஹபெலெஸ்ஸ ஸ்ரீ சுபோதாராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் சங்கவாச கட்டிட நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்யத் தேவையான, 750,000 ரூபா பெறுமதியான சீமெந்து மற்றும் அஸ்பெஸ்டஸ் உதவிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் (17) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். 535,187 ரூபா மதிப்பிலான 99 அஸ்பெஸ்டஸ்களும், 220,000 ரூபா மதிப்புள்ள 100 சிமெந்து மூடைகளும் இதன் போது அன்பளிப்புச் செய்யப்பட்டன.

எந்த மதத்தையும் பின்பற்றும் உரிமை மக்களுக்கு உண்டு,

மக்கள் தாங்கள் நம்பும் மதத்தை கடைப்பிடிக்கும் முழு உரிமையை ஐக்கிய மக்கள் சக்தி பாதுகாக்கும். தான் ஒரு பௌத்தராக, விகாரைகளுக்கும் ஏனைய மத ஸ்தலங்களுக்கும் உதவி செய்யும் சுதந்திரம் தமக்குள்ளதாகவும், இந்த சுதந்திரத்தில் தலையிடவோ, அவமதிக்கவோ யாருக்கும் உரிமை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மதத்தை மனதில் வைத்து அரசியல் செய்யாதீர்கள்!

உண்மையான பௌத்தராகிய நான் இன, மத பேதமின்றி அனைவருடனும் இணைந்து ஒற்றுமையாக செயற்பட்டு வருகின்றேன். இந்த ஒற்றுமை, நல்லிணக்கம், நட்புறவு என்பன நாட்டின் பலமாகும், மதத்தையும் இனத்தையும் பயன்படுத்தி வாக்குகளைப் பெறுவது நாட்டின் தலைமைத்துவம் அல்ல, அவற்றைப் பாதுகாப்பதே உண்மையான தலைவரின் அடையாளம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பௌத்த மதத்தையோ, சம்புத்த சாசனத்தையோ அல்லது வேறு எந்த மதத்தையோ இழிவுபடுத்துவது, மத சுதந்திரத்தில் தலையிடுவதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கலாசார அலுவல்கள் அமைச்சராக இருந்து நாட்டின் மத ஸ்தலங்களுக்கு பல பணிகளை தான் செய்திருந்தாலும், நாட்டுக்கு நல்ல பௌத்தர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என மக்கள் நினைத்து 2019 இல் போலி பௌத்த தலைவர் ஒருவரை நியமித்தனர்.

அவர் வெற்றி பெற்றதும், உடனே அமுலுக்கு வரும் வகையில் கலாசார அலுவல்கள் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வந்த வேலைத்திட்டங்கள் மற்றும் சிசு தஹம் செவன வேலைத்திட்டத்தின் கீழ் அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயிரம் ஞாயிறு போதனா பாடசாலை மண்டப நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டன. தான் நாட்டில் இதுவரை 13 சைதிகளை நிர்மாணித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மதங்களை அவமதிக்கும் குழு ஒன்று உருவாகியுள்ளது - போதி மரம் பயனற்ற மரம் என பிரச்சாரம் செய்து வருகின்றனர் ; சஜித் மதங்களை அவமதிக்கும் குழு ஒன்று உருவாகியுள்ளது - போதி மரம் பயனற்ற மரம் என பிரச்சாரம் செய்து வருகின்றனர் ; சஜித் Reviewed by Madawala News on April 19, 2024 Rating: 5

இலங்கையில் கடந்த வருடங்களில் அதிகளவில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணம் மாரடைப்பே என அறிக்கை.



இலங்கையில் கடந்த வருடங்களில் அதிகளவில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணம் மாரடைப்பு என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அத்தோடு, 2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணமும் மாரடைப்பு என்று சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதுமட்டுமன்றி, மாரடைப்பு ஏற்படுவதற்கு பிரதான காரணங்களாக ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள், உடல் உறுப்புகளின் செயற்பாடுகள் பற்றிய கவனமின்மை, புகையிலை , போதைப்பொருள் பாவனை மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களினால் மாரடைப்பு ஏற்படுவதாகவும் சுகாதாரத் துறை திணைக்களம் சுட்டிகாட்டியுள்ளது.
இலங்கையில் கடந்த வருடங்களில் அதிகளவில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணம் மாரடைப்பே என அறிக்கை. இலங்கையில் கடந்த வருடங்களில் அதிகளவில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணம் மாரடைப்பே என அறிக்கை. Reviewed by Madawala News on April 19, 2024 Rating: 5

இஸ்ரேலிய ஏவுகணைகள் ஈரானில் உள்ள தளத்தை தாக்கின.



ஈரானில் உள்ள ஒரு பகுதியில் இஸ்ரேலிய ஏவுகணைகள் தாக்குதல் நடத்தி உள்ளதாக ABC செய்திக்கு அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

சிரியா மற்றும் ஈராக் தளங்களும் தாக்கப்பட்டதா என்பதை அதிகாரியால் உறுதிப்படுத்த முடியவில்லை.

An explosion was heard close to the airport in the Iranian city of Isfahan, the Iranian semi-official FARS news agency reported early Friday morning, citing local sources.

சென்ற வாரம் இஸ்ரேல் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகனை தாக்குதலை மேற்கொண்ட நிலையில் அதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் இஸ்ரேலால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய ஏவுகணைகள் ஈரானில் உள்ள தளத்தை தாக்கின. இஸ்ரேலிய ஏவுகணைகள் ஈரானில் உள்ள தளத்தை தாக்கின. Reviewed by Madawala News on April 19, 2024 Rating: 5

நாட்டில் புரட்சிகரமான மாற்றத்தை கொண்டுவர, 10 வருடங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாட்டின் தலைமைப் பதவிக்கு நியமிக்க தேவையான ஆதரவையும் வழங்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் தெரிவிப்பு.



இந்நாட்டின் இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கையை உருவாக்க முடியும் என்ற உறுதியான நம்பிக்கை தனக்கு இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

வீழ்ச்சியடைந்த இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவது கடினமானது எனப் பலரும் கூறியபோதும் அந்த சவாலை ஏற்றுக்கொண்டு, இரண்டு வருடங்களுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்குக் கொண்டு வந்ததாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு ஒற்றுமை ஒன்றே தேவையெனவும் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இளம் அரசியல் பிரதிநிதிகளுடன் இன்று (18) நுவரெலியா ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

நுவரெலியா, ஹங்குரங்கெத்த, மஸ்கெலியா, கொத்மலை மற்றும் வலப்பனை ஆகிய தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல கட்சிகளின் இளைஞர் பிரதிநிதிகள் குழுவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்ததுடன், நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடினர்.

நுவரெலியா மாவட்டத்தை சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் பிரதேசமாக அபிவிருத்தி செய்வதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை சிலர் விமர்சித்து வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அபிவிருத்தித் திட்டத்திற்கு அனைவரினதும் ஆதரவு கிடைத்தால் அந்த திட்டங்களை நாட்டின் பொருளாதாரத்தில் திருப்புமுனையாக மாற்ற முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.

பழமையான அரசியலில் ஈடுபட்டு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது எனவும், நாட்டுக்கு தேவையான முதலீடுகளை ஈர்த்து நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அனைவரும் இணக்கமாக செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் சரியான பொருளாதார வேலைத்திட்டத்துடன் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார ஸ்தீரத்தன்மையினால் இந்த வருடம் மக்கள் சிங்கள, தமிழ் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடியதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று சகல துறைகளிலும் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வோடு, மக்களின் வருமான மூலங்களும் அதிகரித்து வருவதாகவும், இந்த பயன் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் தெரிவித்தார்.

இளம் அரசியல்வாதிகள் என்ற ரீதியில் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் தெரிவித்த அவர்கள், நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பான தமது முன்மொழிவுகளையும் முன்வைத்தனர்.

இளைஞர் சமூகத்தை வலுவூட்டுவதற்காக ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் பிராந்திய இளைஞர் நிலையங்களை நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அப்பிரதேச இளைஞர் மையங்கள் மூலம் இளம் தொழில் முனைவோரை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்காக வங்கிக் கிளைகளின் முதன்மை அலுவலர்கள் மற்றும் வர்த்தக சங்க உறுப்பினர்களை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய

நுவரெலியா மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற வேட்பாளர் அசோக ஹேரத்,

தாம் வேறொரு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்கின்றேன் எனவும் தான் அந்த வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார்.


ரணில் விக்கிரமசிங்க பிரதமராக 2001ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2025ஆம் ஆண்டு நிறைவடையவிருந்த “யழி புபுதமு ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தை வெற்றியடைய அனைவரும் ஆதரித்திருந்தால் இன்று இலங்கை அபிவிருத்தியடைந்த நாடாக மாறியிருக்கும் என சுட்டிக்காட்டிய அவர், அன்று அதனை எதிர்த்த தரப்பினர் தற்போது ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் 2048 அபிவிருத்தியடைந்த நாடு வேலைத்திட்டத்திற்கு குழிபறிப்பதாகவும் தெரிவித்தார்.


அடுத்த 02 வருடங்களில் நாட்டில் புரட்சிகரமான மாற்றத்தை மேற்கொண்டுவர 10 வருடங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாட்டின் தலைமைப் பதவிக்கு நியமிக்க தேவையான ஆதரவை வழங்குவோம் என அசோக ஹேரத் மேலும் குறிப்பிட்டார்.


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. பியதாச மற்றும் நுவரெலியா மகாநகர சபையின் முன்னாள் மேயர் சந்தன லால் கருணாரத்ன மற்றும் முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச இளம் அரசியல்வாதிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நாட்டில் புரட்சிகரமான மாற்றத்தை கொண்டுவர, 10 வருடங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாட்டின் தலைமைப் பதவிக்கு நியமிக்க தேவையான ஆதரவையும் வழங்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் தெரிவிப்பு. நாட்டில் புரட்சிகரமான மாற்றத்தை கொண்டுவர, 10 வருடங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாட்டின் தலைமைப் பதவிக்கு நியமிக்க தேவையான ஆதரவையும் வழங்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் தெரிவிப்பு. Reviewed by Madawala News on April 19, 2024 Rating: 5

போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த குற்றத்தில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது



போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த சந்தேகத்தின் பேரில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (18) கைது செய்துள்ளனர்.

மாவத்தகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் தொருட்டியாவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய சார்ஜன்ட் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த குற்றத்தில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த குற்றத்தில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது Reviewed by Madawala News on April 19, 2024 Rating: 5

காரியாக வேண்டும் என்ற எண்ணத்துடன் பயணித்த மகனை, ஹாபிழாக அல்லாஹ் அழைத்துக் கொண்டான்



காரியாக வேண்டும் என்ற எண்ணத்துடன் பயணித்த எனது மகனை ஹாபிழாக அல்லாஹ் அழைத்துக் கொண்டான்.


கடந்த நோன்பு பெருநாளன்று தொழுகைக்கு அழைத்துச் சென்ற எனது மகனை மறுநாளே அல்லாஹ் அழைத்துக்கொண்டான்.

ஏறாவூர், மக்காமடி குறுக்கு வீதியில், அலிகார் விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் தனது வீட்டோடு சேர்த்து "அல்தாப் பேக்கரி"யையும் நடாத்தி வரும் சலீம், மஜ்மூனா தம்பதியர்களின் மூன்று மகன்களில் இரண்டாவது பிறந்தவர்தான் அல் ஹாபிழ் முஹம்மது அஹ்ஷன்.

இவர் தனது ஆரம்பக் கல்வியை ஏறாவூர் அல் அஸ்ஹர் பாடசாலையில் ஐந்தாம் ஆண்டு வரை கற்று ஆறாம் ஆண்டுக்கு அலிகார் தேசிய பாடசாலைக்கு சென்று.. மூன்று மாதங்களில், தனது தந்தையிடம் அச்சத்துடன் விடயமொன்றை தெரிவித்திருக்கிறார்.

அதாவது, "என்னால் தொடர்ந்து பாடசாலைக் கல்வியை கற்க முடியாது, நான் "குர்ஆனை மனனமிட்டு ஹாபிஸாஹி, காரியாக வரவேண்டும்" என்ற ஆசையே எனக்குள் இருக்கிறது வாப்பா "என்று சொல்லியிருக்கிறார்.

தந்தையும் மகனின் ஆசைக்கு தடைவிதிக்காது ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள (மர்கஸ்) அல் பாக்கியதுஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரியில் மகனின் ஆசைப்படியே 13 வயதில் ஹிப்ழு வகுப்பில் இணைத்து விடுகிறார்.

காலம் உருண்டோடுகிறது.மூன்று வருடமாகிய போதும் மகன் 15 ஜுஸ் களை மாத்திரமே மனப்பாடம் செய்திருந்ததால், அரபுக் கல்லூரி நிர்வாகம் தந்தையை அழைத்து, மூன்று வருடத்துக்குள் உங்க மகன் முழு குர்ஆனையும் மனனமிடாததால், கல்லூரி விதிமுறைகளின் படி உங்கள் மகனை தொடர்ந்து ஹிப்ழு வகுப்பில் வைத்துக்கொள்ளாது, கிதாப் வகுப்பில் சேர்க்கப்போகிறோம் என்று சொன்னதும், மகனிடம் விடயத்தை தெரிவித்தபோது, "என்னால் தற்போதைக்கு கிதாப் வகுப்புக்கு செல்ல முடியாது, எப்படியோ நான் ஹாபிஸாகி காரியாகுவேன் வாப்பா" என்றதும் வாப்பாவுக்கும் மத்ரஸாவுக்குமிடையில் வேதனையுடன் மசூராக்கள் பகிரப்பட்ட வேளை, கல்லூரியின் விதிமுறைகள் அப்படித்தான் இருந்தாலும், இவரது மகன் முஹம்மது அஹ்ஷனை என்னிடம் பாரம் தாருங்கள், குர்ஆனை முழுமையாக மனனமாக்கி கொடுக்க நான் முயற்சிக்கிறேன் என அங்கிருந்த லௌ ஹாபிழ் அப்துல் றஊப் மௌலவி என்பவர் சொல்ல , சபை ஏகமானதாக முடிவெடுத்து அம் மௌலவியிடமே மகனை பாரப்படுத்தியது.

மிகுந்த ஆர்வத்துடன் இருந்த எனது மகனுக்கு இம் மௌலவியின் செயற்பாடு மகிழ்வை கொடுத்ததால் நானும் அவ்வாறே சம்மதித்து, அம் மௌலவியிடம் வாக்குறுதியொன்றும் சொல்லிவிட்டு வீடு திரும்பினேன்.

அதாவது, "எனது மகன் ஹாபிஸானதும் மகனையும் உங்களையும் உம்ராவுக்கு அழைத்துச் செல்வேன் " என்பதே அந்த வாக்குறுதியாகும்.

அல்ஹம்துலில்லாஹ்! நான்காவது வருடத்திலேயே எனது மகன் குர்ஆன் முழுவதும் மனனமிட்டு ஹாபிஸானார்.அப்போதும் எனது மகன், நான் காரியாகுவேன் வாப்பா என்று சொல்லி என்னை மேலும் சந்தோசப்படுத்தினார்.

எனது மகன் பெற்றோர் சொல்லை மதிக்கக் கூடியவராகவே இருந்ததோடு மாத்திரமல்லாமல் பெற்றோர் விரும்பி எடுத்துக் கொடுக்கும் ஆடைகளையே விரும்பி அணிபவராகவும் இருந்தார்.ஒரு நாளும் அவரது விருப்பத்திற்கு பெருநாள் தினங்களில் கூட புத்தாடை வாங்க செல்லமாட்டார்.

மகன் ஹாபிஸான மகிழ்வுடன் நோன்புக்கு முன்பாகவே உம்ராவுக்கு செல்ல ஆயத்தமாகி நானும் ,மகனும் ,மௌலவியுமாக புனித பயணத்தை 13/03/2024 அன்று ஆரம்பித்தோம்.

இங்கிருந்து செல்லும் போது மகனுக்கு சிறிது இருமல் இருந்தது.மக்கா சென்றதும் இருமல் அதிகரித்து தவாப் செய்யும் போதெல்லாம் வேகத்தை குறைத்தே நடந்து செல்வதை அவதானித்து கவலையடைந்தேன்.

இருமலுக்கான மருந்துகளை உபயோகித்தும் இருமல் குறைந்ததாகயில்லை.

இவ்வாறிருக்க மதீனாவுக்கு செல்ல ஆயத்தமான போது ,எனது மகனின் இருமலினால் ஏனையோருக்கு அசௌகரியம் வரக்கூடாது என நினைத்தும், மகனின் உடல்நிலை நலிவுற்று காணப்பட்டதாலும் சவூதியில் தொழில் செய்துவரும் ஏறாவூரை சேர்ந்த சகோதரர் அன்வர் என்பவரது வாகனத்தில் மதீனா சென்றோம்.
மதீனாவில் வைத்து எனது மகன் முதன்முதலில் ஆசைப்பட்டு ஜுப்பாவுக்கான துணியொன்றையும் பெற்றுக்கொண்டு அதனை பெருநாளைக்கு தைத்து போட வேண்டுமென்றும் சொல்லிக்கொண்டார்.

மதீனாவில் நின்ற நாட்களிலெல்லாம் மகனின் உடல் நிலையில் மாற்றம் காணப்படாததால் அல்லாஹ் உதவியால் 26/03/2024 அன்று நாடு திரும்பியதும் ஏறாவூர் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற்ற பின் மீண்டும் மத்ரஸாவுக்கு சென்றுவிட்டார். மூன்று நோன்பினை மத்ரஸாவில் வைத்து பிடித்த எனது மகனுக்கு, இருமலுடன் உடல் வலி அதிகரிப்பால் தொடர்ந்து நோன்பு நோற்க முடியாமல் வீட்டுக்கு அழைத்து வந்தேன்.

நாளுக்கு நாள் மகனின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது, மகனின் சுவாசப்பைக்கு அருகில் வளர்ந்திருக்கும் கட்டியொன்றை சத்திரசிகிச்சை மூலம் அகற்றி அதனை பகுப்பாய்வுக்கு உட்படுத்தி முடிவினை அறிவிக்கிறோம் என சொன்னதும் சுமார் இருவாரம் கழித்து வீட்டுக்கு வந்தோம்.

நோன்பு பெருநாள் 10/04/2024 புதனன்று வந்ததும், பெருநாள் தொழுகைக்காக மர்கஸுக்கே அழைத்துச் செல்லுங்கள் வாப்பா, என்றதும் அவ்வாறே அழைத்துச் சென்று தொழுகை முடிந்து வீடு திரும்பியிருந்த வேளை, கொழும்பு தனியார் வைத்தியசாலையிலிருந்து எனது மகனின் வைத்திய பரிசீலனையின் முடிவு குறுந்தகவல் மூலம் வந்திருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனேன்.

அல்லாஹ் விடம் விடயத்தை பாரப்படுத்திவிட்டு ,பெருநாள் கழித்து சிகிச்சைகளை தொடர்வோம் என்றிருக்கையில் மறுநாளே (11/04) எனது மகனை அல்லாஹ் அழைத்துக் கொண்டான்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.

எனது மகனுக்கு ஏற்பட்டிருப்பது "குருதிப்புற்று நோய் "என அடையாளம் கண்டபின்பு மேலதிக சிகிச்சை பெறும் முன்பே தொடரான வேதனையை வழங்காமல் அல்லாஹ் அழைத்துக்கொண்டான் என விழிநீர் ததும்ப மர்கூம் ஹாபிஸ் அஹ்ஸனின் தந்தை தெரிவித்தார்.

ஜனாசா நல்லடக்கம் அன்றைய தினம் ளுகர் தொழுகையை தொடர்ந்து ஏறாவூர் நூறுஸ்ஸலாம் மஸ்ஜிதில் பெருந்திரளான உலமாக்கள், ஹாபிழ்கள், பொதுமக்கள் பங்கு பற்றுதலுடன் நடைபெற்றது.

13 வயதிலிருந்து மரணிக்கும் வரை நல் அமல்களுடன் மாத்திரமே தனது நேரகாலத்தை கழித்த ,
மர்ஹும் அல் ஹாபிழ் முஹம்மது அஹ்ஷனின் பாவங்களை மன்னித்து மறுமை வாழ்வு சிறப்பாக அமைய அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதோடு , மகனை இழந்து தவிக்கும் பெற்றோருக்கும் உறவுகளுக்கும் மன ஆறுதலை வழங்கவும் பிரார்த்திப்போம்.

(உம்ராவுக்கு செல்லும் போது மாபோளை பள்ளிவாசலில் வைத்து இஹ்ராம் ஆடையுடன் பிடிக்கப்பட்ட படங்களே இவைகள்)

(ஏறாவூர் நஸீர்)
காரியாக வேண்டும் என்ற எண்ணத்துடன் பயணித்த மகனை, ஹாபிழாக அல்லாஹ் அழைத்துக் கொண்டான் காரியாக வேண்டும் என்ற எண்ணத்துடன் பயணித்த மகனை, ஹாபிழாக அல்லாஹ் அழைத்துக் கொண்டான் Reviewed by Madawala News on April 18, 2024 Rating: 5

நாட்டில் சோம்பேறிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு



தொற்று அல்லாத நோய்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சமூக வைத்திய நிபுணர் டாக்டர் ஷெரீன் பாலசிங்க இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கையில் சும்மா இருப்பவர்களின் சனத்தொகை வீதம் 30% இலிருந்து 35% ஆக அதிகரித்துள்ளதாகவும் இதன் காரணமாக தொற்று நோய்கள் வேகமாக அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

உங்கள் மீது
நாட்டில் சோம்பேறிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு நாட்டில் சோம்பேறிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு Reviewed by Madawala News on April 18, 2024 Rating: 5

வெளிநாட்டுப் பிரஜைக்கு 800 ரூபாவுக்கு ‘வடையும், தேநீரும் கொடுத்தவர் கைது.



சமூக ஊடக வீடியோவில் வைரலான,
களுத்துறை உணவகத்தில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவருக்கு ‘வடையும் ஒரு தேநீரையும் ’ கொடுத்து 800 ரூபா பெற்ற இடைத்தரகர் ஒருவரை சுற்றுலாப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், உணவகத்தின் உரிமையாளருக்கு எதிராக தனி வழக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

வெளிநாட்டுப் பிரஜைக்கு 800 ரூபாவுக்கு ‘வடையும், தேநீரும் கொடுத்தவர் கைது. வெளிநாட்டுப் பிரஜைக்கு 800 ரூபாவுக்கு ‘வடையும், தேநீரும் கொடுத்தவர் கைது. Reviewed by Madawala News on April 18, 2024 Rating: 5

ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை 15 ரூபாவாகவும், போஞ்சி 40 ரூபாவாகவும் குறைந்தது.



தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை நேற்று (17ஆம் திகதி) 15 ரூபாவாக குறைந்திருந்தது.

மேலும், ஒரு கிலோ போஞ்சி மொத்த விலை 40 ரூபாய் வரையும், முள்ளங்கி ஒரு கிலோ மொத்த விற்பனை விலை 35 ரூபாய் வரையும், ஒரு கிலோ கெக்கிரி மற்றும் வெள்ளரி மொத்த விற்பனை விலை 20 ரூபாய் வரையும், மொத்த விலை ஒரு கிலோ வெண்டைக்காய் 40 ரூபாவாகவும், ஒரு கிலோ வெண்டைக்காய், கானாங்கெளுத்தி, பீக்கங்காய் ஆகியவற்றின் மொத்த விலை 50 ரூபாவாகவும் குறைந்துள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு விவசாயிகள் மரக்கறிகளை கொண்டு வந்த போதிலும், வியாபாரிகள் மரக்கறிகளை கொள்வனவு செய்ய வராததால் விலை பெருமளவு குறைந்துள்ளது.


தம்புள்ளையில் ஒரு கிலோ தக்காளி 15 ரூபாவாக குறைந்திருந்த போதிலும், நேற்று (17ம் திகதி) புறக்கோட்டை மரக்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி 100 முதல் 150 ரூபா வரை சில்லறை விலையில் விற்பனை செய்யப்பட்டது.

புறக்கோட்டை காய்கறி மார்க்கெட்டில் பீன்ஸ் கிலோ 120 ரூபாய்க்கும், கேரட் கிலோ 300 ரூபாய்க்கும், கருவேப்பிலை கிலோ 100 ரூபாய்க்கும், கத்தரி கிலோ 180 ரூபாய்க்கும் விற்பனையானது.

ஆனால், நேற்று புறக்கோட்டை சந்தையில் சில்லறை விற்பனை சந்தையில் காய்கறிகளுக்கான தேவை குறைந்துள்ளது
ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை 15 ரூபாவாகவும், போஞ்சி 40 ரூபாவாகவும் குறைந்தது. ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை 15 ரூபாவாகவும், போஞ்சி 40 ரூபாவாகவும் குறைந்தது. Reviewed by Madawala News on April 18, 2024 Rating: 5

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விரோதமாக செயற்படுபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த டயானா கமகே.



இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விரோதமாக செயற்படுபவர்களுக்கு எதிராக உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே எச்சரித்துள்ளார்.

அண்மையில் விற்பனையாளர் ஒருவர் சுற்றுலாப் பயணி ஒருவருக்கு அதிக விலைக்குக் கொத்து ரொட்டியை விற்பனை செய்ய முயன்ற விவகாரம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.



தற்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் முட்டாள்கள் அல்ல, அவர்களை ஏமாற்ற முடியாது எனக் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், விருந்தோம்பல், நட்புறவு மிக்க சுற்றுலாத் தலமாக உள்ள இலங்கையின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தவேண்டாம் என்று கோரியுள்ளார்.

அத்துடன் ஏனைய சக வர்த்தகர்களின் வாழ்வாதாரத்துக்கும் தீங்கு விளைவிக்காமல் இதுபோன்ற நடத்தைகளில் ஈடுபடவேண்டாம் என்றும் அவர் வர்த்தகர்களை வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விரோதமாக செயற்படுபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த டயானா கமகே. இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விரோதமாக செயற்படுபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த டயானா கமகே. Reviewed by Madawala News on April 18, 2024 Rating: 5

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கும், குற்றவாளிகளுக்கும் எமது அரசாங்கத்தில் தகுந்த தண்டனை வழங்கப்படும் ; தேசிய மக்கள் சக்தி உறுதிமொழி வழங்கியது.



ஈஸ்டர் குண்டுவெடிப்பு என்பது நாடுகளுக்கு இடையே ஒற்றுமையின்மையை உருவாக்கி, இனக் கலவரங்களை ஏற்படுத்தி, மக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் பெரும் சேதம் விளைவித்து, குறுகிய அரசியல் நோக்கத்தை அடைவதற்காக நடத்தப்பட்ட சதியே ஆகும் 2019 ஏப்ரல் 21, அன்று ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் சூத்திரதாரிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் எமது ஆட்சியில் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என்று ​பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் அறிவித்துள்ளது,


இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில்,

2019ஏப்ரல் 21, அன்று (ஈஸ்டர் ஞாயிறு) நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க தேசிய மக்கள் சக்தியின் உறுதிமொழி.

ஈஸ்டர் ஞாயிறு அன்று கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ யாத்ரீகர்களைக் குறிவைத்து தீவிரவாதிகள் குழு நடத்திய கொடூரமான தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடந்து இன்றுடன் ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. அந்த மோசமான நாளில், மூன்று தேவாலயங்கள் மற்றும் பல சுற்றுலா ஹோட்டல்கள் மீதான மனிதாபிமானமற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கிறிஸ்தவ/கத்தோலிக்க யாத்ரீகர்கள் உட்பட இருநூற்று எழுபத்து மூன்று (273) பேர் உயிரிழந்தனர் மற்றும் ஐநூறுக்கும் மேற்பட்டோர் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஊனமுற்றுள்ளனர்.

உயிரிழந்த உயிர்கள், தாக்குதலில் ஆதரவற்ற குடும்பத்தினர் மற்றும் தாக்குதலால் அழிந்த உடைமைகளுக்கு அரசாங்கமே பொறுப்பு என்பதை தேசிய மக்கள் சக்தி மக்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறது. அந்த பொறுப்பு இதுவரை சரியாக நிறைவேற்றப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் அந்த விடயங்கள் தொடர்பான சட்டத்தை முறையாக அமுல்படுத்தி, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குதலை மேற்கொண்டோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமென வலியுறுத்தியுள்ளோம்.


1. ஈஸ்டர் குண்டுவெடிப்பு என்பது நாடுகளுக்கிடையே முரண்பாட்டை உருவாக்கி, இனவெறிக் கலவரங்களைத் தூண்டி, பெரும் உயிரிழப்புகளையும், சொத்துக்களையும் ஏற்படுத்துவதன் மூலம் குறுகிய அரசியல் நோக்கத்தை அடையச் செய்து, குற்றத்தின் மூளையாகச் செயல்பட்டவர்களையும், திட்டமிடுபவர்களையும் நீதியின் முன் நிறுத்துவோம்.


2. ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்கத் தவறியவர்கள், தாக்குதலை நடத்துவதற்கு முன், அது குறித்த சரியான தகவல்களைப் பெற்று, தாக்குதல் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளைத் திசைதிருப்பியவர்கள், உண்மையான சதிகாரர்களைப் பாதுகாக்க, உண்மையாகப் பொறுப்பான தரப்பினரை அடையாளம் கண்டு, கைது செய்யப்பட்ட பாதுகாப்புப் படை அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை மற்றும் அதற்குப் பொறுப்பான ஒவ்வேர் அரசியல் அதிகாரம் உட்பட ஏனைய அதிகாரிகளையும் நீதியின் முன் நிறுத்துவதற்கு, அவர்களுக்கு எதிராகத் தாக்குதல் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


3. மேலும், ஈஸ்டர் பண்டிகையால் பாதிக்கப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை வழக்குகளில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட அரசியல் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு,

ii ஏற்கனவே ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளில் உள்ளடக்கப்பட்டுள்ள அரசியல் அதிகாரங்கள் மற்றும் அரச அதிகாரிகள், பதவி வேறுபாடின்றி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

iii எதிர்காலத்தில் ஒரு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் நடத்தப்படும் இந்த கொடூரமான தாக்குதல் தொடர்பாக நியமிக்கப்படும் சிறப்பு விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், பொறுப்பான அரசியல் அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும்.

4. இத்தாக்குதல் தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகளை முன்னுரிமை அடிப்படையில் விரைவில் விசாரித்து முடிக்கவும், அதற்குத் தேவையான வசதிகளை வழங்கவும் சம்பந்தப்பட்ட துறைகளைக் கேட்டுக் கொள்வது.

5. இத்தாக்குதல் தொடர்பாக நாட்டிலிருந்து தப்பிச் சென்ற குற்றவாளிகள் அனைவரையும் அழைத்து வந்து அவர்கள் மூலம் இந்தத் தாக்குதலுக்கு திட்டமிட்டவர்கள் மற்றும் சதிகாரர்கள் யார் என்று விசாரணை நடத்தி, அவ்வாறு கண்டுபிடிக்கப்படும் திட்டமிட்டவர்கள் மற்றும் சதிகாரர்கள் யாராக இருந்தாலும் அவர்களைத் தண்டிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும்.

6. இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உயிருக்கும் உடமைக்கும் உரிய இழப்பீட்டு முறையை அறிமுகப்படுத்துவது, அவர்கள் சந்தித்த மனக் குழப்பத்தில் இருந்து அவர்களை விடுவிக்கக்கூடிய உளவியல் திட்டத்தை அறிமுகப்படுத்துவது,

7. இது தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு ஆணைக்குழுக்கள் மற்றும் ஏனைய விசாரணைகளின் மூலம் வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில் மேலும் பல விடயங்கள் ஆராயப்பட வேண்டியுள்ளதால், இவ்விடயத்தை மேலும் ஆராய்ந்து பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி வழங்க முழு அதிகார வரம்பைக் கொண்ட விசேட புலனாய்வுக் குழுவொன்று அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் மிகக் குறுகிய காலத்திற்குள் இந்தத் தாக்குதல்களை நடத்த சதி செய்தவர்கள் மற்றும் அதற்கு காரணமான தரப்பினருக்கு எதிராக பல்வேறு வழிகளில் நீதித்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதற்கான தண்டனைகள் வழங்கப்படும் என்று இலங்கை மக்கள், எந்த தயக்கமும் இன்றி தேசிய மக்கள் படையின் அரசாங்கத்தால் நாங்கள் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கும், குற்றவாளிகளுக்கும் எமது அரசாங்கத்தில் தகுந்த தண்டனை வழங்கப்படும் ; தேசிய மக்கள் சக்தி உறுதிமொழி வழங்கியது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கும்,  குற்றவாளிகளுக்கும் எமது அரசாங்கத்தில் தகுந்த தண்டனை வழங்கப்படும் ; தேசிய மக்கள் சக்தி உறுதிமொழி வழங்கியது. Reviewed by Madawala News on April 18, 2024 Rating: 5

தொழுகைக்கே முக்கியத்துவம் கொடுக்கும் சிறுவன் முஹம்மது மிஷால்.



தொழுகைக்கே முக்கியத்துவம் கொடுக்கும் சிறுவன்.
தொழுகைக்கே முக்கியத்துவம் கொடுக்கும் சிறுவன் முஹம்மது மிஷால். தொழுகைக்கே முக்கியத்துவம் கொடுக்கும் சிறுவன் முஹம்மது மிஷால். Reviewed by Madawala News on April 18, 2024 Rating: 5

உருவகப்படுத்தப்பட்ட செவ்வாய் பயணத்திற்கான குழுவில் இலங்கையை சேர்ந்த பியூமி இணைப்பு.



உருவகப்படுத்தப்பட்ட செவ்வாய் பயணத்திற்கான குழுவில், இலங்கையர் ஒருவரையும் அமெரிக்க விண்வெளி மையமான நாசா இணைத்துள்ளது.

ஹஸ்டனில் உள்ள நாசாவின் ஜோன்சன் விண்வெளி மையத்தில், அமைக்கப்பட்டுள்ள செவ்வாய் கிரகத்திற்கான உருவகத்துக்குள், வாழ்தல் மற்றும் பணிகளில் பங்கேற்க, ஒரு இலங்கையர் உட்பட நான்கு தன்னார்வலர்களைக் கொண்ட புதிய குழுவை நாசா தேர்ந்தெடுத்துள்ளது.

இதன்படி, ஜேசன் லீ, ஸ்டெபானி நவரோ, ஷரீஃப் அல் ரொமைதி மற்றும் இலங்கையரான பியூமி விஜேசேகர ஆகியோர் எதிர்வரும் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை, நாசாவின் மனித ஆய்வு ஆராய்ச்சி அமைப்பில் நுழையவுள்ளார்கள்.

உள்ளே நுழைந்தவுடன் இந்தக் குழுவினர், 45 நாட்கள் விண்வெளி வீரர்களைப் போல வாழ்ந்து, பணிகளில் ஈடுபட்ட பின்னர், ஜூன் 24ஆம் திகதி பூமிக்கு திரும்பிய வகையில் குறித்த உருவகத்தை விட்டு வெளியேறுவார்கள்.

விண்வெளி வீரர்களை, சந்திரன், செவ்வாய் மற்றும் அதற்கு அப்பால் ஆழமான விண்வெளி பயணங்களுக்கு அனுப்புவதற்கு முன்னர், அவர்களை எவ்வாறு தனிமைப்படுத்தல், அடைப்பு மற்றும் தொலைதூர நிலைமைகளுக்கு மாற்றியமைத்துக்கொள்வது என்பதை ஆய்வு செய்ய நாசா உதவுகிறது.

இந்த நிலையில், குறித்த ஆய்வில் பங்கேற்கும் இலங்கையரான பியூமி விஜேசேகர கலிபோர்னியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள நாசா அமெஸ் ஆராய்ச்சி மையத்தில் உள்ள கதிர்வீச்சு உயிரியல் இயற்பியல் ஆய்வகத்தில் முதுகலை ஆராய்ச்சி விஞ்ஞானி பட்டம் பெற்றவராவார்.

சென் டியாகோவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உயிர்மருத்துவப் பொறியியலில் தனது இளங்கலைப் பட்டத்தையும், பென்னில் உள்ள பிட்ஸ்பெர்க்கில் உள்ள கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் உயிரியல் மருத்துவப் பொறியியலில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களையும் பெற்றுள்ளார்.
உருவகப்படுத்தப்பட்ட செவ்வாய் பயணத்திற்கான குழுவில் இலங்கையை சேர்ந்த பியூமி இணைப்பு. உருவகப்படுத்தப்பட்ட செவ்வாய் பயணத்திற்கான குழுவில் இலங்கையை சேர்ந்த பியூமி இணைப்பு. Reviewed by Madawala News on April 18, 2024 Rating: 5

வளைகுடாவில் மூழ்கிய டேங்கர் கப்பலில் இருந்து 21 இலங்கையர்களை ஈரான் காப்பாற்றியது.



ஓமான் வளைகுடாவில் மூழ்கிய டேங்கர் கப்பலில் இருந்து 21 இலங்கை பணியாளர்களை மீட்டதாக ஈரானிய அதிகாரிகள் கூறியதாக அரச செய்தி நிறுவனமான IRNA புதன்கிழமை தெரிவித்துள்ளது.

பெயரிடப்படாத டேங்கர் புயல் காரணமாக ஈரானின் ஜாஸ்க் கடற்கரையிலிருந்து 30 மைல் (50 கிமீ) தொலைவில் சேதமடைந்ததாக அறிக்கை கூறியது.

ஐந்து பணியாளர்கள் ஜாஸ்க் அவசர சேவையிலிருந்து மருத்துவ உதவியைப் பெற்றனர் மற்றும் நல்ல உடல் நிலையில் உள்ளனர் என்று அறிக்கை மேலும் கூறியது.

மீட்பு எப்போது நடந்தது என்று கூறவில்லை
வளைகுடாவில் மூழ்கிய டேங்கர் கப்பலில் இருந்து 21 இலங்கையர்களை ஈரான் காப்பாற்றியது. வளைகுடாவில் மூழ்கிய டேங்கர் கப்பலில் இருந்து 21 இலங்கையர்களை ஈரான் காப்பாற்றியது. Reviewed by Madawala News on April 17, 2024 Rating: 5

பலத்த மழை காரணமாக அரநாயக்க - மாவனெல்லை பிரதான வீதியில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து முற்றாக தடை.



பலத்த மழை காரணமாக பிரதான வீதியில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அரநாயக்க - மாவனெல்லை பிரதான வீதியில் கப்பாகொடை பிரதேசத்தில் இவ்வாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

மரம் விழுந்ததில் உயர் அழுத்த மின்கம்பியும் சேதமடைந்துள்ளது.

பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதால் மாவனெல்லையில் இருந்து அரநாயக்க நோக்கி பயணிக்கும் மக்கள் அனைவரும் வெலிகல்ல ஊடாக உஸ்ஸாபிட்டிய வீதியை பயன்படுத்துமாறு மாவனெல்லை பொலிஸார் அறிவித்துள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
பலத்த மழை காரணமாக அரநாயக்க - மாவனெல்லை பிரதான வீதியில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து முற்றாக தடை. பலத்த மழை காரணமாக அரநாயக்க - மாவனெல்லை பிரதான வீதியில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து முற்றாக தடை. Reviewed by Madawala News on April 17, 2024 Rating: 5

பிறைக்குழுவை முன்னிறுத்தி சமூக ஒற்றுமையை சீரழிக்க சில சக்திகள் முயற்சிக்கிறது.



புனித நோன்புப்பெருநாளை கொண்டாடும் விதமாக ஸஹபான் மாத தலைபிறை பார்க்கும் நிகழ்வில் தீர்மானம் எடுப்பதில் இருந்த காலதாமதத்தை வைத்து முஸ்லிம் சமூகத்தினரை மீண்டும் பிளவுபடுத்தும் ஒப்பந்தச் சித்தாந்தங்களை விதைக்கும் ஒப்பந்தச் சிந்தனையாளர்களின் முயற்சிகளை மார்க்க, அரசியல் மற்றும் சிவில் தலைவர்கள் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும் என கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், ஜனாதிபதி செயலணி முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக கொழும்பு பெரிய பள்ளிவாசலை முன்னிறுத்தி பிறை பார்க்கும் பணியை எமது முன்னோர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். அதில் இஸ்லாமிய மாத சுட்டெண்னையும் மாதாந்தம் அவர்கள் கணித்து வருகிறார்கள். கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறை குழுவில் தற்போது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் அரசாங்கத்தின் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் அதன் வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உறுதியான மற்றும் நம்பகமான தீர்மானங்களை எடுப்பதில் உள்ள சில காலதாமதங்களை முன்வைத்து சில ஒப்பந்தச் சிந்தனையாளர்கள் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை சிதைத்து பிராந்திய மற்றும் பூகோள அரசியல் சதிகளை செய்ய முயற்சிக்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சில நாட்களாக சமூக ஊடகங்களில் கிழக்கு மாகாணத்தில் தனியாக பிறை பார்க்கும் குழு அமைக்கப்பட வேண்டும் என்று சிலர் பகிரங்கமாகவே கருத்துத் தெரிவித்து வருவதை பார்க்கும் போது சந்தேகம் வலுப்பெறுகிறது.

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடியிருந்த தேசிய பிறைக்குழு தனது அறிவிப்பை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் முன் சிலர் தமது சொந்த சமூக வலைத்தளங்களிலும் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் ஊடகங்களிலும் விமர்சித்திருந்தனர். சில சமூகவலைத்தள செயற்பாட்டாளர்கள் முந்திக்கொண்டு பிறை தொடர்பில் பிழையான தீர்மானத்தை சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பி முஸ்லிம் சமூகத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி, கொழும்பில் உள்ள பெரிய பள்ளிவாசல் மீதான பிறைக்குழுவை குற்றம் சாட்டி, முஸ்லிம் சமூகம் மத்தியில் கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கும் பிறைக்குழுவுக்கும் எதிரான கருத்தியலை உருவாக்கி வந்தனர். இதனூடாக முஸ்லிம் சமூகத்தினரிடம் பிளவுபடுத்தும் கருத்தியல் மனப்பான்மையை உருவாக்கி முஸ்லிம் சமூகத்திடம் பாகுபாட்டை உருவாக்குவதே அவர்களின் அடிப்படை நோக்கமாகும்.

கிழக்கிலும், தெற்கிலும், வடக்கிலும், மேற்கிலும் உள்ள முஸ்லிம்கள் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஒரு சக்தியாக ஒன்றிணைய வேண்டிய இந்த நேரத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் மதக் கருத்தியல் பிரிவுகள் மூலம் முஸ்லிம் சமூகத்தை பிளவுபடுத்தி, இந்த ஒப்பந்த பிரிவினைவாத சித்தாந்தங்கள் மற்றும் முஸ்லிங்கள் ஒருபோதும் சோரம்போக கூடாது. மட்டுமின்றி இந்த விடயங்களில் மார்க்க, அரசியல் மற்றும் சிவில் தலைவர்கள் ஒன்றிணைந்து ஒரே சமூக கட்டமைப்பாக செயல்பட வேண்டும் என்றார்.
பிறைக்குழுவை முன்னிறுத்தி சமூக ஒற்றுமையை சீரழிக்க சில சக்திகள் முயற்சிக்கிறது.  பிறைக்குழுவை முன்னிறுத்தி சமூக ஒற்றுமையை சீரழிக்க சில சக்திகள் முயற்சிக்கிறது. Reviewed by Madawala News on April 17, 2024 Rating: 5

கோலாகலமாக இடம்பெற்ற, பிரான்ஸ் வாழ் இலங்கையர்களின் விளையாட்டுப் போட்டிகள்.



அஸ்ஸலாமு அலைக்கும்!!!

நோன்புப் பெருநாளை முன்னிட்டு 11 ஆவது முறையாக இம்முறையும்
All blacks கழகம் ஏற்பாடு செய்திருந்த விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள் கடந்த 14/04/2024 ஞாயிறு அன்று பாரிஸ் la Courneuve நகரில் வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தன.

குறிப்பாக அணிக்கு 7 பேர் கொண்ட கிரிக்கெட் போட்டியும் சிறுவர்களை உற்சாகப் படுத்தும் விதமாக 15 மற்றும் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான உதைப்பந்தாட்ட போட்டியும் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தன.


வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கோப்பையும் ,பனபார்சீல்,பதக்கங்களும் வழங்கி சிறப்பிக்கப் பட்டது.

இந்த விளையாட்டு நிகழ்ச்சியை பார்த்து மகிழ பாரிஸ் நகரத்தில் வாழும் இலங்கை முஸ்லிம்கள் பெருமளவில் திரண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டி நிகழ்சியில்,
வெற்றிக்கோப்பயை R,R அணி தட்டிச் சென்றது.
இபோட்டில் சிறந்த துடுப்பாட்ட நாயகனாக MOHAMED ZANHAR தேர்ந்தர்ந்தெடுக்கப் பட்டார்.
இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாக RISHARD தேர்ந்தர்ந்தெடுக்கப் பட்டார்.

முழுப் போட்டியிலும் சிறந்த ஆட்ட நாயகனாக ABDUL SAKOOR தேர்ந்தெடுக்கப்பட்டார்.




கோலாகலமாக இடம்பெற்ற, பிரான்ஸ் வாழ் இலங்கையர்களின் விளையாட்டுப் போட்டிகள்.  கோலாகலமாக இடம்பெற்ற, பிரான்ஸ் வாழ் இலங்கையர்களின் விளையாட்டுப் போட்டிகள். Reviewed by Madawala News on April 17, 2024 Rating: 5

ஏப்ரல் 10 ஆம் திகதி நோன்பு பெருநாள் தினத்தை விசேட விடுமுறையாக பிரகடனப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை.



ஏப்ரல் 10 நோன்பு பெருநாள் தினத்தை விசேட விடுமுறையாக பிரகடனப்படுத்துமாறு அரசாங்க பொது சேவைகள் சங்கம் கோரிக்கை...!!!

நூருல் ஹுதா உமர்

முஸ்லிம்களின் புனித நோன்பு பெருநாள் தினமான ஏப்ரல் 10 ஆம் திகதியை இலங்கையில் விசேட விடுமுறையாக பிரகடனப்படுத்துமாறு இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது


இது தொடர்பாக இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ புஹாது பொது நிர்வாக உள்நாட்டு அலுவலர்கள் அமைச்சர்க்கு இன்று 2024.04.17 அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்,


இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் அனைவரும் புனித ரமலான் நோன்பு பெருநாளை தமது மத கலாச்சார விழுமியங்களுக்கு அமைவாக ஏப்ரல் 10-ஆம் தேதி கொண்டாடினர்.


இத்தினம் அரச அலுவலக வேலை நாளாக உள்ளமையினால் குறித்த தினம் சொந்த விடுமுறையில் பெரு நாளை கொண்டாட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்


இந்த நிலையை கருத்திற் கொண்டு இலங்கை முஸ்லிம்களின் புனித நோன்பு பெருநாள் தினமான ஏப்ரல் 10 திகதியை முஸ்லிம் அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஏப்ரல் 10 ஆம் திகதி நோன்பு பெருநாள் தினத்தை விசேட விடுமுறையாக பிரகடனப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை. ஏப்ரல் 10 ஆம் திகதி நோன்பு பெருநாள் தினத்தை விசேட விடுமுறையாக பிரகடனப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை. Reviewed by Madawala News on April 17, 2024 Rating: 5

VIDEO > கோட்டாபய ராஜபக்ஷ வைத்திருந்த ரேஞ்ச் ரோவர் வாகனத்தை மொடல் அழகி பியூமி ஹன்சமலி வைத்திருப்பது எப்படி?



முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னர் பயன்படுத்திய ரேஞ்ச் ரோவர் வாகனத்தை மொடல் அழகி பியூமி ஹன்சமலி பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி Mage Rata (எனது நாடு) அமைப்பின் தலைவர் சஞ்சய மஹவத்த சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவில் இன்று (17) முறைப்பாடு செய்துள்ளார்.

"தேர்தல் நெருங்கிவிட்டது என்பது தெளிவாகிறது, அரசியல்வாதிகள் தாம் சேமித்த கருப்புப் பணத்தை வரவிருக்கும் தேர்தல் பிரசாரங்களில் புகுத்த முனைகிறார்கள், மேலும் இது பணமோசடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களுக்கு நல்ல காலமாக மாறியுள்ளது.

அதன்படி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்திய ரேஞ்ச் ரோவர் வாகனத்தை (CBH 1949) பியூமி ஹன்சமாலி எவ்வாறு பெற முடிந்தது என்பதில் எங்களுக்கு சில சந்தேகங்கள் உள்ளன.

"ரேஞ்ச் ரோவர் வாகனம் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டதா அல்லது கோட்டாபயவால் பியூமிக்கு வழங்கப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது," என்று மஹவத்த மேலும் கூறினார், மேலும் அந்த மொடல் தற்போது ஒரு அதி சொகுசு குடியிருப்பில் வசிப்பதாகவும், பிற சொத்துக்களை வைத்திருப்பதாகவும், மிகவும் ஆடம்பரமான வாழ்க்கை முறையை நடத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.

எனவே, அரசியல்வாதிகளின் கறுப்புப் பணத்துடன் தொடர்புடைய பணமோசடி நடவடிக்கைகளுக்கு பியூமி ஹன்சமாலி பயன்படுத்தப்படுகிறார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

"எனவே, நாங்கள் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளோம். முதற்கட்ட முறைப்பாடு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் தொடர்புடைய ரேஞ்ச் ரோவர் வாகனம் மற்றும் பியூமி ஹன்சமாலிக்கு மாற்றப்பட்டது.

இந்த வாகனத்தின் பெறுமதி 100 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. பியூமி ஹன்சமாலியின் வசம் இந்த வாகனம் எப்படி வந்தது, அதன் பரிமாற்றத்திற்கான காரணங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த அவரால் எப்படி இவ்வளவு மதிப்புமிக்க சொத்தை வாங்க முடிந்தது என்பது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

"தங்கள் வாழ்வாதாரத்திற்காக அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்வதை நம்பியிருக்கும் பல நபர்களை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன். ஆனால் அவர்கள் தங்கள் அன்றாடச் செலவுகளை அவர்களின் சுமாரான வருமானத்தில் ஈடுகட்டப் போராடுகிறார்கள். இருப்பினும், பியூமி ஹன்சமாலி தினமும் லட்சக்கணக்கான ரூபாய்களை செலவழித்து, ஆடம்பரமான வாழ்க்கை முறையை வழிநடத்துவதாகக் கூறப்படுகிறது.

"தேர்தல் பிரச்சாரங்களின் போது அரசியல்வாதிகளின் ஊதாரித்தனமான செலவுகள் மற்றும் பணமோசடி நடவடிக்கைகளில் அவர்களின் சாத்தியமான ஈடுபாடுகள் குறித்து Mage Rata அமைப்பு விழிப்புடன் உள்ளது," என்று அவர் கூறினார்.

"எனவே, இந்த முறைப்பாடு மீதான உடனடி விசாரணையை நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.
VIDEO > கோட்டாபய ராஜபக்ஷ வைத்திருந்த ரேஞ்ச் ரோவர் வாகனத்தை மொடல் அழகி பியூமி ஹன்சமலி வைத்திருப்பது எப்படி? VIDEO > கோட்டாபய ராஜபக்ஷ வைத்திருந்த ரேஞ்ச் ரோவர் வாகனத்தை மொடல் அழகி பியூமி ஹன்சமலி வைத்திருப்பது எப்படி? Reviewed by Madawala News on April 17, 2024 Rating: 5

பொலன்னறுவை இசைக்குழுவினர் சென்ற வேன், கால்வாயில் வீழ்ந்து விபத்து.



பொலன்னறுவை எஃபெக்ட் இசைக்குழுவினரை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று கால்வாயில் வீழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.


இந்த விபத்தில் இசைக்குழுவினர் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற போதிலும், வேன் சேதமடைந்துள்ளது.


பல கச்சேரிகளில் பங்குபற்றியமையால் ஏற்பட்ட அதீத களைப்பு காரணமாக அதே இசைக்குழுவின் கலைஞர் ஒருவர் வேனை ஓட்டிச் சென்ற நிலையில், உறங்கியதாலும் இந்த விபத்து நேர்ந்ததாக பொலன்னறுவை எஃபெக்ட் இசைக்குழுவினர் தெரிவித்தனர்.


இன்று அதிகாலை பொலன்னறுவை ஓனேகம மெதமலுவ பிரதேசத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
பொலன்னறுவை இசைக்குழுவினர் சென்ற வேன், கால்வாயில் வீழ்ந்து விபத்து. பொலன்னறுவை இசைக்குழுவினர் சென்ற வேன், கால்வாயில் வீழ்ந்து விபத்து. Reviewed by Madawala News on April 17, 2024 Rating: 5
Powered by Blogger.